நண்பர்ஸ்..

Saturday, March 19, 2011

தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

தேர்தல் பீவர் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த சமயத்துல உங்களுக்கெல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே கன்பியூசனா இருக்கும்....
கவலய விடுங்க.... அதுக்கு நான் சில ஐடியா தர்ரேன்......


ஓட்டு போடுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை.....


1)மொதல்ல.... உங்கள் ஏரியாவுக்கு பணம் பட்டுவாடா ஆகிடுச்சானு பாக்கனும்.....

2)உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்....

3)உங்களை விட வேறு யாருக்கேனும் அதிகமாக பணம் கிடைக்கிறதா எனவும் பார்க்கவும்...


4)எந்த கட்சி என்ன இலவசம் தருகிறது என லிஸ்ட் போட்டு கணக்கிட்டுக்கொள்ளவும்....
5)பின்பு அந்த லிஸ்ட்'டை சரிபார்த்து, எந்த கட்சி அதிகமாக இலவசங்கள் தருகிறதோ அந்த கட்சிக்கு குத்தவும் ஓட்டை. (பி.கு.- லிஸ்ட்'டில் கம்பியூட்டர், பைக்குகள் இருந்தால் அக்கட்ட்சிக்கு கண்ணை மூடிக்
கொண்டு குத்தவும்....)

6)கடந்த ஆட்சியின் ஊழல்கள் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்காதிங்க... பின்னாடி ஓட்டு போட வரும்போது கான்ஸ்ஸன்ரேஷன் மிஸ் ஆகும்!!7)இலங்கை தமிழனுக்காக அதிகம் யார் குரல் கொடுத்தது பத்தியெல்லாம் யோசிக்க தேவையில்ல...... அது நமக்கு தேவையுமில்ல......


8)""இலவசம் குடுக்குற கட்சிக்கு ஓட்டு போடாதே.... யாரு வேலைவாய்ப்பு,விலைவாசி, தமிழ் நாட்டின் எதிர்காலம் பத்தியெல்லாம் கவலைப்படுறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடு""னு உங்க பிரண்டு கூற நேரிடும்.... நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....
.

9)"ஊழல் இல்லா ஆட்சி அமைப்போம்!" என உதார் விடும் கட்சியை கழட்டி விட்டுடுங்க....

10)முக்கியமா வேட்பாளர் உங்க வீட்டுக்கு வந்தப்போ யாரு நல்லா கால்ல விழுந்து ஓட்டு கேட்டாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்.... தப்பில்ல! ( நல்ல டியோட்ரண்ட் வாசம் வந்திருந்திச்சின்னா, ஓட்டை ரெண்டா குத்திடுங்க....)

11)கவனிக்கவும்: வாட்டர் 20 ரூபாயா இருந்தா பரவால்ல.... குவாட்டர் விலை குறைப்பானுகளா?னு கேட்டு வச்சிக்குங்க......12)அரிசி 80 பைசாக்கு தர்ரோம்'னு எந்த கட்சி சொன்னாலும், ஓட்டு போடுவதற்கு தயங்காதிங்க.....( வெங்காயம் 100 ரூபாவாவே இருந்திட்டு போகட்டும்! அதனால நமெக்கென்ன நஷ்ட்டம்...???)

அவ்ளோ தான்.....
அப்புறமென்ன... உங்களுக்கேத்த கட்சிய தேர்ந்தெடுத்தாச்சா? நச்சுன்


னு குத்துங்க ஒரு குத்து.... (ஏது.... நீங்க எதிர்பாத்த தகுதிகளோட ரெண்டு மூனு கட்சி வருதா?....ம்ம்ம்.... என்ன பண்ணலாம்.... ஆங் ஐடியா..... அவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு அங்க ஒரு குத்து!
இவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு இங்க ஒரு குத்து... பதிவு புடிச்சிருந்தா இண்டிலில எனக்கொரு குத்து...ப்ளீஸ்!)

டிஸ்கி: டைட்டிலுக்கும் சப்ஜெக்ட்கும் சம்பந்தம் இருக்கிறதால.... காமெடி பதிவர்களின் விதிய மீறி செயல்பட்டதுக்காக எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்...!

டிஸ்கி: நமீதா பத்தி எதுவுமே எழுதாதிற்கும் மன்ச்சிக்கொங்கோகோவ்வ்.....18 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொத இரவு........ சாரி சாரி..... வட எனக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

யோவ் ஒழுங்கா சொல்லுய்யா! ஆட்சியா? ஆச்சியா? நீ வேணும் னும் போட்டிருப்பே!

