நண்பர்ஸ்..

Thursday, April 21, 2011

என்மேல் விழுந்த மழைத்துளியே....!!!!

எஸ்.ஏ. ராஜ்குமார் னு பேரவச்சுக்கிட்டா கட்டுரைதான் எழுதணும்'னு இல்ல... அவர் இசையமைப்பாளராவே   இருந்துக்கலாம்.. #கண்டுபிடிப்பு.

பெரும்பாலான படங்களை பல நேரங்களில்  தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி..   

 
 என்மேல் விழுந்த மழைத்துளியே.....
 
 ன் காதலை அவளிடம் தெரிவித்து நான்கு நாட்கள் ஆகிறது...
 பதில் சொல்வதற்கு அவள் கேட்டிருந்த நான்கு நாட்கள் இன்றோடு முடிகிறது... இன்று மாலை என்னை சந்திப்பதாக கூறியிருந்தாள்.. எனக்கு இன்று வாழ்க்கை பரீட்சையின் முடிவு வெளியாகும் நாள்.
   "என் காதலி ஒன்றும் தேவதை  இல்லை சுமாரான அழகு  தான்..." என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது... கேட்டால் எதார்த்தமான காதலாம்..
போங்கயா.. ரசனை கெட்டவங்களா... நான் அப்படி சொல்லமாட்டேன்..
 என் காதலி தேவதை. அழகு தேவதை.. அன்பு தேவதை..

என் முன்று வருட தோழி.. என் கூட பள்ளியில் படித்தவள்.. பெயர்  நிலானி.
(தமிழ் பெயர் தான்.)  பக்கத்து தெருவில் வசித்தாலும் ஒன்றாக ஒரே பள்ளிக்கு மிதிவண்டியில்  செல்வோம் .. ஒன்றாகவே மாலையில் வீடு திரும்பி..,  மாலை வகுப்புக்களுக்கு செல்வோம்.. அம்மா கடைக்கு மளிகை வாங்க  அனுப்பினாலும் அவளின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைக்கு தான் செல்வேன். சண்டை போட்டுக்கொண்ட நாட்கள் அறவே கிடையாது.. அவள் சண்டைபோட ஆரம்பித்தாலும் நான் விலகிக்கொள்வேன்.. எதிர்த்து பேசுவது இல்லை.. காரணம் நான் சண்டை போடுவதை விரும்புவதில்லை .. அவள் கோவமாக திட்டினாலும் நான் ஹிஹிஹி.. என்பதோடு நிறுத்திக்கொள்வேன் ..  திட்டும் போதுகூட அவள் கொள்ளை அழகு..
பள்ளிகாலம் முடிந்ததும் அவள் ஒரு மருந்துக்கடையில் தற்காலிகமாக வேலையில்  சேர்ந்தாள். எனக்கோ வேலை:, புதிய தொலைபேசி இணைப்புகள் விற்கவேண்டும்..
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள்,
 என் வீட்டு கதவு தட்டப்படுவது கேட்டு , திறந்து பார்த்தேன்..இரவு எட்டு மணி.
 முற்றத்தில், பௌர்ணமி வெளிச்சத்தில் நிலானி நின்றுகொண்டிருந்தாள்..
முதல் தடவை இரவில் வந்திருக்கிறாள். எதிர்பார்க்கவில்லை. வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தாள். அதுசரி தேவதை என்றால் வெள்ளையில்  தானே இருக்கவேண்டும்..
நிலா வெளிச்சத்தில்  நிலானி வெளிச்சம்.. முதல் தடவை காதல் எட்டிப்பார்த்தது..
. அதுவரை அவள் மேல் காதல் வந்திருக்கவில்லை..அந்த எட்டு மணி என்னை என்ன செய்தது என்று தெரியவில்லை.. வயிற்றில் தேன் கூட்டை கலைத்து விட்டது போன்ற உணர்வு .. அவள் நேராக என்னுடைய தங்கையிடம் வந்து, காதில் எதோ சொல்லிவிட்டு, என் அம்மாவிடமும் எதோ காதில் கூறினாள்., என்னிடமும் வந்து கூறுவாள் என்று எதிர்பார்த்தால் , அது தான் இல்லை..  அப்படியே என்னை பார்த்து ஒரு சிறிய புன்னகையை வீசிவிட்டு இடத்தை விட்டு நகரலானால். ஐயோ போறாளே என்று மனசு அடித்துக்கொண்டது..  அம்மாவிடம் அவள் என்ன கூறினாள் என்று கேட்டுக்கொள்ளவில்லை.. அவள் என்னிடம் கூறாமல் சென்றதால்தான் காதல் வந்தது.. அது ரகசியமாகவே இருக்கட்டும்.
   பின்பு அடிக்கடி தலைவலி, காய்ச்சல் எல்லாம் வர ஆரம்பித்தது....(வரவைத்துக்கொள்வேன்,..) நானே அவளின் கடைக்கு சென்று மாத்திரைகளை  வாங்கி வருவேன்..  "உங்கள் கடையில் ஏன் சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் விற்பதில்லை?" என்று ஒரு நாள் அவளை பார்த்து  கேட்டதற்கு, அவள் ஒரு கணம் திகைத்து, சிரித்து .. ... ..

