நண்பர்ஸ்..

Friday, July 15, 2011

எங்கே அந்த பதிவர்!

பதிவுலக உள்குத்து...!!

 டந்த இரண்டு வார காலமாக பிரபல பதிவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்... அவர் மீண்டும் பதிவுலகத்திற்கு வரவில்லை என்றால்  தீக்குளிப்பேன் என்று எச்சரித்துள்ளார் மற்றொரு பிரபல பதிவர்!!
 என்ன நடக்கிறது..? இதோ நியூஸ் அப்டேட்...

அவர் வசிக்கும் நாட்டில் உள்ள ஒரு டவர்.
 டந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஜெக ஜோதியாய் இருந்த பதிவுலகம் இப்போது ரொம்பவும் தான் வாடிப்போயுள்ளது... யாரும் ஒழுங்காக பதிவு  போடுவதில்லை என்றும்.... மற்றவரின் தளங்களுக்கு செல்வதில்லைஎன்றும்... ஏகப்பட்ட புகார்கள்...
அவரின் உருவப்படம்.
                                            பிரான்ஸ்சில் இருந்து பதிவெழுதும் ஒரு பிரபல பதிவர் சில வாரங்களாக காணவில்லை.. மற்றவர்களின் பதிவிற்கு நிறைய, நீண்ட பின்னூட்டங்களை இடும் இவர் ரசிக்கவைக்ககூடிய பல சுவாரச்சியமான பதிவுகளை எழுதுவார்... இவர் காணாமல் போனது வளர்ந்துவரும் பதிவர்களுக்கு பேரிடியாக போனது....
ஏன் அவர் பதிவுலகத்தை விட்டு போனார் என்பதற்கு சில பதிவர்கள் சொல்லும் காரணங்கள்:

பிரச்சனைக்குரிய நடிகை ஹன்ஷிகா.
மைந்தன் சிவா: "அவருக்கும் எனக்கும் சில நாட்களாக சண்டை... அதாவது அவர் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பிரபல நடிகை ஹன்ஷிகா  என்னை காதலிப்பதாக சொன்னதும் அந்த பதிவர் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறிந்தேன்..."

முன்னால் காதலி,நடிகை  நமீதா.
நாற்று நிரூபன்: "உந்த கோதாரி விழுந்தவன காணேல எங்க போனான் எண்டும் தெரியேல உவன் நமீதா எண்ட ஒரு நடிகைய லவ் பண்ணிக்கொண்டு திரிஞ்சான் அந்த நடிகைய சி.பி.செந்தில் காப்புரிமை வாங்கிட்டதால ஹன்ஷிகா என்ற ஒரு பிகர லவுசு விட்டுக்கொண்டிருந்தான்.... அதிலையும் ஏதோ பிரச்சினை போல...... எதுவாயிருந்தாலும் சரி   இன்னும்  ரெண்டு நாள்ல   வரவில்லை எண்டால்  நான் தீக்குளிப்பேன் என எச்சரிக்கிறேன்..." கோபத்துடன்  முடித்தார் நிரூ.

அட்ரா சக்க செந்தில்: "பாவம்ங்க அவர்... நல்ல ஒரு ஜீவன்... யாருக்கும் கெடுதல் நெனைக்கமாட்டார்... எதோ பிரெஞ்சுக்காரி  கூட லிங்க் இருந்திச்சாம் அந்த பிரச்சினைல தான் வரல ன்னு பேசிக்கிறாங்க...."என அனுதாபத்துடன் கூறினார் செந்தில்....


 

நாஞ்சில் மனோவிடம் பேசினோம்... " எனக்கொண்ணும் தெரியாதுங்கோவ்.. அந்தாளுக்கு ஓவரா முடி கொட்டிருச்சி... அத நான் ரெண்டு மூணு இடத்துல சுட்டிக்காட்டினேன் பெருசுக்கு கோவம் வந்திடிச்சு போல.... அது எங்கனா சந்துல பொந்துல  கெடக்கும் அப்புறமா வந்துடும்... பாவம் யார் பெத்த புள்ளையோ...."  என்றார்...

அவர் புதிதாக வாங்கிய இசைப்பேழை.
 "அந்த பதிவர் ஊர்ல இருக்கும் போதே ஏகப்பட்ட பொண்ணுங்ககூட சகவாசம் வச்சிருந்திருக்கார்...  இப்போ பிரான்ஸ் வந்தும் அங்கேயும் ஏதோ பிரெஞ்சுக்காரி... நீக்கிரோ காரி... அப்பிடி இப்பிடின்னு சுத்திட்டு இருந்தாப்ல... என்னடா இவனுக்கு மட்டும் இப்படி பிகருங்க்களா மாட்டுதுன்னு பிரபல "அருவாள்" பதிவர் அவரை போட்டுத்தள்ளியதாக நியூஸ் வந்திச்சு..." என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பிரபல "கக்கா" பதிவர்....

ரி உண்மை நிலவரம் தான் என்ன.... ???

 பிராஸ், 'லா சேப்பல்' எனும் பகுதியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு தொலைபேசியில்  தொடர்பு கொண்டோம்.... பதிவர் எங்கே என கேட்டதற்கு எதிர் தரப்பில் இருந்து ஒரு பெண் குரல் "அவர் எங்கேயும் போய்விடவில்லை.. ஹன்ஷிகாக்கு அப்புறம் தமிழில் புது நடிகைங்க யாரும் வரல அதனால அவர் லவ் பண்ணுறதுக்கு யாருமே இல்லை... அப்பிடியிருக்கிறப்போ எப்பிடி டெய்லி  பதிவு போடுறது? அதனால தான் வரல... " என கூறினார்.

என்னமோ போங்க... அவர் சீக்கிரமே வரணும் எங்கிறது தான் எங்க எல்லோருடைய ஆசை... 

Friday, June 10, 2011

தெரியாம குடிச்சிட்டேன்!!!

ல்லா வாசகே பெரிமக்ளுக்கும்........ கிளுக்கும்...க்கும்... வான்க்கம். மொதேள்ளே சொல்லிடுறேன் நா ரொம்பே குடிச்... சிருக்கேன்... காறனம் கீது. அஞ்சி காறனம் கீது.

 மப்பு ஓவரா பூடுச்சி..!  எ  வூட்டாண்ட கீற தோஸ்து... அவன்கு கண்ணாலம்.. ங்கே.. முடிஞ்... ஞ்சிருச்சி... அவென் லைப்ப் கொவின்ட்டா.. கோ..... விண்டா.. நேத்தி நைட்டு திசெப்ச்ன்..  நடந்திச்சா... அங்க தே.. குடிச்சிட்டேன்... ஒவ்ரா.. சாரி.. தல்ல... நீ ஒன்னியும் கோச்சிக்காத...  அங்க இன்னாச்சின்னு கேலேன்.. ச்சும்மா கேலு தல்ல.....

நைட்டு குடிச்சிக்கிட்டே இருந்தோம்மா.. திடீர்னு ஊர்கா காலியாடிச்சி... கடயாண்ட போயி வாங்கியான்னு ஒரு கேப்மாறிய,.... சாரி.. கெட்ட வார்த்த நான் பேஷ்மாட்ட்டேன்..னா   நள்வன்  ..!!!!
ஒரு பிரண்ட அனுப்பினேனா.. அந்த சோமாறி..., ஆங்.. சாரிபா இன்னொரு தபா திட்ட மாட்டேன்... எங்க உட்டேன் ?  அங்க.. ஊர்கா வாங்கியார அனுப்பினேனா அந்த பக்கி கடயாண்ட போயி மாங்கா ஊர்கா வாங்கியாந்திடிச்சி... மனுஷன் திம்பானா மாங்கா ஊர்காவ? அவன மறுபடி கடைக்கு அனுப்பி பூண்டு ஊர்கா வாங்கிவாடான்னு அனுப்பிநேன்பா.. அவனும் சரின்னு போனான்... போனவன அரமணி நேரமா காணோம். இன்னாடா இதின்னு நெஞ்சிக்கிட்டே நாமேலும் கடயாண்ட போயி இன்னான்னு தா  பாக்லாம்னு லுங்கிய இழுத்து அக்குளுக்குள்ள விட்டுகிட்டு...  போனோம்பா... நாங்கே ஒரு நாலு பேரு...!!!

 பிலடி ராச்கள்.. யாரோ ரெண்டு பேரு அவன பூட்டு அந்தா அடி அடிச்சிட்டிருக்கானுவோ... நா அப்பிடியே மெர்சலாயிட்டேன்... இன்னா தேகிர்ரியம் ஈந்தா எனோட பிரண்டு மேலயே கைய வப்பானுவோ...
"தடாய்... "அப்பிடின்னு சத்தம் போட்டுகிட்டே ஓடிபோயி கிட்டக்க பாத்தா.............அடிச்சிட்டிட்டு இருக்கிறது போப்..போப்..போலீஸூ...
  திரும்பிபாத்தாக்கா கூட வந்தவனுங்கோ யார்யுமே கான்னோம்.. அடிச்சிக்கிட்டிருக்கிரவண விட்டுபுட்டி என்னைய புடிச்சி வண்டில ஏத்தி ப்புட்டானுவோ  போலீசு... !!!

 அப்றமா  போலீசு கைல கால்ல வீந்து... எஸ்கேப்பு ஆகிட்டேன்... குடிபோதையிலேயே இந்தா பதிவு போட்டுக்கிட்டிருக்கேனே..


