இ ன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன்.
( அல்லோவ்வ்.... விண்டோவ க்ளோஸ் பண்ணினாக் கொண்ணே புடுவேன்!)
தம்மாத்துண்டு கதை தாங்க... படிச்சிட்டு கமெண்ட் போடுங்க!
இந்த கதை சொல்லவேண்டிய அவசியத்தை கதை முடிவில் சொல்கிறேன்.
ஸோ கதை
வானமளவு யோசிப்போம்.!!
ஒரு குளவி 'ZZZZ ZZZ' என்று ஒரு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய காளை மாட்டை பார்த்தது. சீவிய கொம்பும், திமிலும், கழுத்து மணியுமாக நிதானமாக புல் மேய்ந்து, அரைத்து, அரைத்து... அவ்வப்போது 'முஷ்...உஷ்..' என்று மூச்சுவிட்டுக்கொண்டு, காலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தது கம்பீரக்காளை.!!! குளவி அதனருகில் சென்று அதன் கவனத்தை ஈர்க்க எண்ணி கண்ணுக்கு முன்னால் இங்குமங்கும் வட்ட வடிவிலும், எஸ் வடிவிலும் அட்டகாசமாகப் பறந்து சுற்றி வந்து.....
"மாண்புமிகு திருவாளர் காளையர் அவர்களே.... நான் பறப்பது உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள் உடனே விலகி விடுகிறேன்" என்றது.
காளை ஒரு கண்ணிமையைச் சற்று பெரிதாகதிறந்து குளவியைப் பார்த்தது.
"அடேய் சின்னைப்பையா.... நீ இருந்தாலும் ஒன்று தான்.. பறந்தாலும் ஒன்றுதான். நீ இப்போது பேசியதால் தான் நீ இருப்பதையே கவனிக்க முடிந்தது. இதுவரை நீ இருந்தது கூட எனக்கு தெரியாது" என்று சொல்லி "உஷ்" என்று மூச்சு விட்டது. அந்த உஷ்ணத்தில், மூச்சு வேகத்தில் குளவி தள்ளப்பட்டு ஒரு மரத்தில் மோதிக்கொண்டு இறக்கை இழந்தது.
இந்த கதையின் மோரல் என்னான்னா....
"மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்!" அப்பிடிங்கிறது தான்.
எனவே,
எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!
டிஸ்கி: இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)
டிஸ்கி 2: நமீதா படம் போடாமலையே உங்கள படிக்க வச்சிட்டனே...அய்..அய்....
டிஸ்கி 3: வானமளவு யோசிப்போம்'ங்கிற வார்த்தை "ஒவ்வொரு பூக்களுமே..."பாட்டுல வர்ர லிரிக்ஸ்'னு உங்க எல்லோருக்குமே தெரியும். (எனக்கும் தெரியும்!!)
பதிவு புடிச்சிருக்கா? மறக்காம குத்திட்டு போங்க... ஓட்டு....ஓட்டு!!