......
          ........................அதெல்லாம் இருக்கட்டும்., இன்று எனக்கு அவளின் முடிவை கேட்க வேண்டும், வாருங்கள் அங்கே போகலாம்.
சென்னையில் பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த வணிக வளாகத்தில், ஒரு குளிர்கழி விற்பனை கடையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
மாலை. மணி  நான்கு ஆகிவிட்டால் மாலையா மதியமா? (உம்ம்ம் எல்லாம் காதல் படுத்தும் பாடு)

 கடிகாரத்தை நாற்பது தடவை பார்த்துவிட்டேன். அந்த மணி முள்ளிற்கு என்மேல் என்ன வெறுப்போ தெரியவில்லை, வேகமாக ஓடித்தொலையமாட்டேன்  என்கிறது,.. என்கையில் தாராளமாக பணமும், போதாதிற்கு கடனட்டையும் உள்ளது. அவளுக்கு பிடித்த எல்லாப்பொருட்களையும் வாங்கி கை நிறைய கொடுக்கவேண்டும்..

 என்னுடைய தொலைபேசியின் தொடுதிரையில் என்ன செய்கிறது என் விரல்கள்?  என் கண்கள் எங்கெல்லாமோ சென்று வருகிறது.. பதட்டம். பரபரப்பு... காணவில்லையே.. மணி இன்னுமா ஐந்தாகவில்லை? சிறிய  முள்ளு நான்கிலும், பெரிய முள்ளு ஆறிலும் இருந்தால்.... மணி ஐந்துதானே?...... இல்லையா?

தோ காற்று வீசுகிறது.. எனக்கு இரத்தம் உறைகிறது... என் தலைமுடி காற்றில் கலைகிறது.. உள்ளங்கையில்  வியர்க்கிறது... திரும்பிக்கொள்கிறேன்... மீண்டும் திரும்பி வாசலை பார்க்கிறேன். சிறுநீர் பை நிரம்பிவிட்டதாக மூளை குறுந்தகவல் அனுப்புகிறது..  .. வாசலில்
தேவதை.
  என் நிலானி... என் நிலா  நீ!!    ( இது எங்கிருந்து வந்தது..??)
 "ஹாய்..." என்றேன் சின்னதாய் கைகளை காட்டி.
நமக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையில்.. ஏகப்பட்ட ர்கொத்துள்.. எல்லாமே நான் வாங்கி வைத்தவை.
எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்..
அவளின் பார்வை, என்கண்களை குடைந்து சென்று  மூளையில் உள்ள சில நினைவு பதிவுகளை  செயலிழக்கச் செய்தது....

"எப்பிடி இருக்க?" அவள் பேசுகிறாள் தானே...? சந்தேகம் அவள் பாடுகிறாளா என்று.

 "நான் நன்றாக இருக்கிறேன்.." மேலும் சில சம்பாசனைகளின் பின்பு, எனக்கு அந்த பதில் கிடைத்தது.

 என்ன பதில்?

01 ) "நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?