ப்றமா இன்னொரு விஷயம் சொல்லணும்... இன்னைக்குதே பி.எஸ்.என்.எல் பில்லு கட்டிநேநேனா, ( நம்ம குரோம்பேட்டையில தாம்பா)  அப்போ  இந்த டீபிகா
படுகோன் இல்ல டீப்பிக்கா..
அந்த குட்டியோட பேனர் பாத்தேம்பா... இன்னா அளகா கீரா தெர்யுமா .. அந்த பொண்ண தா கண்ணாலம் கட்டிக்கணும்னு நா முடிவு பண்ண்ட்டேன்..   பொண்ணு  வீட்டுக்காரங்க என்னய  தொடர்ப்பு கொல்லுங்க..


ப்புறம் இன்னொரு மேட்டரு... சென்னைல புட்சா சிகரெட்டு ஒன்னு அறிமுகப்படுத்திருக்காணுவ போல.. அது பேரு கூட ரெட் அண்டு ஒயிட்னு என்னமோ வரும்... இன்னைக்கு அசோக் நகர்ல டீ சாப்பிட்டுக்கிட்டிருக்கிரப்போ  ஒரு சாவுக்கிராக்கி என்னாண்ட வந்து சார் சிக்ரெட் குடிக்கிற பள்க்கம்   இருக்கான்னு கேட்டான்,... அத்த ஏண்டா நீ கேக்கற ன்னு கேட்டதுக்கு அவன் சொன்னான்
"சார்.. எங்க புது சிகரெட் ஒரு பாக்கெட்  வாங்கனா உங்களுக்கு புது படத்துக்கு டிக்கெட் கிடைக்கும்"னு...
"பரவால்லையே,... இன்னா படத்துக்குப்பா இன்னா தியேட்டர்?"னு ஆர்வமா கேட்டேன்... அதுக்கு அவன் நாளைக்கு ரிலிசாவுற "அவன்-இவன்" படத்து டிக்கெட்  சார், பர்ஸ்ட்டு டே பர்ஸ்ட்டு ஷோ"  ன்னான்... சரின்னு சொல்லி நாலு சிகரெட் பாக்கெட்டும் அதுக்கு அவன் குடுத்த இலவச டிக்கெட்டும் காசு குடுத்து வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்  ......
 கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதா அந்த உண்ம எனக்கு தெரிஞ்சுது   ..


கொய்யால அவன்-இவன் படம் வர்ற 17 ம் தேதிதான் ரிலிச்சாம்! 

டிஸ்கி: இப்போ போதை  தெளிஞ்சிடிச்சி!

Sunday, May 22, 2011

ராசா இருக்கும் இடமே.....!!!
முதலில்  சில  கில்மா கதைகள்..

கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்...
மனைவி தூக்கத்தில் உளருகிறாள்..
  "சீக்கிரம்... சீக்கிரம் ஓடிவிடு.... என் கணவன் வந்துவிட்டான் ..."

அதைக்கேட்ட கணவன் திடுக்கிட்டு எழுந்து..,  அருகில் இருந்த ஜன்னல் வழியாக குதித்து ஓடுகிறான்...
 (நாசமா போச்சி.... ரெண்டுபேருமே இப்பிடியா?)

****

கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்...
"நீ மட்டும் வீட்டுவேலைகளை ஒழுங்காக செய்தால் வேலைக்காரியை நிறுத்திவிடலாம்..."

மனைவி பதிலளிக்கிறாள்:
"நீங்கள் மட்டும் ஒழுங்கான  புருசனாக நடந்துகொண்டால்  நானும் தோட்டக்காரனை  நிறுத்திவிடுவேன்..."
  (ஹிஹிஹி.. நன்றி அரசு, (குமுதம்) )

****
 கருணாநிதி  கடிதம் எழுதுகிறார்.
 "அன்பு மகளே கனிமொழி... நீ பயப்பிடாதே,... உன்னை நான் திஹார் ஜெயிலில் இருந்து வெளியே பெயிலில் எடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்...."
கனிமொழி பதில் கடிதம் போடுகிறார்.
"இல்லை அப்பா... ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."

 (அடப்பாவிகளா.....!)

**** 

மேலும் சில மொக்கைகள்.....

 01 ) "காங்கிரசோடு  கூட்டணி நன்றாக இருக்கிறது"  #கருணாநிதி 

 (இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )


02 )"சட்டம் ஒழுங்கை நிலைநாடுவதே முதல் வேலை.."# ஜெ.  
 (மேடம்... அந்த லேப்டாப் மேட்டர  ரெண்டாவது வேலையா வச்சிக்க மறந்துடாதிங்க... )

03 )"ஒரு கோடி ருபாய் சேலஞ்ச்...!!!" சேலஞ்'கு  ஒருபயலுமா இல்ல...???
 (இல்ல ஆறு மாசமா இதையே ஓட்டுறாங்களே... அதான் கேட்டேன்...!!)

04 ) மேற்கு வங்கத்திற்கு பங்கம் வராத மாதிரி ஆட்சி அமைங்க மம்தா பா(எ)னர்ஜி..!
  (உங்க ஊர்ல எத இலவசமா குடுப்பிங்க?)

05 ) நகைகள் விற்கும் கடைகளின் விளம்பரங்கள்  குறைந்து மாறாக  அடகு வைக்கும் கடைகளின் விளம்பரங்கள்  பெருகிவிட்டன.......#காலத்தின் கோலம்.
(சேட்டுங்களுக்கு வாழ்வு!) 

06 ) தனிமனிதனுக்கு காதல் வந்தால் உலகமக்கள் எல்லார் மீதும் காதல் வந்துவிடுகிறது அவனுக்கு! #லவ்வாலஜி.
 (பொண்ணுங்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது!?)


மீண்டும் பல மொக்கைகளுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஓட்டு முக்கியம்.கமெண்ட்ஸ் அதவிட ரொம்ப முக்கியம்...

Thursday, May 19, 2011

"பச்ச பச்சையாய்"  பேசலாம்  வாங்க...!!!


.... "என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர்'ல இருக்கு?''னு கேக்குறிங்களா ? பெருசா ஏதும் காரணம் இல்லைன்னாலும்,  பச்சை கலருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கு...
என்னன்னு பாக்கலாமா? (ஹல்லோ எங்க போறிங்க? வேணாம்'னாலும் நாங்க விடமாட்டோம்..) 
      "இச்சை மூட்டும் பச்சை நிறமே..." என்று வைரமுத்து பச்சையை பற்றி எழுதியிருக்கிறார்,... ( அவரு எழுதுவாரு.. தெரியாதா? நீ என்னலே எழுத   வர்ரே? )
 அவர் ஏன் அப்படி எழுதினார்?
காரணம் பச்சைக்கு ரைமிங்'ஆ  இச்சை'ன்னு வந்ததால தான்... வேறென்ன?(மனோ.. ப்ளீஸ் அருவாள கீழ போடுங்க....)

 இந்தியாவின் கிரீன் சிட்டி எது தெரியுமா? அதுக்கு முன்னாடி பெயருக்கு காரணம் சொல்லிடுறேன்... கிரீன் சிட்டி என்றால் பசுமை நகரம்... பசுமை என்றால் பச்சை பசேல் என்று   இருக்கிற இடம்.. அது ஏன் பச்சையா இருக்கு?
ஏன் நீல கலர்ல இல்ல?                   

இதுக்கு பதில் சொல்லுற தகுதி இந்தியாவிலேயே  பன்னிக்குட்டி ராம்சாமி ஒருவருக்கே உள்ளது என்பதால் நேரே  (தப்பிச்சுட்டம்'ல...)
  விஷயத்திற்கு வர்றேன்... இந்தியாவின் பசுமை நகரம் என்று அழைக்கப்படுகிற நகரம் புனே.


 இதுக்கு என்ன அர்த்தம்?

 *பச்ச மண்ணு அப்பிடின்னு சொல்லுறாங்களே? எந்த ஊர்ல மண் பச்ச கலர்ல இருந்திருக்கு?

 *பச்சத்தண்ணி ங்கிறாங்களே?
தண்ணி எப்பிடி பச்ச கலர்ல? 'குடி'மக்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. (விக்கி உலகம் வகையறாக்கள்...)

 *பச்சைபச்சையா பேசுறதுன்னா என்னங்க? ரொம்ப நாளா எனக்கு டவுட்டு.. (உங்கள்'ல  யாருக்காவது  சிவப்பு கலர்'ல பேசுற பழக்கம் இருக்கா?
*கிரீன் டீ தெரியுமா?
'கமீலியா சைனஸிஸ்'  (பமீலா இல்லைங்க..) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் (தமிழேன்யா..!) சீனாவில் தோன்றியது,(இது ஒண்ணுதான் உண்மையிலேயே பச்ச கலர்ல இருக்கு!)

நான் ஏன் என்னுடைய ப்ளாக்'அ பச்சையா மாத்திட்டேன்'னா நாமேளும் விவசாயி'தாங்கிறத காமிக்க தான்.. யோவ்.. அவனவன் பூச்செடிக்கு தண்ணி ஊத்திட்டு விவசாயி என்கிறான்... நான் சொன்னா மட்டும் தப்பா...???? 

