நண்பர்ஸ்..

Wednesday, March 23, 2011

வானமளவு யோசிப்போம்.!!


  ன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன்.
 ( அல்லோவ்வ்.... விண்டோவ க்ளோஸ் பண்ணினாக் கொண்ணே புடுவேன்!)
தம்மாத்துண்டு கதை தாங்க... படிச்சிட்டு கமெண்ட் போடுங்க!
இந்த கதை சொல்லவேண்டிய அவசியத்தை கதை முடிவில் சொல்கிறேன்.


ஸோ கதை 
வானமளவு யோசிப்போம்.!!


  ஒரு குளவி 'ZZZZ ZZZ' என்று ஒரு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய காளை மாட்டை பார்த்தது. சீவிய கொம்பும், திமிலும், கழுத்து மணியுமாக நிதானமாக புல் மேய்ந்து, அரைத்து, அரைத்து... அவ்வப்போது 'முஷ்...உஷ்..' என்று மூச்சுவிட்டுக்கொண்டு, காலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தது கம்பீரக்காளை.!!!

         குளவி அதனருகில் சென்று அதன் கவனத்தை ஈர்க்க எண்ணி கண்ணுக்கு முன்னால் இங்குமங்கும் வட்ட வடிவிலும், எஸ் வடிவிலும் அட்டகாசமாகப் பறந்து சுற்றி வந்து.....
  "மாண்புமிகு திருவாளர் காளையர் அவர்களே.... நான் பறப்பது உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள் உடனே விலகி விடுகிறேன்" என்றது.

 காளை ஒரு கண்ணிமையைச் சற்று பெரிதாகதிறந்து குளவியைப் பார்த்தது.

 "அடேய் சின்னைப்பையா.... நீ இருந்தாலும் ஒன்று தான்.. பறந்தாலும் ஒன்றுதான். நீ இப்போது பேசியதால் தான் நீ இருப்பதையே கவனிக்க முடிந்தது. இதுவரை நீ இருந்தது கூட எனக்கு தெரியாது" என்று சொல்லி "உஷ்" என்று மூச்சு விட்டது. அந்த உஷ்ணத்தில், மூச்சு வேகத்தில் குளவி தள்ளப்பட்டு ஒரு மரத்தில் மோதிக்கொண்டு இறக்கை இழந்தது.

இந்த  கதையின் மோரல் என்னான்னா....
"மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்!" அப்பிடிங்கிறது தான்.  
எனவே, 

எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!

 டிஸ்கி: இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)

டிஸ்கி 2: நமீதா படம் போடாமலையே உங்கள படிக்க வச்சிட்டனே...அய்..அய்....

 டிஸ்கி 3: வானமளவு யோசிப்போம்'ங்கிற வார்த்தை "ஒவ்வொரு பூக்களுமே..."பாட்டுல வர்ர லிரிக்ஸ்'னு உங்க எல்லோருக்குமே தெரியும். (எனக்கும் தெரியும்!!)

பதிவு புடிச்சிருக்கா? மறக்காம குத்திட்டு போங்க... ஓட்டு....ஓட்டு!!




35 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொத வட எனக்கா? அப்பாடா ஒரு சம்பரதாயம்! கேக்கணும் கேட்டுட்டேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் தலைப்பு சூப்பரா இருக்கு! ( என்னது பா . விஜய் கிட்ட இருந்து சுட்டியா? வெளங்கிரும் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் காளையப்பத்தி கத போட்டிருக்கே! ஆனா உன்னோட படத்த போட்டிருக்கியே! ஏன் இந்த கொல வெறி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)

இது கரகாட்டகாரன் சொப்பனசுந்தரி எபெக்டு தானே!

உணவு உலகம் said...

நண்பர் ரஜீவன் உங்களை நல்ல விதமாய் அவர் வலைப்பூவில் அறிமுகபடுத்தியிருந்தார். வந்து பார்த்தேன். வாக்கிட்டேன். நன்றாய் இருக்கிறது.

Unknown said...

மாப்ள நல்லாத்தான்யா இருக்கு ஹிஹி!

Pranavam Ravikumar said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள் !

டக்கால்டி said...

present sir

டக்கால்டி said...

i shall read,vote,comment later..bcoz i m in full mabbu..he he..

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மொத வட எனக்கா? அப்பாடா ஒரு சம்பரதாயம்! கேக்கணும் கேட்டுட்டேன்///


வாங்... நாராயணா.... மொத்த வடையும் உங்களுக்கு தான்....

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் தலைப்பு சூப்பரா இருக்கு! ( என்னது பா . விஜய் கிட்ட இருந்து சுட்டியா? வெளங்கிரும் ///


யோவ்... அவனவன் மொத்த மேட்டரயுமே சுட்டு போட்டுட்டு.... சரி விடு...

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் காளையப்பத்தி கத போட்டிருக்கே! ஆனா உன்னோட படத்த போட்டிருக்கியே! ஏன் இந்த கொல வெறி?///


ஐயோ.... அப்போ அது காளையோட படம் இல்லையா? ச்சே...

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)

இது கரகாட்டகாரன் சொப்பனசுந்தரி எபெக்டு தானே?///


அதே....

சரியில்ல....... said...

FOOD said...
நண்பர் ரஜீவன் உங்களை நல்ல விதமாய் அவர் வலைப்பூவில் அறிமுகபடுத்தியிருந்தார். வந்து பார்த்தேன். வாக்கிட்டேன். நன்றாய் இருக்கிறது///


நன்றி.. நன்றி... உங்க ஏரியாவுக்கு கொஞ்சம் லேட்டா வர்ரேன்....