02 ) "எனக்கு உன்னை பிடிக்கவில்லை"

03 ) "நான் இரவெல்லாம் யோசித்ததில், நானும் உன்னை காதலிக்கிறேன் என்று  நினைக்கிறேன்.. "

04 )"எனக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னை மறந்திடு."

05 ) " நான்  உன்னை காதலிக்கவில்லை !!"


எந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அல்லது எனக்கு என்ன பதில் கிடைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள்?

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

 டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.

Thursday, April 14, 2011

சங்கி..மங்கி சைனீஸ்...!!!

 இன்று என் ஷோரும்'கு   இரண்டு சைனீஸ் பிகர்ஸ்..  வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்..? வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே  வருவாங்க...)

மூனேமுக்கா  அடில ஒண்ணும்.., நாலற அடில ஒண்ணும். சுமாரான பிகர் தான்.. நம்ம கடைக்கு அதுவே போதும்..
நேரா என்கிட்ட வந்து...

 "மங் சுங் கிங்கிசாங்?"

  ம்ஊக்கும்ம்ம்.....நமக்கு தமிழே ததுங்கினத்தோம்.. இதுல சைனீஸ் வேறையா....

."மண்ணெண்ணெய் எல்லாம் விக்குறதில்ல.." இது நான்...

"மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...நொங்குநா???"
"இந்தாடி..ஒன்னு தமிழ்ல பேசு..இல்ல இங்கிலீஷ்'ல பேசு..சைனீஸ் மாலும் நகி.."

 "மாஞ்சி... ஜிகிஞ் கஞ்சு கானூ...."

 "அட சிறுக்கி.. ஆ யூ கம்பெட்டபிள்  வித் இங்கிலீஷ்?

   "ங்க்சுக்கின் மங்கு.."

     அந்த பொண்ணுங்க செல்போனை காட்டி.. பணத்தையும்  காட்டி இரண்டுக்கும் கனெக்சன் கொடுத்து காமித்தது..
கண்டுபுடிச்சுட்டேன்..இந்த ... இண்டு பொண்ணுங்களுக்கும் ரீ-சார்ச் பண்ணனுமாம்..."அட லூசு பொண்ணுங்களா... அத போயி செல்போன் கடைல கேளுங்க..இது டி.வி கடை.."
"மாஞ்சுங் ஈயர்டல் போடு கொங்க்ஜ்குஜாங்? 
 அந்த பொண்ணு வெளியில் தொங்கிக்கொண்டிருந்த ஏர்டெல் போர்டு வை கை காட்டியதும்..புரிந்து போனது.......
"அது ஏர்டெல் டி.டி.ஹெஜ் போர்டு..."
"மாஞ்சுங்?" (கையை நீட்டி  'என்ன"' என்பது போல் கேட்டாள்.. )
  "மூதேவி.. இது டி.வி கடை.   ரீ -சார்ச் கடை அந்த முக்குல இருக்கு போய் பண்ணிக்கோ.."

 அந்த பொண்ணுங்க முஞ்சி திடீர்னு மாறிவிட்டது.. கோபத்துடன் ஒருத்தி முறைத்தாள்...

  ஆத்தாடி.. ஒரு வேளை புரிஞ்சுடிச்சோ? முதேவின்னா சைனிஸ்லயும் கெட்ட வார்த்தையோ? இதுங்களுக்கு கராத்தே தெரிஞ்சிருக்குமோ?  பாத்தா அப்பிடி தெரியலியே?  ஒருவேளை  அடிவாங்கினால்தான் தெரியுமோ.. சமாளிடா சமாளி..  உள்மனது  நடுநடுங்கியது..

 ஆரம்பித்தேன்..

 "மாங்கிச்சாங் நொங்கு? என்றேன்..
   அந்த பெண் மீண்டும் முறைத்தாள்... ஒர்க்கவுட் ஆகலியே..போச்சுடா...
அந்த பெண் மீண்டும் "மான்கிச்சாங் மக்க்குநீச்ங்.." என்றாள்.. திட்டுறாளோ?
"அடி போங்கடி.." என்று அலுத்துக்கொண்டு, அவ்விடத்தை விட்டு நகருகையில்...