இத்துடன் அனைத்து மொக்கைகளும் முடிவுக்கு  வருகின்றன...ஓகே நண்பர்களே.. நீங்க பச்சையா கமெண்ட்ஸ் போடுங்க... நான் கெளம்புறேன்...
டிஸ்கி:யாருக்காவது பச்சயா திட்டனும் போல இருந்தால் தனியே மெயிலில் திட்டவும்.ஏனென்றால்  இது மிகவும்  கன்னி... கண்ணியப்பர்... கண்ணியமான் அது என்ன செந்தில்...? எதோ சொல்வீ ங்களே? ஆங்..மிகவும் கண்ணியமான பதிவரால் நடாத்தப்படும்  ப்ளாக்! கரைகட்'டா?... ம்ம்ம்...கெளப்புங்கள்.. ..

டிஸ்கி 02 : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி வெகு விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்...

Wednesday, May 18, 2011

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???

லங்கையிலிருந்து என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்களுக்காக எடிட் செய்திருக்கிறேன்...
வலி நிறைந்த அந்த கடிதத்தில் வெளிப்பட்ட சில கோபங்களை எழுத்தில் கொட்டியிருந்தார்...


"

இன்று மே 18 . கருப்பு சூரியன் நாள்.

 திமுக வீழ்ந்ததற்கு காரணம். என்னுடைய பார்வையில்.... 
கருணாநிதி
""".....இப்படியான போர்ச்சூழலில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் போது, தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கும் மதிப்புக்குரிய திரு,கருணாநிதி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்...
  எதுவும் நடக்கேயில்லை ... எங்களுக்கோ எதுவும் தெரியாத நிலை..தெரிந்து கொள்ள முடியாத நிலை... ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம்.. சண்டைகளுக்கு நடுவில் என் தங்கைக்கு ஒரு கால்  ஒடிந்துவிட்டது.. நானும் என்னுடைய அண்ணனும் எங்களுடைய உடைமைகளை எறிந்துவிட்டு தங்கையை தூக்கிக்கொண்டோம். வலி  பொறுக்கமுடியாமல் வீறிட்டாள்.. மருத்துவ உதவி இல்லை... சாப்பிடுவதற்கே உணவில்லை... ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் , முடியாமல் போகவே என் தங்கை இறைவனடி சேர்ந்தாள். 
 கண்களில் கண்ணீருடன் தொடந்து இடம் பெயர்ந்துகொண்டேயிருந்தோம்.. கண்களில் நான் கண்ட காட்சிகள் அனைத்தும் கொடூரமானவை...
நாங்கள் இப்படியாக இருக்க..
 கருணாநிதி அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம்..,... விடிவுகாலம் வரப்போகிறது என முழுமையாக நம்பிக்கொண்டிருந்தோம்... சண்டை நடந்துகொண்டிருக்கும் பொழுது பல கடிதங்கள் கருணாநிதி எழுதியிருக்கிறார்.. நாங்கள் இப்போது முள்வேலிக்கு நடுவில் இருக்கும் போது கூட கடிதங்கள் பல எழுதிக்கொண்டிருக்கிறார்...
எம்.ஜி.ஆர். மற்றும் பிரபாகரன்.


சந்தேகம் வந்துவிட்டது எங்களுக்கு.

நம்பிக்கை துரோகம்.. 

காங்கிரசசோடு தான் உங்களுக்கு கூட்டணியா? ஐயகோ நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியை துறந்து எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள்.. நடக்காத கதையல்லவா அது... காங்கிரஸ்காரர்கள் எங்கள் மீது அளப்பெரிய கோபம் கொண்டுள்ளார்களே... அவர்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லவா? மத்தியில் ஆளும் அவர்கள் தயவுடன் நீங்கள் ஆட்சியில்  இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு விடிவு காலம் எப்படி சாத்தியம்..??? 
            எங்கள் நம்பிக்கைதான் வீணாகிவிட்டது... பின்பு சில விஷயங்களும் கேள்விபட்டோம்... இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொலையாய் கொன்றுகொண்டிருக்கும் போது என்ன செய்தீர்கள்? நாங்கள் அந்நியத் தமிழர்கள் சரி... மீனவர்கள்? அவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்? 
                          அவர்கள் தானே உங்களுக்கு வாக்கிட்டு ஆட்சியில் அமர்த்தினார்கள்... இறந்த குடும்பம் கண்ணீருடன் இருக்கும் போது.. அப்போதும் கடிதமா எழுதிக்கொண்டு இருந்தீர்கள்? அல்லது இறந்தவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்துவிட்டு பேசாமல் இருந்து விட்டீர்களா?
உலகத்தமிழர்கள் அனைவரும் எங்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து நீங்களும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் பிரச்சினை தீர்ந்திருக்குமே?
அதில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டியிருந்ததோ?
அரசியல் செய்யவேண்டும் என்றால் இப்படி செய்திருக்கலாமே?
 நீங்க மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால் (காங்கிரஸ் மயிராப்போச்சு என்று விட்டுவிட்டு ...) எங்களுக்கு விடிவு பிறந்திருக்கும். தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத்தந்த தானே தலைவன் என்று உங்களை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்திருப்பார்களே...

 வரலாற்றின் திமுக ஆட்சியின் பக்கங்களில், தலைவன் நீங்களே இப்படி கரி பூசிக்கொண்டீர்களே  ... எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஈழத்தமிழன் நான் சொல்கிறேன்... நீங்கள் இனி ஒரு காலத்திலும் அரசாள முடியாது... ஆட்சி அமைக்க முடியாது... திமுக எனும் கட்சியை பேரீட்சை பழத்திற்கு கொடுத்து விடுங்கள்...

மேலும்....
 தமிழ் நாட்டின் தயவு இனி எங்களுக்கு தேவைப்படாது... உங்கள் அரசியலில் உச்ச நாகரீகம் இல்லை.. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டீர்கள்.. எங்களை அம்போ என்று  விட்டு விட்டது போல் தமிழ் நாட்டு மக்களை விட்டுவிடாதிர்கள்.. பணத்திற்கு ஓட்டு என்பதெல்லாம் இனி நடக்காத காரியம்... பின்பு ஓட்டிற்கு கையேந்த வேண்டும்..
ஜெயலலிதா.
      ஜெயலலிதா அம்மையாருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... தயவு செய்து உங்கள் லாபத்திற்காக ஈழம் பற்றி பேசாதீர்கள்.. ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசாதீர்கள்.. உங்கள் நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறதாம்... கரன்  (நான் தான்...)அடிக்கடி சொல்லுவான்.. இந்த பிரச்சினை எங்கள் ஊரில் இல்லை.. (எங்கள் ஊரில் தான் சில இடங்களில் மின்சார கம்பிகளே கிடையாதே...) பெற்றோல்... அதிக விலையாமே குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.. மிக முக்கியமாக ஊழல் செய்யாதிர்கள்.. மக்கள் பணத்தில் தான் நீங்கள் கை வைக்கிறீர்கள் என்பதை ந்ஜாபகத்தில் கொள்ளுங்கள்..பதில் சொல்லவேண்டும்.. 

மீண்டும் மீண்டும் சொல்ல்கிறேன்.. எங்களை மறந்துவிடுங்கள்.. உங்களின் ஒரு உதவியும் எங்களுக்கு தேவையில்லை.. 

நான் தமிழன்..
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும் 
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""

... என்று கடிதத்தை முடித்து  மின்னஞ்சல் செய்திருந்தான்... 
அவனுக்கு என்ன பதில் போடுவதென்று முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்...

Tuesday, May 17, 2011

இரண்டு மாதங்கள் மட்டும் புகை.

ங்களுக்காக சில கருப்பு வெள்ளை கால சினிமா விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். முன்னாடியே சொல்லிடுறேன்.கண்டிப்பாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டவை. படித்தவற்றை பகிர்ந்துகொள்ளும் நோக்கம் மட்டுமே!!!

01 )மஞ்சரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார் நடித்த முதல் படம் "பக்த ராமதாஸ்".
நம்பியார் மற்றும் ஜெமினி கணேஷன்.


படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூபாய் 40. படத்தில் அவர் சில தெலுங்கு வசனங்கள்  பேசி நடித்திருப்பார்.

நடிகவேள்.
  அவரின் இரண்டாவது படமாகிய "இன்ப சாகரன்" என்ற படம் ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டதால் படம் வெளிவரவேயில்லை. 1938 -ம் வருடம் ஜி.பட்டு என்பவர் டைரக்ட் செய்த அந்த படம் 80  நாட்கள் படமாக்கப்பட்டிருந்தது.

 02 ) திரைப்பட  விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  கலைவாணர் என்.எஸ்.கே.., "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்.."என ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பேசுவதை நிறுத்திவிட்டார். வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட என்.எஸ்.கே, ஆங்கிலத்தில் பேச தொடங்கியதும் கூட்டமே வியப்பில் ஆழ்ந்தது.
        மீண்டும் பேச தொடங்கிய கலைவாணர் "எனக்கு அவ்வளவு தான் தெரியும்.அதற்குமேல் ஆங்கிலம் பேச தெரியாது" என்று மெள்ளச்சொல்ல.. அரங்கம் அதிர  சிரிப்பு. கலைவாணர் கலைவாணர் தான்.

03 )நடிகர் சிவகுமாரின் அறையில் ஒரு ஓவியம் எப்போதுமே கண்முன்னே தெரியும்படி வைத்திருப்பார். அவர் வரைந்த ஓவியம் தான். "அது நான்  1956 -ல் சினிமாவிற்கு வருமுன்னர் நான் வரைந்து, ஜெமினி கணேசன் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட ஓவியம்" என பூரிக்கிறார் சிவகுமார்.