சரியில்ல....... said...

விக்கி உலகம் said...
மாப்ள நல்லாத்தான்யா இருக்கு ஹிஹி///


ஒரு கோடி நன்றிகள் நண்பா......

சரியில்ல....... said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ///


நல்வரவு. நன்றிகள். உங்க ஏரியாவுல என்ன ஸ்பெஷல்? த்தோ வர்ர்ர்ரேன்....

சரியில்ல....... said...

i shall read,vote,comment later..bcoz i m in full mabbu..he he.///


என்னோட பதிவு படிச்சதுக்கப்புறமா மப்பு இறங்கல?? இட்ஸ் எ மெடிக்கெல் மிராக்க்ல்...

பாலா said...

கதை நல்லாத்தான் இருக்கு. உங்க ஸ்டைல்ல ரெமேக் பண்ணிஇருக்கீங்க...

ரேவா said...

எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி

ரேவா said...

மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்....

சூப்பர்...

சரியில்ல....... said...

பாலா said...
கதை நல்லாத்தான் இருக்கு. உங்க ஸ்டைல்ல ரெமேக் பண்ணிஇருக்கீங்க..///


நன்றி.... நன்றி... நன்றியோ நன்றி....

சரியில்ல....... said...

ரேவா said...
எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி //

வாங்க மேடம்... முதன்முதலா வந்திருக்கிங்க.... நன்றி....

சரியில்ல....... said...

ரேவா said...
மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்....

சூப்பர்..//

தேங்சு... மேடம்...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நலமா?
முதன் முதலாய் உங்கள் வலைப்பூவினைப் பார்க்கிறேன். நம்ம மாத்தியோசி ஓட்ட வடையின் அறிமுகத்தினூடாக,

சரியில்லை... ஆனாலும் இப் பதிவு தரமாகத் தான் இருக்கிறது. குட்டிக் கதையும் அதன் பின்னேயுள்ள தத்துவமும் ரசித்தேன். எல்லாப் பதிவுகளைப் படிக்கவும் நேரம் போதாது. ஆனாலும் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.


எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!//

இன்னும் நிறைய எழுதுங்கோ. உங்கள் இனிய பதிவுகளைப் படிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

சரியில்ல....... said...

நிரூபன் said...
வணக்கம் சகோதரம், நலமா?
முதன் முதலாய் உங்கள் வலைப்பூவினைப் பார்க்கிறேன். நம்ம மாத்தியோசி ஓட்ட வடையின் அறிமுகத்தினூடாக,

சரியில்லை... ஆனாலும் இப் பதிவு தரமாகத் தான் இருக்கிறது. குட்டிக் கதையும் அதன் பின்னேயுள்ள தத்துவமும் ரசித்தேன். எல்லாப் பதிவுகளைப் படிக்கவும் நேரம் போதாது. ஆனாலும் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.


எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!//

இன்னும் நிறைய எழுதுங்கோ. உங்கள் இனிய பதிவுகளைப் படிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோ///



நன்றி நிரூபன் தங்களின் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். எனது 'இன்டெல்' மெண்டல் ஆகிவிட்டதால் ஒரு வாரத்திற்கு பின் தான் உங்கள் ஏரியாவிற்கு வரமுடியும்... என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். நன்றி சகோதரம்....

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஜாலியா எழுதுற மக்கா நல்லா இருக்கு கலகலன்னு.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மொத வட எனக்கா? அப்பாடா ஒரு சம்பரதாயம்! கேக்கணும் கேட்டுட்டேன்!//

இதுல பெரிய சதியே நடந்துருக்கு ஆமா சொல்லிபுட்டேன்....

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...
நல்ல ஜாலியா எழுதுற மக்கா நல்லா இருக்கு கலகலன்னு....////


நன்றி சார். அங்க கொஞ்சம்.. இங்க கொஞ்சம் சுட்டு... அப்பிடியே மெயின்டேன் பண்ணுறேன் சார்.
வாழ்த்துக்கு நன்றி!

டக்கால்டி said...

அப்பாடா...இவரு என்ன சொல்ல வராருன்னா என்னை மாதிரி மப்புல இருந்தா கூட அட்லீஸ்ட் படிச்சுட்டு கமென்ட் போட்டுடுங்க என்கிறார்...

Unknown said...

//வானமளவு யோசிப்போம்.!!// சரியில்ல........

வானளவு யோசிப்போம்.!!
சரி..........

சக்தி கல்வி மையம் said...

நானும் உங்க டீம்ல இணைஞ்சுட்டேன்.. இனி தினமும் வருவேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>இன்னா தெகிரியம் இருந்தா என்னாண்டையே கேப்ப நீ?

haa haa ஹா ஹா செம

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் போட்டோ.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!//////

பிரபல பதிவர் ஆகியே தீரனும்னு முடிவு பண்ணிட்டீங்க.... ம்ம் நடத்துங்க.........

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!//////

பிரபல பதிவர் ஆகியே தீரனும்னு முடிவு பண்ணிட்டீங்க.... ம்ம் நடத்துங்க........///


அட... நீங்கெல்லாம் இருக்குற வரைக்கும் நாங்கெல்லாம் (சாரி.. நான் ! நான் மட்டும்..) ஹார்ட் வேர்க் பண்ணிக்கிட்டேதான் இருக்கணும்...