"ஒரு நிமிஷம் சார்.." என்றாள் அந்த சைனீஸ் பிகர்.. அட தமிழ் வருது.. இத முன்னமே பண்ணிருக்கலாமே..
"தமிழ் தெரியுமா? இத முன்னமே  பேசியிருக்கலாமே? சொல்லுங்க என்ன வேணும்?

"எங்களுக்கு    டி.டி.ஹெஜ்  தான் வேணும்.. கிடைக்குமா ??"

ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே பில் பண்ணிக்கொண்டேன்.. அதன் பின்பு முழுக்க முழுக்க தமிழ்லயே பேசினார்கள் இருவரும்..... பின்பு அந்த பொண்ணுங்க கிளம்பும் போது.. ஒருத்தி..,

"தமிழ் கத்துக்கிறது கஷ்டம்...   சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப  ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்.. "ரொம்ப  ஸாரி கேர்ள்ஸ்..!!!" .

 டிஸ்கி: சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல...!!

Tuesday, April 12, 2011

இரத்தப்படலம்.... ஒரு கலக்கல் காமிக்ஸ்..!!!

முன் அட்டைப்படம்...

 நமது ஹீரோவுக்கு  "மண்டையில் துளை போட்டு தோட்டாவை உள்ளே அனுப்பிய மகா பாதகன் யார்?" என்று கண்டு பிடிக்க வேண்டிய நிலை.. ஆனால் உள்ளே போன தோட்டா,அவனது நினைவுகள்   சேகரித்து வைத்திருக்கும் மூளையின் ஒரு பகுதியை துருப்பிடிக்கச் செய்துவிட்டது.... தன்னை நோக்கி நீட்டிய துப்பாக்கியின் விசையை யார், எதற்காக அழுத்தினான் என்ற கேள்விக்கு பதில் ஹீரோவிடம் இல்லை... தான் யார்,  ஊரு,பேரு, தெரியாத வளர்ந்துவிட்ட குழந்தை நம் ஹீரோ..... பின்பு ஜனாதிபதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி நமது ஹீரோ என்று தெரியவரும் போது சூடு பிடிக்கும் "இரத்தப்படலம்", அடுத்த 800 பக்கங்களிலும் பர..பர...
   

   லகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய  நமது ஹீரோ  "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக  இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில்  ரீ-என்ட்ரி  ஆகியிருக்கிறார்..

  ட்டுக்கடங்கா கதாப்பாத்திரங்கள்,  வெவ்வேறு கதைக்களம், வெவேறு நாட்டின் கலாச்சாரம் என ஒரு மகா, மெகா படைப்பின் உழைப்பு சாதாரணமானதல்ல..
 இங்கு நீங்கள் இரு ஜாம்பவான்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.. ஒன்று  கதாசிரியர் 'ஷான் வான் ஹாமே' இன்னொன்று  ஓவியர் 'வில்லியம் வான்ஸ்'.

'ஷான் வான் ஹாமே'
 தொழில் நிர்வாக படிப்பை முடித்துக்கொண்டு  எழுத்தாளராக பணியாற்றி வரும் பொழுதே ஒரு சில திரைப்படங்களிலும் வேலை பார்க்க தொடங்கினார்..
1984 'ல் இவருக்கு  "ராபட் லட்லாமின் " அவர்களின் நாவல் ஒன்றின் பாதிப்பில் தோன்றிய  'இரத்தப்படலம்' பின்னாட்களில் அவருக்கு பெரும் புகழும், பணமும் , விருதுகளும் வாங்கிக்குவித்தன....

தன் பின்னணியில், இவரின்  XIII என்ற  கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ஓவியர்  'வில்லியம் வான்ஸ்' மிக முக்கியமானவர்.

'வில்லியம் வான்ஸ்'.

1935 'ல் பிறந்திட்ட இவர்,  பிரெஞ்ச் காமிக்ஸ்  உலகின் முக்கியமான ஓவியராக திகழ்ந்துகொண்டிருக்கும் பொழுது  ( முதலைபடையினர், சாகச  வீரர் ரோஜர் ) 1984 'ல் இவர் வீட்டின் கதவை தட்டினார் கதாசிரியர் வான் ஹாமே.