 04 ) சென்னை இந்திரா நகரில் 'பிரேமா' என்ற பெண்மணி கொலையுண்ட வீட்டிற்கு குடிவருவதற்கு யாருமே துணிந்து முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் விஷயம் கேள்விபட்டு, "எனக்கும் பேயிற்கும் அப்படியொரு ராசி என சிரித்துக்கொண்டே "குடிவந்தார்.
 அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

வில்லன்  நம்பியார்.
05 ) "உங்கள் கணவர் புகைப்பிடிக்கிறாரே.. அதற்கு நீங்கள் ஆட்சேபனை சொல்வதில்லையா?"என்ற ஆனந்த விகடன் கேள்விக்கு பதில் கூறினார் திருமதி ருக்மணி நம்பியார்.
 "இல்லீங்க. வருசத்திற்கு இரண்டே மாதம் தான் சிகரெட் குடிப்பார். மீதி மாதங்களில் குடிக்கமாட்டார். அது என்னவோ அப்படியொரு பழக்கம்." என்கிறார்.

06 ) தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் கதாநாயனாக நடித்த முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் பாணி படம்தான். "இரவும் பகலும்" என்ற  அந்த படத்தில்   ஒரு காட்சிக்கு  'டூப்' போடாமல் நடித்து,  10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவேண்டியதாய் போயிற்று. 


07 ) தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு திரைப்படங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன . அவை எவை என  கீழே படங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


700 நாட்கள் ஓடிய சந்திரமுகி.
3 தீபாவளி தொட்ட ஹரிதாஸ்.
டிஸ்கி 01:நன்றி ஆனந்த விகடன். குமுதம், கூகிள் .

டிஸ்கி 02:  நன்றி உங்களுக்கும். மீண்டும் ஒரு மொக்கை பதிவில் சந்திப்போம்.

Sunday, May 15, 2011

பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...!!!

ன்ண்ர்ளே..
       எப்பிடி இருக்கிங்க... "ரொம்பநாளா  ஏன் பதிவே போடல?"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க  எங்கிற தைரியத்துல மறுபடியும் வந்திருக்கேன். (ஹும்..அப்பிடியே கேட்டுட்டாலும்...) எனக்கு மட்டும் பதிவு போடணும்னு ஆசை இல்லையா என்ன...???!!! எல்லாம் பி.எஸ்.என்.எல் காரனுங்கோ பண்ணின சதி.. கொய்யால பில்லு கட்டணுமாம்.. (அவனும்  நாலு மாசமா அத தான் சொல்லிகிட்டு இருக்கான்...!!! நானும் எப்பிடியாவது கட்டிடுவேன் என்கிற நம்பிக்கை'ல இருக்கேன்..)


                   ரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..

    சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில்  மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது...

    "எனி காபிக்கொட்டை மேட்டர்?" ஐயோ பன்னிக்குட்டி பறந்து பறந்து அடிப்பாரு... அப்போ அஜால் குஜால் 18 +  மேட்டர்? அதுக்கெல்லாம் நிரூபன் தான் லாயக்கு. ச்சும்மா நின்னு நிறுத்தி..நிதானமா விளையாடுவாரு...

   "திங்கிறத பத்தி போடலாம்'னா .... உணவுக்குன்னே ஒரு உலகம் இருக்கே?

அப்போ என்ன தான் பதிவு போடுறதாம்? பேசாமல் டாக்குத்தர வச்சி காமெடி கும்மி போடலாமா? வேணாம் ஒரு பய படிக்கமாட்டான்...
களிங்கர்? அவரு தான் எங்க இருகுக்கார்னே தெரியலியே?
   பெரிய கரடி'ய வச்சி............???? ஆவ்வ்..ஹாஸ்பிடல் செலவு யாரு பாக்குறதாம்?


   கவிதை? வேணவே வேணாம் மனோ  அருவா தூக்குற சத்தம் கேக்குது.

சொந்த சரக்க வச்சி ஏதாவது ட்ரை பண்ணலாமா? நான் மட்டும் தான் திரும்ப திரும்ப படிச்சிக்கனும்..

 ஆங்.. ஒரே ஐடியா.. சமையல் குறிப்பு.. மெதுவடை சுடுவது எப்படி? பேல்பூரி செய்வது எப்படி? கொண்டக்கடலை அவிப்பது எப்படி? இப்பிடி ஏதாவது.... கண்டிப்பா இப்படி பதிவு  போட்டா நாலுல இருந்து ஐந்து ஓட்டு இண்டிலில விழும்.. அது பத்தாதே?

 அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?         
    
                        அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                                               அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                 "பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர் சாட்சாத் நானே!!" 
 டிஸ்கி: புகைப்படங்களில் "எம்மா ராபர்ட்" அம்மணி.. நன்றி mr.skin கில்மா வெப்சைட்.  
     
.

Thursday, April 21, 2011

என்மேல் விழுந்த மழைத்துளியே....!!!!

எஸ்.ஏ. ராஜ்குமார் னு பேரவச்சுக்கிட்டா கட்டுரைதான் எழுதணும்'னு இல்ல... அவர் இசையமைப்பாளராவே   இருந்துக்கலாம்.. #கண்டுபிடிப்பு.

பெரும்பாலான படங்களை பல நேரங்களில்  தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி..   

 
 என்மேல் விழுந்த மழைத்துளியே.....
 
 ன் காதலை அவளிடம் தெரிவித்து நான்கு நாட்கள் ஆகிறது...
 பதில் சொல்வதற்கு அவள் கேட்டிருந்த நான்கு நாட்கள் இன்றோடு முடிகிறது... இன்று மாலை என்னை சந்திப்பதாக கூறியிருந்தாள்.. எனக்கு இன்று வாழ்க்கை பரீட்சையின் முடிவு வெளியாகும் நாள்.
   "என் காதலி ஒன்றும் தேவதை  இல்லை சுமாரான அழகு  தான்..." என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது... கேட்டால் எதார்த்தமான காதலாம்..
போங்கயா.. ரசனை கெட்டவங்களா... நான் அப்படி சொல்லமாட்டேன்..
 என் காதலி தேவதை. அழகு தேவதை.. அன்பு தேவதை..

என் முன்று வருட தோழி.. என் கூட பள்ளியில் படித்தவள்.. பெயர்  நிலானி.
(தமிழ் பெயர் தான்.)  பக்கத்து தெருவில் வசித்தாலும் ஒன்றாக ஒரே பள்ளிக்கு மிதிவண்டியில்  செல்வோம் .. ஒன்றாகவே மாலையில் வீடு திரும்பி..,  மாலை வகுப்புக்களுக்கு செல்வோம்.. அம்மா கடைக்கு மளிகை வாங்க  அனுப்பினாலும் அவளின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைக்கு தான் செல்வேன். சண்டை போட்டுக்கொண்ட நாட்கள் அறவே கிடையாது.. அவள் சண்டைபோட ஆரம்பித்தாலும் நான் விலகிக்கொள்வேன்.. எதிர்த்து பேசுவது இல்லை.. காரணம் நான் சண்டை போடுவதை விரும்புவதில்லை .. அவள் கோவமாக திட்டினாலும் நான் ஹிஹிஹி.. என்பதோடு நிறுத்திக்கொள்வேன் ..  திட்டும் போதுகூட அவள் கொள்ளை அழகு..
பள்ளிகாலம் முடிந்ததும் அவள் ஒரு மருந்துக்கடையில் தற்காலிகமாக வேலையில்  சேர்ந்தாள். எனக்கோ வேலை:, புதிய தொலைபேசி இணைப்புகள் விற்கவேண்டும்..
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள்,
 என் வீட்டு கதவு தட்டப்படுவது கேட்டு , திறந்து பார்த்தேன்..இரவு எட்டு மணி.
 முற்றத்தில், பௌர்ணமி வெளிச்சத்தில் நிலானி நின்றுகொண்டிருந்தாள்..
முதல் தடவை இரவில் வந்திருக்கிறாள். எதிர்பார்க்கவில்லை. வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தாள். அதுசரி தேவதை என்றால் வெள்ளையில்  தானே இருக்கவேண்டும்..
நிலா வெளிச்சத்தில்  நிலானி வெளிச்சம்.. முதல் தடவை காதல் எட்டிப்பார்த்தது..
. அதுவரை அவள் மேல் காதல் வந்திருக்கவில்லை..அந்த எட்டு மணி என்னை என்ன செய்தது என்று தெரியவில்லை.. வயிற்றில் தேன் கூட்டை கலைத்து விட்டது போன்ற உணர்வு .. அவள் நேராக என்னுடைய தங்கையிடம் வந்து, காதில் எதோ சொல்லிவிட்டு, என் அம்மாவிடமும் எதோ காதில் கூறினாள்., என்னிடமும் வந்து கூறுவாள் என்று எதிர்பார்த்தால் , அது தான் இல்லை..  அப்படியே என்னை பார்த்து ஒரு சிறிய புன்னகையை வீசிவிட்டு இடத்தை விட்டு நகரலானால். ஐயோ போறாளே என்று மனசு அடித்துக்கொண்டது..  அம்மாவிடம் அவள் என்ன கூறினாள் என்று கேட்டுக்கொள்ளவில்லை.. அவள் என்னிடம் கூறாமல் சென்றதால்தான் காதல் வந்தது.. அது ரகசியமாகவே இருக்கட்டும்.
   பின்பு அடிக்கடி தலைவலி, காய்ச்சல் எல்லாம் வர ஆரம்பித்தது....(வரவைத்துக்கொள்வேன்,..) நானே அவளின் கடைக்கு சென்று மாத்திரைகளை  வாங்கி வருவேன்..  "உங்கள் கடையில் ஏன் சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் விற்பதில்லை?" என்று ஒரு நாள் அவளை பார்த்து  கேட்டதற்கு, அவள் ஒரு கணம் திகைத்து, சிரித்து .. ... ..