கும்மாச்சி said...

அண்ணாச்சி க்வார்டார் விலையை குறைக்கிற கட்சிக்குத்தான் நம்ம ஓட்டு. நமீதா படம் போட்டு தலைவியைப் பற்றி எழுதாத உமக்கு 49|O தான்.

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

யோவ் ஒழுங்கா சொல்லுய்யா! ஆட்சியா? ஆச்சியா? நீ வேணும் னும் போட்டிருப்பே///வேனும்னு தாம்லே போட்டேன்..... விவேக் ஸார் ஒரு டி.வி சானல்ல நியூஸ் படிச்சு காமிப்பாரே...... அந்த காமெடில இருந்து சுட்டது.....

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீதும் நானே வந்தேன்..

டக்கால்டி said...

சரி இப்போ திட்டுறீங்களா?இல்லை உண்மையாலுமே ரோசனை கொடுக்குறீங்களா?

டக்கால்டி said...

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.

விக்கி உலகம் said...

அப்படி போடு மச்சி அருவாள சாரிபா ஓட்ட ஹிஹி!

அந்த பன்னு சாரிபா பொண்ணு யாரு எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கு ஹிஹி!

Jawahar said...

//நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....//

:)

அது போகட்டும், ச்சீ, அங்க போய் பின் அப் பண்றதா.... காத்தெல்லாம் புஸ்ஸ்ஸுன்னு இறங்கிடாது?

http://kgjawarlal.wordpress.com

! சிவகுமார் ! said...

//உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்//

கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் நவீன மிசின்... உடனே வாங்க வேண்டும்.

சரியில்ல....... said...

டக்கால்டி said...
வந்தேன் வந்தேன் மீதும் நானே வந்தேன்///வளர நன்றிகளானு.....ஸாரே....!

சரியில்ல....... said...

விக்கி உலகம் said...
அப்படி போடு மச்சி அருவாள சாரிபா ஓட்ட ஹிஹி!

அந்த பன்னு சாரிபா பொண்ணு யாரு எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கு ஹிஹி////


வாங்க விக்கி ஸார்.... என்ன கேட்டிங்க? ஓ... அந்த பொண்ணா... அது பேரு நமீதா..... முன்னொரு காலத்துல பெரிய நடிகை... பாவம் இப்போ ஓ.வ. நா'னு ஒருத்தர் வச்சி கஞ்சி ஊத்திட்டிருக்காரு.......

சரியில்ல....... said...

Jawahar said...
//நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....//

:)

அது போகட்டும், ச்சீ, அங்க போய் பின் அப் பண்றதா.... காத்தெல்லாம் புஸ்ஸ்ஸுன்னு இறங்கிடாது?////


ஒத்துக்கிறேன்.! வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் பெரிய நன்றி.....

சரியில்ல....... said...

! சிவகுமார் ! said...
//உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்//

கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் நவீன மிசின்... உடனே வாங்க வேண்டும்//அட... யார் கண்டா..... இந்த எலெக்க்ஸன்'ல அதயும் பிரீயா குடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.... (வருகைக்கு நன்றிகள்.)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் நமீதா ரொம்ப மெலிஞ்சிருக்கு? என்ன பண்ணீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////2)உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்....///////

இதுல கன்பர்ம் பண்ண என்ன இருக்கு? அது கள்ள நோட்டுதான், அதுக்குத்தான் பொருளாவே வாங்கிக்கனும்.... தெரியுதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரியில்ல....... said...
விக்கி உலகம் said...
அப்படி போடு மச்சி அருவாள சாரிபா ஓட்ட ஹிஹி!

அந்த பன்னு சாரிபா பொண்ணு யாரு எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கு ஹிஹி////


வாங்க விக்கி ஸார்.... என்ன கேட்டிங்க? ஓ... அந்த பொண்ணா... அது பேரு நமீதா..... முன்னொரு காலத்துல பெரிய நடிகை... பாவம் இப்போ ஓ.வ. நா'னு ஒருத்தர் வச்சி கஞ்சி ஊத்திட்டிருக்காரு.......///////

இப்படியெல்லாம் ஆபாசமா பேசப்படாது தம்பி....!

சரியில்ல....... said...

இப்படியெல்லாம் ஆபாசமா பேசப்படாது தம்பி....!////

அட.. நல்லா இருக்குறவனையும் கெடுத்து வச்சிருவிங்க போலையே... நாராயணா.. எல்லாம் உன்னால தான்... எலேய் மக்கா.... அவன புடிச்சி மரத்துல கட்டி வைங்கையா..