 ந்த சந்திப்பு தான் பின்னாட்களில் இரத்தப்படலம் 18  பாகங்கள் வெளிவந்து மற்ற ஹீரோக்களுக்கு ஓய்வு கொடுக்கச்செய்தார்கள்.....
பின் அட்டையில்...
 காதல், நட்பு, சோகம், அழுகை, தவிப்பு, துரோகம், வஞ்சம், பழி... என ஒரு காமிக்ஸில் அனைத்து உணர்வுகளையும் ஒருசேர கொண்டுவந்த ஒரே கதை இதுவாகத்தானிருக்கும்..

 இதெற்கெல்லாம் மேலாக நமது லயன்.
   இக்கதையின் படைப்பாளர்களே 'இரத்தப்படலத்தை பாகம் பாகமாக வெளியிட,  நமது லயன் காமிக்ஸ் நிறுவனத்தினரோ செம தில்லாக...  ராட்சச  இதழாக 850 பக்கங்களில் வெளியிட்டது.. இந்த புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் மட்டுமே  தான் புரியும் , இது அத்தனை சுலபமில்லை  என்று ..
      ரூபாய் 200 விலையில், அட்டகாசமான அட்டைப்படத்தினுடனும்.. அழகு தமிழில் மொழி பெயர்ப்புடனும்..(லயன் காமிக்ஸ்'கே உரிய பாணி) ஆனந்த விகடன் சைஸில் வெளிவந்திருக்கும்  இந்த புத்தகம் உங்களுக்கு கிடைக்க மணி-ஆர்டர்  செய்திட வேண்டும்..
 வாசகர்களின் பேராதரவு கிடைக்க வேண்டுமென்றால்  ( 200  ரூபாய் ஆச்சே? )
இரத்தப்படலம்  கதைதான் சரியான தேர்வு என்று கதையை தெரிவு செய்ததாக தெரியவில்லை.  மாறாக, இரத்தப்படலம் போன்ற ஒரு  காமிக்ஸ் மைல்கல்  தமிழில் வெளியிடுவது பெருமையே என்ற எண்ணமாக இருக்கலாம்.

  யனின் எண்ணமும் நிறைவேறி விட்டது... லயனின் ஆசிரியர் திரு. எஸ்.விஜயன்  அவர்களுக்கு வந்த பாராட்டுக்களை அவரே சொன்னால் தான் உண்டு. தலையணை சைஸுக்கு இருக்கும்  இந்த புத்தகம் வைத்திருக்கும் ஓவ்வொருவருவரின்   மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் முன்னால்.., 200  ரூபாய்  ஒன்றுமே இல்லை.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு 858 பக்க காமிக்ஸ் ஆல்பம்.  உங்களிடம் உள்ளதா?

Thursday, April 7, 2011

நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் !!!

""அன்பு காதலனுக்கு..  தமிழ்ச்செல்வி  எழுதும் மடல்..
     இந்த கடிதம் உன்னை கோபப்படுத்தவோ..,  காயப்படுத்தவோ இல்லை..  உனக்கு இந்த கடிதத்தை படிக்க பிடிக்கவில்லை என்றால் கிழித்து போட்டுவிடு..

கடிதத்தை தொடர்வதற்கு நன்றிகள்...

அன்பே.. நீ என்னை விட்டு பிரிந்து சென்று சரியாக ஏழு  மாதங்கள் ஆகிவிட்டன.. எனக்கு உன் நினைவுகளோடு மட்டுமே வாழ்க்கை. உனக்கு அங்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையப்பெற்றதோ தெரியவில்லை..