......
          ........................அதெல்லாம் இருக்கட்டும்., இன்று எனக்கு அவளின் முடிவை கேட்க வேண்டும், வாருங்கள் அங்கே போகலாம்.
சென்னையில் பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த வணிக வளாகத்தில், ஒரு குளிர்கழி விற்பனை கடையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
மாலை. மணி  நான்கு ஆகிவிட்டால் மாலையா மதியமா? (உம்ம்ம் எல்லாம் காதல் படுத்தும் பாடு)

 கடிகாரத்தை நாற்பது தடவை பார்த்துவிட்டேன். அந்த மணி முள்ளிற்கு என்மேல் என்ன வெறுப்போ தெரியவில்லை, வேகமாக ஓடித்தொலையமாட்டேன்  என்கிறது,.. என்கையில் தாராளமாக பணமும், போதாதிற்கு கடனட்டையும் உள்ளது. அவளுக்கு பிடித்த எல்லாப்பொருட்களையும் வாங்கி கை நிறைய கொடுக்கவேண்டும்..

 என்னுடைய தொலைபேசியின் தொடுதிரையில் என்ன செய்கிறது என் விரல்கள்?  என் கண்கள் எங்கெல்லாமோ சென்று வருகிறது.. பதட்டம். பரபரப்பு... காணவில்லையே.. மணி இன்னுமா ஐந்தாகவில்லை? சிறிய  முள்ளு நான்கிலும், பெரிய முள்ளு ஆறிலும் இருந்தால்.... மணி ஐந்துதானே?...... இல்லையா?

தோ காற்று வீசுகிறது.. எனக்கு இரத்தம் உறைகிறது... என் தலைமுடி காற்றில் கலைகிறது.. உள்ளங்கையில்  வியர்க்கிறது... திரும்பிக்கொள்கிறேன்... மீண்டும் திரும்பி வாசலை பார்க்கிறேன். சிறுநீர் பை நிரம்பிவிட்டதாக மூளை குறுந்தகவல் அனுப்புகிறது..  .. வாசலில்
தேவதை.
  என் நிலானி... என் நிலா  நீ!!    ( இது எங்கிருந்து வந்தது..??)
 "ஹாய்..." என்றேன் சின்னதாய் கைகளை காட்டி.
நமக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையில்.. ஏகப்பட்ட ர்கொத்துள்.. எல்லாமே நான் வாங்கி வைத்தவை.
எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்..
அவளின் பார்வை, என்கண்களை குடைந்து சென்று  மூளையில் உள்ள சில நினைவு பதிவுகளை  செயலிழக்கச் செய்தது....

"எப்பிடி இருக்க?" அவள் பேசுகிறாள் தானே...? சந்தேகம் அவள் பாடுகிறாளா என்று.

 "நான் நன்றாக இருக்கிறேன்.." மேலும் சில சம்பாசனைகளின் பின்பு, எனக்கு அந்த பதில் கிடைத்தது.

 என்ன பதில்?

01 ) "நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?

02 ) "எனக்கு உன்னை பிடிக்கவில்லை"

03 ) "நான் இரவெல்லாம் யோசித்ததில், நானும் உன்னை காதலிக்கிறேன் என்று  நினைக்கிறேன்.. "

04 )"எனக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னை மறந்திடு."

05 ) " நான்  உன்னை காதலிக்கவில்லை !!"


எந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அல்லது எனக்கு என்ன பதில் கிடைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள்?

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

 டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.

Thursday, April 14, 2011

சங்கி..மங்கி சைனீஸ்...!!!

 இன்று என் ஷோரும்'கு   இரண்டு சைனீஸ் பிகர்ஸ்..  வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்..? வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே  வருவாங்க...)

மூனேமுக்கா  அடில ஒண்ணும்.., நாலற அடில ஒண்ணும். சுமாரான பிகர் தான்.. நம்ம கடைக்கு அதுவே போதும்..
நேரா என்கிட்ட வந்து...

 "மங் சுங் கிங்கிசாங்?"

  ம்ஊக்கும்ம்ம்.....நமக்கு தமிழே ததுங்கினத்தோம்.. இதுல சைனீஸ் வேறையா....

."மண்ணெண்ணெய் எல்லாம் விக்குறதில்ல.." இது நான்...

"மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...நொங்குநா???"
"இந்தாடி..ஒன்னு தமிழ்ல பேசு..இல்ல இங்கிலீஷ்'ல பேசு..சைனீஸ் மாலும் நகி.."

 "மாஞ்சி... ஜிகிஞ் கஞ்சு கானூ...."

 "அட சிறுக்கி.. ஆ யூ கம்பெட்டபிள்  வித் இங்கிலீஷ்?

   "ங்க்சுக்கின் மங்கு.."

     அந்த பொண்ணுங்க செல்போனை காட்டி.. பணத்தையும்  காட்டி இரண்டுக்கும் கனெக்சன் கொடுத்து காமித்தது..
கண்டுபுடிச்சுட்டேன்..இந்த ... இண்டு பொண்ணுங்களுக்கும் ரீ-சார்ச் பண்ணனுமாம்..."அட லூசு பொண்ணுங்களா... அத போயி செல்போன் கடைல கேளுங்க..இது டி.வி கடை.."
"மாஞ்சுங் ஈயர்டல் போடு கொங்க்ஜ்குஜாங்? 
 அந்த பொண்ணு வெளியில் தொங்கிக்கொண்டிருந்த ஏர்டெல் போர்டு வை கை காட்டியதும்..புரிந்து போனது.......
"அது ஏர்டெல் டி.டி.ஹெஜ் போர்டு..."
"மாஞ்சுங்?" (கையை நீட்டி  'என்ன"' என்பது போல் கேட்டாள்.. )
  "மூதேவி.. இது டி.வி கடை.   ரீ -சார்ச் கடை அந்த முக்குல இருக்கு போய் பண்ணிக்கோ.."

 அந்த பொண்ணுங்க முஞ்சி திடீர்னு மாறிவிட்டது.. கோபத்துடன் ஒருத்தி முறைத்தாள்...

  ஆத்தாடி.. ஒரு வேளை புரிஞ்சுடிச்சோ? முதேவின்னா சைனிஸ்லயும் கெட்ட வார்த்தையோ? இதுங்களுக்கு கராத்தே தெரிஞ்சிருக்குமோ?  பாத்தா அப்பிடி தெரியலியே?  ஒருவேளை  அடிவாங்கினால்தான் தெரியுமோ.. சமாளிடா சமாளி..  உள்மனது  நடுநடுங்கியது..

 ஆரம்பித்தேன்..

 "மாங்கிச்சாங் நொங்கு? என்றேன்..
   அந்த பெண் மீண்டும் முறைத்தாள்... ஒர்க்கவுட் ஆகலியே..போச்சுடா...
அந்த பெண் மீண்டும் "மான்கிச்சாங் மக்க்குநீச்ங்.." என்றாள்.. திட்டுறாளோ?
"அடி போங்கடி.." என்று அலுத்துக்கொண்டு, அவ்விடத்தை விட்டு நகருகையில்...

"ஒரு நிமிஷம் சார்.." என்றாள் அந்த சைனீஸ் பிகர்.. அட தமிழ் வருது.. இத முன்னமே பண்ணிருக்கலாமே..
"தமிழ் தெரியுமா? இத முன்னமே  பேசியிருக்கலாமே? சொல்லுங்க என்ன வேணும்?

"எங்களுக்கு    டி.டி.ஹெஜ்  தான் வேணும்.. கிடைக்குமா ??"

ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே பில் பண்ணிக்கொண்டேன்.. அதன் பின்பு முழுக்க முழுக்க தமிழ்லயே பேசினார்கள் இருவரும்..... பின்பு அந்த பொண்ணுங்க கிளம்பும் போது.. ஒருத்தி..,

"தமிழ் கத்துக்கிறது கஷ்டம்...   சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப  ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்.. "ரொம்ப  ஸாரி கேர்ள்ஸ்..!!!" .

 டிஸ்கி: சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல...!!

Tuesday, April 12, 2011

இரத்தப்படலம்.... ஒரு கலக்கல் காமிக்ஸ்..!!!

முன் அட்டைப்படம்...

 நமது ஹீரோவுக்கு  "மண்டையில் துளை போட்டு தோட்டாவை உள்ளே அனுப்பிய மகா பாதகன் யார்?" என்று கண்டு பிடிக்க வேண்டிய நிலை.. ஆனால் உள்ளே போன தோட்டா,அவனது நினைவுகள்   சேகரித்து வைத்திருக்கும் மூளையின் ஒரு பகுதியை துருப்பிடிக்கச் செய்துவிட்டது.... தன்னை நோக்கி நீட்டிய துப்பாக்கியின் விசையை யார், எதற்காக அழுத்தினான் என்ற கேள்விக்கு பதில் ஹீரோவிடம் இல்லை... தான் யார்,  ஊரு,பேரு, தெரியாத வளர்ந்துவிட்ட குழந்தை நம் ஹீரோ..... பின்பு ஜனாதிபதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி நமது ஹீரோ என்று தெரியவரும் போது சூடு பிடிக்கும் "இரத்தப்படலம்", அடுத்த 800 பக்கங்களிலும் பர..பர...
   

   லகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய  நமது ஹீரோ  "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக  இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில்  ரீ-என்ட்ரி  ஆகியிருக்கிறார்..

  ட்டுக்கடங்கா கதாப்பாத்திரங்கள்,  வெவ்வேறு கதைக்களம், வெவேறு நாட்டின் கலாச்சாரம் என ஒரு மகா, மெகா படைப்பின் உழைப்பு சாதாரணமானதல்ல..
 இங்கு நீங்கள் இரு ஜாம்பவான்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.. ஒன்று  கதாசிரியர் 'ஷான் வான் ஹாமே' இன்னொன்று  ஓவியர் 'வில்லியம் வான்ஸ்'.

'ஷான் வான் ஹாமே'
 தொழில் நிர்வாக படிப்பை முடித்துக்கொண்டு  எழுத்தாளராக பணியாற்றி வரும் பொழுதே ஒரு சில திரைப்படங்களிலும் வேலை பார்க்க தொடங்கினார்..
1984 'ல் இவருக்கு  "ராபட் லட்லாமின் " அவர்களின் நாவல் ஒன்றின் பாதிப்பில் தோன்றிய  'இரத்தப்படலம்' பின்னாட்களில் அவருக்கு பெரும் புகழும், பணமும் , விருதுகளும் வாங்கிக்குவித்தன....

தன் பின்னணியில், இவரின்  XIII என்ற  கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ஓவியர்  'வில்லியம் வான்ஸ்' மிக முக்கியமானவர்.

'வில்லியம் வான்ஸ்'.

1935 'ல் பிறந்திட்ட இவர்,  பிரெஞ்ச் காமிக்ஸ்  உலகின் முக்கியமான ஓவியராக திகழ்ந்துகொண்டிருக்கும் பொழுது  ( முதலைபடையினர், சாகச  வீரர் ரோஜர் ) 1984 'ல் இவர் வீட்டின் கதவை தட்டினார் கதாசிரியர் வான் ஹாமே.

 ந்த சந்திப்பு தான் பின்னாட்களில் இரத்தப்படலம் 18  பாகங்கள் வெளிவந்து மற்ற ஹீரோக்களுக்கு ஓய்வு கொடுக்கச்செய்தார்கள்.....
பின் அட்டையில்...
 காதல், நட்பு, சோகம், அழுகை, தவிப்பு, துரோகம், வஞ்சம், பழி... என ஒரு காமிக்ஸில் அனைத்து உணர்வுகளையும் ஒருசேர கொண்டுவந்த ஒரே கதை இதுவாகத்தானிருக்கும்..

 இதெற்கெல்லாம் மேலாக நமது லயன்.
   இக்கதையின் படைப்பாளர்களே 'இரத்தப்படலத்தை பாகம் பாகமாக வெளியிட,  நமது லயன் காமிக்ஸ் நிறுவனத்தினரோ செம தில்லாக...  ராட்சச  இதழாக 850 பக்கங்களில் வெளியிட்டது.. இந்த புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் மட்டுமே  தான் புரியும் , இது அத்தனை சுலபமில்லை  என்று ..
      ரூபாய் 200 விலையில், அட்டகாசமான அட்டைப்படத்தினுடனும்.. அழகு தமிழில் மொழி பெயர்ப்புடனும்..(லயன் காமிக்ஸ்'கே உரிய பாணி) ஆனந்த விகடன் சைஸில் வெளிவந்திருக்கும்  இந்த புத்தகம் உங்களுக்கு கிடைக்க மணி-ஆர்டர்  செய்திட வேண்டும்..
 வாசகர்களின் பேராதரவு கிடைக்க வேண்டுமென்றால்  ( 200  ரூபாய் ஆச்சே? )
இரத்தப்படலம்  கதைதான் சரியான தேர்வு என்று கதையை தெரிவு செய்ததாக தெரியவில்லை.  மாறாக, இரத்தப்படலம் போன்ற ஒரு  காமிக்ஸ் மைல்கல்  தமிழில் வெளியிடுவது பெருமையே என்ற எண்ணமாக இருக்கலாம்.

  யனின் எண்ணமும் நிறைவேறி விட்டது... லயனின் ஆசிரியர் திரு. எஸ்.விஜயன்  அவர்களுக்கு வந்த பாராட்டுக்களை அவரே சொன்னால் தான் உண்டு. தலையணை சைஸுக்கு இருக்கும்  இந்த புத்தகம் வைத்திருக்கும் ஓவ்வொருவருவரின்   மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் முன்னால்.., 200  ரூபாய்  ஒன்றுமே இல்லை.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு 858 பக்க காமிக்ஸ் ஆல்பம்.  உங்களிடம் உள்ளதா?

Thursday, April 7, 2011

நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் !!!

""அன்பு காதலனுக்கு..  தமிழ்ச்செல்வி  எழுதும் மடல்..
     இந்த கடிதம் உன்னை கோபப்படுத்தவோ..,  காயப்படுத்தவோ இல்லை..  உனக்கு இந்த கடிதத்தை படிக்க பிடிக்கவில்லை என்றால் கிழித்து போட்டுவிடு..

கடிதத்தை தொடர்வதற்கு நன்றிகள்...

அன்பே.. நீ என்னை விட்டு பிரிந்து சென்று சரியாக ஏழு  மாதங்கள் ஆகிவிட்டன.. எனக்கு உன் நினைவுகளோடு மட்டுமே வாழ்க்கை. உனக்கு அங்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையப்பெற்றதோ தெரியவில்லை..

என்னை உனக்கு முழுமையாக நினைவில் உள்ளதா? நாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது செய்த அத்தனை  விஷயங்களும்  உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?? 
 எனக்கு, நான் செய்த தவறுகள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளன.
நான் உன்னை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் என்று இப்போது தான் புரிகிறது..
நான் என்ன செய்வேன்?  முதன் முதலாக என்னை நீ பார்த்ததும் வந்து காதலை சொன்னாய்.. சட்டென்று  ஐ  லவ்  யூ சொல்வதற்கு  உன்னால் முடியும்.. நான் என்செய்வேன்.. அந்த தைரியம் இல்லாமல் போய்விட்டது...
 தொடர்ந்து என்னை  ஒவ்வொரு தடவையும் காண வரும்போது .., நான் உன்னை பார்ப்பதை விட்டு, அருகில் யார் இருக்கிறார்களோ என்ற பயம்  என்னை விரட்ட தொடங்கியது... என்னை கவரச்செய்வது உனக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லாமற் போனது.. நான் காதலில் விழுந்து விட்டேன் என்று உன்னால் உறுதியாக நம்பமுடிந்தது..

காதலித்த நாட்களில்.., என்னிடம் என்ன உனக்கு பிடித்தது என்று தெரியவில்லை.. ஆனால் நீ எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான்...
 நீ வாங்கித்தரும்  காட்பெர்ரி.., டெடி பேர்.., எதிர் பாராமல் கொடுக்கும் பரிசுகள்.. வாழ்த்து அட்டைகள்... என்னை முழுமையாக ஆட்டிபடைத்தன...

உன்னுடைய வண்டி எண் எனக்கு மறக்க முடியாதது.. உன் வண்டியில் சென்ற இடங்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.. உன்னால் தான் நான் சென்னையில் உள்ள  பல இடங்களை பார்க்க முடிந்தது..
இதற்கெல்லாம் மேலாக..
நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்..

அப்பொழுதெல்லாம்   நான் உனக்கு "மண்டு" தான்.. அதை ஏன் என்னிடம் கூறவில்லை..?? நீ வெள்ளைக்காரன் போல் நடந்து கொள்வாய்.. என்னிடம் சந்தேகத்தில்  ஒரு வார்த்தை கேட்டதில்லை..., என்  தேகத்தை கூட கேட்டதில்லை...  உன் பணமும், உன்  அதீத அழகும் என்னை மட்டும் தான் சந்தேகிக்க வைத்தது.. நீ எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறாய் என அறியாமலே இருந்துவிட்டேனே.. என் கையடக்க தொலைபேசியை ஒருநாள் வாங்கி பாத்திருக்கிறாயா?  அவன் யார், இவன் யார் என்று தொல்லை தந்திருக்கிறாயா? இல்லை.. இல்லவே இல்லை.. எங்கே போனாய்.. என்ன செய்துகொண்டிருந்தாய்.. என ஒரு கேள்வி சந்தேகத்தில் கேட்டதில்லை...
இதை நான்.., நீ என்னிடத்தில் அன்பாக இல்லை என்று விளஙகிக்கொண்டுவிட்டேன்....
 நான் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் என்று உனக்கு தெரியும். நான் தயிர்  சாதம் தான்,... நான்  சமையல், கோலம் , வீட்டு வேலை மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன்..., 

        உன் வீட்டைப்போல் , தோழனாக அப்பாவோ.. தோழியாக அம்மாவோ.. படுக்க ஒரு அறை, படிக்க ஒரு அறை, அனுமதி கேட்டு உன் அறைக்குள் வரும் அப்பாவோ எங்கள் வீட்டில் இல்லை.. 
 உன் குடும்பத்தை பார்த்ததும் மூச்சடைத்து போனது..  