என்னை உனக்கு முழுமையாக நினைவில் உள்ளதா? நாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது செய்த அத்தனை  விஷயங்களும்  உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?? 
 எனக்கு, நான் செய்த தவறுகள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளன.
நான் உன்னை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் என்று இப்போது தான் புரிகிறது..
நான் என்ன செய்வேன்?  முதன் முதலாக என்னை நீ பார்த்ததும் வந்து காதலை சொன்னாய்.. சட்டென்று  ஐ  லவ்  யூ சொல்வதற்கு  உன்னால் முடியும்.. நான் என்செய்வேன்.. அந்த தைரியம் இல்லாமல் போய்விட்டது...
 தொடர்ந்து என்னை  ஒவ்வொரு தடவையும் காண வரும்போது .., நான் உன்னை பார்ப்பதை விட்டு, அருகில் யார் இருக்கிறார்களோ என்ற பயம்  என்னை விரட்ட தொடங்கியது... என்னை கவரச்செய்வது உனக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லாமற் போனது.. நான் காதலில் விழுந்து விட்டேன் என்று உன்னால் உறுதியாக நம்பமுடிந்தது..

காதலித்த நாட்களில்.., என்னிடம் என்ன உனக்கு பிடித்தது என்று தெரியவில்லை.. ஆனால் நீ எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான்...
 நீ வாங்கித்தரும்  காட்பெர்ரி.., டெடி பேர்.., எதிர் பாராமல் கொடுக்கும் பரிசுகள்.. வாழ்த்து அட்டைகள்... என்னை முழுமையாக ஆட்டிபடைத்தன...

உன்னுடைய வண்டி எண் எனக்கு மறக்க முடியாதது.. உன் வண்டியில் சென்ற இடங்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.. உன்னால் தான் நான் சென்னையில் உள்ள  பல இடங்களை பார்க்க முடிந்தது..
இதற்கெல்லாம் மேலாக..
நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்..

அப்பொழுதெல்லாம்   நான் உனக்கு "மண்டு" தான்.. அதை ஏன் என்னிடம் கூறவில்லை..?? நீ வெள்ளைக்காரன் போல் நடந்து கொள்வாய்.. என்னிடம் சந்தேகத்தில்  ஒரு வார்த்தை கேட்டதில்லை..., என்  தேகத்தை கூட கேட்டதில்லை...  உன் பணமும், உன்  அதீத அழகும் என்னை மட்டும் தான் சந்தேகிக்க வைத்தது.. நீ எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறாய் என அறியாமலே இருந்துவிட்டேனே.. என் கையடக்க தொலைபேசியை ஒருநாள் வாங்கி பாத்திருக்கிறாயா?  அவன் யார், இவன் யார் என்று தொல்லை தந்திருக்கிறாயா? இல்லை.. இல்லவே இல்லை.. எங்கே போனாய்.. என்ன செய்துகொண்டிருந்தாய்.. என ஒரு கேள்வி சந்தேகத்தில் கேட்டதில்லை...
இதை நான்.., நீ என்னிடத்தில் அன்பாக இல்லை என்று விளஙகிக்கொண்டுவிட்டேன்....
 நான் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் என்று உனக்கு தெரியும். நான் தயிர்  சாதம் தான்,... நான்  சமையல், கோலம் , வீட்டு வேலை மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன்..., 

        உன் வீட்டைப்போல் , தோழனாக அப்பாவோ.. தோழியாக அம்மாவோ.. படுக்க ஒரு அறை, படிக்க ஒரு அறை, அனுமதி கேட்டு உன் அறைக்குள் வரும் அப்பாவோ எங்கள் வீட்டில் இல்லை.. 
 உன் குடும்பத்தை பார்த்ததும் மூச்சடைத்து போனது..  

பின்னாளில் என் தோழி உன்னை பற்றி தப்பு தப்பாக கூறி  என்னை உன்மேல் வெறுக்கச்செய்ததும்...  நான் உன்னை மாதிரி வெளிப்படையாக பேச தவறியதும்.. என் உள் காயங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாததும் நம் காதலுக்கு நானே தோண்டிய புதைகுழி.. உன்னை நான் ஒரு சதவிகிதம் கூட புரிந்து கொள்ளவில்லை என்பதை இப்போது புரிந்து வைத்திருக்கிறேன்..