பின்னாளில் என் தோழி உன்னை பற்றி தப்பு தப்பாக கூறி  என்னை உன்மேல் வெறுக்கச்செய்ததும்...  நான் உன்னை மாதிரி வெளிப்படையாக பேச தவறியதும்.. என் உள் காயங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாததும் நம் காதலுக்கு நானே தோண்டிய புதைகுழி.. உன்னை நான் ஒரு சதவிகிதம் கூட புரிந்து கொள்ளவில்லை என்பதை இப்போது புரிந்து வைத்திருக்கிறேன்..

இப்பொழுதெல்லாம் நான் ஒரு வெள்ளைக்காரி. நிமிர்ந்து நடக்கிறேன்.. வெளிப்படையாக பேசுகிறேன்.., ஆண்களின் உலகத்தை புரிந்து வைத்திருக்கிறேன்.., உலகத்தில் அன்பை விட ஒரு விஷயம் இல்லை என புரிந்துவிட்டது.. எல்லோரிடத்திலும் நட்பு ,  எனெக்கென ஒரு நண்பர்கள் கூட்டம்..  வாராவாரம் சினிமா.. ஷாப்பிங்..  என என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன்..
 கிரிக்கெட், அரசியல், உலக சினிமா.., மியுசிக்.., என நான் ரொம்ப பிஸி..
சரியா தப்பா என்று தெரியவில்லை... ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..

            நீ என்றால் எனக்கு கொள்ளை பிரியம் .. இப்பொழுது எனக்கு ஒரு ஆசை மட்டுமே.. "சில்லுன்னு   ஒரு காதல்" படத்தில் வருவது போல் உன்னோடு ஒருநாள் மட்டும் வாழ ஆசை.. ஆசை நிறைவேற்றி தருவாயா?  
 எனக்கு பதில் போட  விரும்பினால் தயவுசெய்து என்னுடைய  அலுவலக முகவரிக்கு போடு. 
 வீட்டில்,  கணவனுடன் விவாகரத்து,  இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.


                                                                                                              அன்பு (முன்னாள்) காதலி,
                                                                                                                   எஸ்.தமிழ்."" 

Sunday, April 3, 2011

நாலு காலு, ஒரு வாலு...!!

டிஸ்கி 01: இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே  ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல? )
     # முன் எச்சரிக்கை.

டிஸ்கி 02: கண்டிப்பா பதிவ படிச்சதுக்கப்புறம்தான் கமெண்ட் போடணும். ('சூப்பர், நல்லாயிருக்கு , கலக்கிட்டிங்க.. இந்த மாதிரி பொதுவான கமெண்ட் வாராம தடுக்கனுமில்ல?)
      #ஓனர்  ரொம்ப கறார்.


டிஸ்கி 03: என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார  இத்தனை  டிஸ்கி யா  ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும். 
      # கண்பிடென்ட் அவசியம்.

டிஸ்கி 04: டைட்டில பாத்து, எதோ கிளு கிளு மேட்டர்'ன்னு நினைச்சி ஏமாந்தா கம்பெனி பொறுப்பேற்க முடியாது.
      #தெளிவு.  


 டிஸ்கி 05: மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
         # பல்ப்.


டிஸ்கி 06: அப்போ டைட்டில் விளக்கம் ? ( அட பாஷு... நாமெல்லாம் என்னைக்கு பதிவுக்கு சம்பந்தமா டைட்டில் போட்டிருக்கோம்? )
             #ஹிஹிஹி...


டிஸ்கி 07:  இது முட்டாள்கள் தின பதிவு.
ஆனால் இன்று முட்டாள்கள் தினமில்லையே ன்னு கேக்குறிங்களா? ஹிஹிஹிஹி... பாஷு...,, முட்டாள் என்னைக்குமே முட்டாள் தான். என்னைக்கு ஏமாந்தா என்ன?
               #ஏமாந்த சோணகிரி...


 டிஸ்கி 08:  இந்தியா உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது. ஆட்ட நாயகன் டோனி, தொடர் நாயகன் யுவராஜ்.
 ஒரு பதிவு, ஒரு மேட்டர்.
                   #நீ கலக்கு சித்தப்பு.

 டிஸ்கி 09 :மூணு நடிகைங்களுக்கும் இரு ஒற்றுமை. (நீங்களே கண்டு பிடியுங்க...ஹிஹிஹி )
                     # ஒண்ணு வந்து...   மாதாவரம்.


டிஸ்கி 10:  இத்துடன் அனைத்து டிஸ்கிகளும் நிறைவுக்கு வருகின்றன... நன்றி வணக்கம்.டிஸ்கி 11 : அதான் முடிஞ்சிருச்சினு சொல்லுறேன்'ல? அப்புறம் ஏன் இன்னும் இங்கயே இருக்கீங்க.. .?
       # இன்ட்லி  ஓட்டு.  
  

Tuesday, March 29, 2011

கும்பகோணத்தில் கும்மி !!

டந்த நான்கு நாட்களாக  கும்பகோணத்தில்  கும்மி அடித்து விட்டு இப்போதுதான்  பாக்   டு  பார்ம். (சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்..)
கையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ  இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.

 இப்போ மேட்டருக்கு வருவோம்..
    தமிழ்நாட்டின்  மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன். எஞ்சியிருந்த கோயில்களை  கடந்த நான்கு நாட்களில் முடித்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.. (என்ன ..., 'மனம் கொத்தி பறவை' ரேஞ்சுக்கு இருக்குனு பாக்குறிங்களா? ஊம்.. சுயபுராணம்..)

நான் இப்போ ரெண்டு விஷயம்  சொல்லப்போறேன்... ரெண்டுமே கோயில்கள்  பத்தின விஷயம் தான்.,...
 

தமிழில் அர்ச்சனை..

   ஆச்சரியமான   விஷயம்.. அழகு தமிழில் அர்ச்சனை .
 புரியாத மொழியில் ஐயர் பூஜை  செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ  இருக்கும்... ஆனால் இங்கு.. அழகு தமிழில்   சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள்  அநேகம் பேர்  இந்த அர்ச்சனையை  காண  தமிழ்நாடுதான் வரவேண்டும் என நினைக்கிறேன்..)

 அதுமட்டுமில்லாமல்  வெளியூரில் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு தமிழிலேயே அந்த கோயிலின் ஸ்தல  புராணம், பெயர்க்காரணம்   சொல்லி பூஜை  செய்தது மகா ஆச்சரியம்...


 கலக்கல் கற்சிற்பம் !!!

    சீர்காழியின்  வைத்தீஸ்வரர்  கோயிலில் தொடங்கி.. சுப்பிரமணிய சுவாமி (திருவிடைக்கழி)  கோயில் வரை ஒவ்வொரு கோயிலின் அமைப்பும் , சிற்பங்களும் (முழுக்க முழுக்க கற்கள்)  ஆச்சரியம்,.... ஆச்சரியம்...


 மார்க்கண்டேயர்  கோயிலில் (அட அவர்தானுங்க.. என்றும் பதினாறு'னு மனுஷன்! ) அவர் தங்கியிருந்த  இடம்... அந்த கோயில் எல்லாமே கொள்ளை அழகு.

   இந்த சம்மருக்கு உங்க பேமிலியோடு டூர் அடிக்க  இத் திருத்தலங்களை தேர்வு செய்தீர்கள்   என்றால்  மனநிறைவு, நிம்மதி  கிடைப்பது மட்டுமில்லாமல்  இதைக்கொண்டே இரண்டு  பதிவுகளை தேத்தி விடலாம். (ஐடியா !!)

 டிஸ்கி: கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால்  ஸ்ரீ  கூகுல் ஆண்டவர்  உதவியோடு  இங்கே சில க்ளிக்'கள்.

 டிஸ்கி: ஐந்து  நாட்கள் வேலைக்கு விடுப்பு.  ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....

டிஸ்கி: சாமி மேட்டருங்கிறதால  ஓட்டு போடாம போனா,  ரொம்போ  டென்சனாயிடுவேன் ......
 

Wednesday, March 23, 2011

வானமளவு யோசிப்போம்.!!


  ன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன்.
 ( அல்லோவ்வ்.... விண்டோவ க்ளோஸ் பண்ணினாக் கொண்ணே புடுவேன்!)
தம்மாத்துண்டு கதை தாங்க... படிச்சிட்டு கமெண்ட் போடுங்க!
இந்த கதை சொல்லவேண்டிய அவசியத்தை கதை முடிவில் சொல்கிறேன்.


ஸோ கதை 
வானமளவு யோசிப்போம்.!!


  ஒரு குளவி 'ZZZZ ZZZ' என்று ஒரு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய காளை மாட்டை பார்த்தது. சீவிய கொம்பும், திமிலும், கழுத்து மணியுமாக நிதானமாக புல் மேய்ந்து, அரைத்து, அரைத்து... அவ்வப்போது 'முஷ்...உஷ்..' என்று மூச்சுவிட்டுக்கொண்டு, காலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தது கம்பீரக்காளை.!!!

         குளவி அதனருகில் சென்று அதன் கவனத்தை ஈர்க்க எண்ணி கண்ணுக்கு முன்னால் இங்குமங்கும் வட்ட வடிவிலும், எஸ் வடிவிலும் அட்டகாசமாகப் பறந்து சுற்றி வந்து.....
  "மாண்புமிகு திருவாளர் காளையர் அவர்களே.... நான் பறப்பது உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள் உடனே விலகி விடுகிறேன்" என்றது.

 காளை ஒரு கண்ணிமையைச் சற்று பெரிதாகதிறந்து குளவியைப் பார்த்தது.