இப்பொழுதெல்லாம் நான் ஒரு வெள்ளைக்காரி. நிமிர்ந்து நடக்கிறேன்.. வெளிப்படையாக பேசுகிறேன்.., ஆண்களின் உலகத்தை புரிந்து வைத்திருக்கிறேன்.., உலகத்தில் அன்பை விட ஒரு விஷயம் இல்லை என புரிந்துவிட்டது.. எல்லோரிடத்திலும் நட்பு ,  எனெக்கென ஒரு நண்பர்கள் கூட்டம்..  வாராவாரம் சினிமா.. ஷாப்பிங்..  என என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன்..
 கிரிக்கெட், அரசியல், உலக சினிமா.., மியுசிக்.., என நான் ரொம்ப பிஸி..
சரியா தப்பா என்று தெரியவில்லை... ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..

            நீ என்றால் எனக்கு கொள்ளை பிரியம் .. இப்பொழுது எனக்கு ஒரு ஆசை மட்டுமே.. "சில்லுன்னு   ஒரு காதல்" படத்தில் வருவது போல் உன்னோடு ஒருநாள் மட்டும் வாழ ஆசை.. ஆசை நிறைவேற்றி தருவாயா?  
 எனக்கு பதில் போட  விரும்பினால் தயவுசெய்து என்னுடைய  அலுவலக முகவரிக்கு போடு. 
 வீட்டில்,  கணவனுடன் விவாகரத்து,  இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.


                                                                                                              அன்பு (முன்னாள்) காதலி,
                                                                                                                   எஸ்.தமிழ்."" 

Sunday, April 3, 2011

நாலு காலு, ஒரு வாலு...!!

டிஸ்கி 01: இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே  ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல? )
     # முன் எச்சரிக்கை.

டிஸ்கி 02: கண்டிப்பா பதிவ படிச்சதுக்கப்புறம்தான் கமெண்ட் போடணும். ('சூப்பர், நல்லாயிருக்கு , கலக்கிட்டிங்க.. இந்த மாதிரி பொதுவான கமெண்ட் வாராம தடுக்கனுமில்ல?)
      #ஓனர்  ரொம்ப கறார்.


டிஸ்கி 03: என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார  இத்தனை  டிஸ்கி யா  ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும். 
      # கண்பிடென்ட் அவசியம்.

டிஸ்கி 04: டைட்டில பாத்து, எதோ கிளு கிளு மேட்டர்'ன்னு நினைச்சி ஏமாந்தா கம்பெனி பொறுப்பேற்க முடியாது.
      #தெளிவு.  


 டிஸ்கி 05: மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
         # பல்ப்.


டிஸ்கி 06: அப்போ டைட்டில் விளக்கம் ? ( அட பாஷு... நாமெல்லாம் என்னைக்கு பதிவுக்கு சம்பந்தமா டைட்டில் போட்டிருக்கோம்? )
             #ஹிஹிஹி...


டிஸ்கி 07:  இது முட்டாள்கள் தின பதிவு.
ஆனால் இன்று முட்டாள்கள் தினமில்லையே ன்னு கேக்குறிங்களா? ஹிஹிஹிஹி... பாஷு...,, முட்டாள் என்னைக்குமே முட்டாள் தான். என்னைக்கு ஏமாந்தா என்ன?
               #ஏமாந்த சோணகிரி...


 டிஸ்கி 08:  இந்தியா உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது. ஆட்ட நாயகன் டோனி, தொடர் நாயகன் யுவராஜ்.
 ஒரு பதிவு, ஒரு மேட்டர்.
                   #நீ கலக்கு சித்தப்பு.

 டிஸ்கி 09 :மூணு நடிகைங்களுக்கும் இரு ஒற்றுமை. (நீங்களே கண்டு பிடியுங்க...ஹிஹிஹி )
                     # ஒண்ணு வந்து...   மாதாவரம்.


டிஸ்கி 10:  இத்துடன் அனைத்து டிஸ்கிகளும் நிறைவுக்கு வருகின்றன... நன்றி வணக்கம்.டிஸ்கி 11 : அதான் முடிஞ்சிருச்சினு சொல்லுறேன்'ல? அப்புறம் ஏன் இன்னும் இங்கயே இருக்கீங்க.. .?
       # இன்ட்லி  ஓட்டு.