 "அடேய் சின்னைப்பையா.... நீ இருந்தாலும் ஒன்று தான்.. பறந்தாலும் ஒன்றுதான். நீ இப்போது பேசியதால் தான் நீ இருப்பதையே கவனிக்க முடிந்தது. இதுவரை நீ இருந்தது கூட எனக்கு தெரியாது" என்று சொல்லி "உஷ்" என்று மூச்சு விட்டது. அந்த உஷ்ணத்தில், மூச்சு வேகத்தில் குளவி தள்ளப்பட்டு ஒரு மரத்தில் மோதிக்கொண்டு இறக்கை இழந்தது.

இந்த  கதையின் மோரல் என்னான்னா....
"மிகச்சிறிய மனங்களுக்குத் தான் மிகப்பெரிய கர்வங்கள்!" அப்பிடிங்கிறது தான்.  
எனவே, 

எல்லோருடைய ப்ளாக்கையும் படிப்போம்!
எல்லோருக்கும் கமெண்ட் போடுவோம்!!
எல்லோருக்கும் ஓட்டு போடுவோம்!!!

 டிஸ்கி: இது சுஜாதா ஸாரோட கதை. ( நிஜம்- நீதி!) பக்கம் 30. வெளியீடு ' நக்கீரன்.(இப்போ நான் வெளியிட்டிருக்கேன்.)

டிஸ்கி 2: நமீதா படம் போடாமலையே உங்கள படிக்க வச்சிட்டனே...அய்..அய்....

 டிஸ்கி 3: வானமளவு யோசிப்போம்'ங்கிற வார்த்தை "ஒவ்வொரு பூக்களுமே..."பாட்டுல வர்ர லிரிக்ஸ்'னு உங்க எல்லோருக்குமே தெரியும். (எனக்கும் தெரியும்!!)

பதிவு புடிச்சிருக்கா? மறக்காம குத்திட்டு போங்க... ஓட்டு....ஓட்டு!!
Saturday, March 19, 2011

தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

தேர்தல் பீவர் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த சமயத்துல உங்களுக்கெல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே கன்பியூசனா இருக்கும்....
கவலய விடுங்க.... அதுக்கு நான் சில ஐடியா தர்ரேன்......


ஓட்டு போடுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை.....


1)மொதல்ல.... உங்கள் ஏரியாவுக்கு பணம் பட்டுவாடா ஆகிடுச்சானு பாக்கனும்.....

2)உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்....

3)உங்களை விட வேறு யாருக்கேனும் அதிகமாக பணம் கிடைக்கிறதா எனவும் பார்க்கவும்...


4)எந்த கட்சி என்ன இலவசம் தருகிறது என லிஸ்ட் போட்டு கணக்கிட்டுக்கொள்ளவும்....
5)பின்பு அந்த லிஸ்ட்'டை சரிபார்த்து, எந்த கட்சி அதிகமாக இலவசங்கள் தருகிறதோ அந்த கட்சிக்கு குத்தவும் ஓட்டை. (பி.கு.- லிஸ்ட்'டில் கம்பியூட்டர், பைக்குகள் இருந்தால் அக்கட்ட்சிக்கு கண்ணை மூடிக்
கொண்டு குத்தவும்....)

6)கடந்த ஆட்சியின் ஊழல்கள் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்காதிங்க... பின்னாடி ஓட்டு போட வரும்போது கான்ஸ்ஸன்ரேஷன் மிஸ் ஆகும்!!7)இலங்கை தமிழனுக்காக அதிகம் யார் குரல் கொடுத்தது பத்தியெல்லாம் யோசிக்க தேவையில்ல...... அது நமக்கு தேவையுமில்ல......


8)""இலவசம் குடுக்குற கட்சிக்கு ஓட்டு போடாதே.... யாரு வேலைவாய்ப்பு,விலைவாசி, தமிழ் நாட்டின் எதிர்காலம் பத்தியெல்லாம் கவலைப்படுறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடு""னு உங்க பிரண்டு கூற நேரிடும்.... நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....
.

9)"ஊழல் இல்லா ஆட்சி அமைப்போம்!" என உதார் விடும் கட்சியை கழட்டி விட்டுடுங்க....

10)முக்கியமா வேட்பாளர் உங்க வீட்டுக்கு வந்தப்போ யாரு நல்லா கால்ல விழுந்து ஓட்டு கேட்டாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்.... தப்பில்ல! ( நல்ல டியோட்ரண்ட் வாசம் வந்திருந்திச்சின்னா, ஓட்டை ரெண்டா குத்திடுங்க....)

11)கவனிக்கவும்: வாட்டர் 20 ரூபாயா இருந்தா பரவால்ல.... குவாட்டர் விலை குறைப்பானுகளா?னு கேட்டு வச்சிக்குங்க......12)அரிசி 80 பைசாக்கு தர்ரோம்'னு எந்த கட்சி சொன்னாலும், ஓட்டு போடுவதற்கு தயங்காதிங்க.....( வெங்காயம் 100 ரூபாவாவே இருந்திட்டு போகட்டும்! அதனால நமெக்கென்ன நஷ்ட்டம்...???)

அவ்ளோ தான்.....
அப்புறமென்ன... உங்களுக்கேத்த கட்சிய தேர்ந்தெடுத்தாச்சா? நச்சுன்


னு குத்துங்க ஒரு குத்து.... (ஏது.... நீங்க எதிர்பாத்த தகுதிகளோட ரெண்டு மூனு கட்சி வருதா?....ம்ம்ம்.... என்ன பண்ணலாம்.... ஆங் ஐடியா..... அவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு அங்க ஒரு குத்து!
இவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு இங்க ஒரு குத்து... பதிவு புடிச்சிருந்தா இண்டிலில எனக்கொரு குத்து...ப்ளீஸ்!)

டிஸ்கி: டைட்டிலுக்கும் சப்ஜெக்ட்கும் சம்பந்தம் இருக்கிறதால.... காமெடி பதிவர்களின் விதிய மீறி செயல்பட்டதுக்காக எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்...!

டிஸ்கி: நமீதா பத்தி எதுவுமே எழுதாதிற்கும் மன்ச்சிக்கொங்கோகோவ்வ்.....Friday, March 11, 2011

கல்பாக்கமும் சில கண்டங்களும்!எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன பத்திதான் படிக்கப்போறிங்க..... அவனப்பத்தி தெரிஞ்சுக்கிட்டதும்
நீங்க தாராளாமா தூக்கு மாட்டிக்கலாம்.....
என்னுடன் ஷோரூம்'ல வேலை செய்கிறவன் தான் அவன்.... பெயர் பலராமன். (அவன பாலா'னு கூப்பிடுறதில்ல.... பல்ராம் நாய்டு'னு தான் கூப்பிடுவோம்.)

எப்போ பாத்தாலும் எழவு வீட்டுக்கு போன
வன் மாதிரி சோகமாதான்
இருப்பான்.
இந்த புது வருஷம் எல்லாருக்கும் எப்பிடி இருக்குன்னு தெரியல... பட், நம்ம பல்ராமுக்கு...???
இந்த புது வருசம் ஆரம்பிச்சதில இருந்து ......
நியூ இயர் அன்னைக்கி நம்ம பல்ராம் ஸ்வீட் வாங்குறதுக்கு ஒரு டபரா பைக்'ல பல்லாவரம் போயிருக்கான்,
இவனுக்குன்னே வெயிட் பண்ணிட்டிருந்த மாதிரி கப்'னு புடிச்சிட்டாங்க ட்ராபிக் போலீஸ். பயபுள்ளைக்கு லைஸன்ஸ் இருந்து என்ன பிரயோசனம்.... ?? பைக்கு'குதான் ஒன்னுமே இல்லையே? (ப்ரேக் பம்மல்'ல போட்டிருக்கான்... அது வந்து பல்லாவரத்துல நிண்ணுகிச்சு....போலீஸ்காரன் கிட்டே!)
பைன் போட்டிருக்காங்க...ரிஸீப்ட் கொடுத்திருக்காங்க.... வாங்கினவன் .மூடிட்டு வரவேண்டியது தானே? அங்கயே தெனாவெட்டா வாங்கின ரிஸிப்ட்'ல கிழிச்சு போட்டுட்டான்.
போலிஸ் கடுப்பாகி தூக்கிண்டு போயி ஸ்டேஸன்'ல வச்சிட்டாங்க.....
பின்னாடி நானும் என்னோட ஓனரும் ஸ்டேஸன் போகும் போது, அவன் ஜட்டியோடு "வருசம் பொறந்து முதல் நாளே கண்டமா?'ங்கிற மாதிரி உக்காந்து பாத்துக்கொண்டிருந்தான்....


தேதி அஞ்சுல அவன் சம்பளம் வாங்கிகொண்டு...'மச்சி நான் ஊருக்கு போறேன்,(கல்பாக்கம்)....வர்ரதுக்கு ஒரு வாரம் ஆகும்.. கடைய பாத்துக்க!!'னு கெளம்பினவன்...
ஊருக்குப்போன அடுத்த நாளே திரும்பிட்டான்.
'என்னடா ஆச்சு?'னு ஆச்சரியமா கேட்க...அதுக்கு அவன் திகிலா ஒரு பதில் சொன்னான்....
"மாப்ள... நான் லவ் பண்ணிட்டிருந்த பொண்ணுக்கு (சென்னை) திடீர்னு மாப்ள பாக்குறாங்க.... அதான் அவள நானே கல்யாணம் பண்ணிக்குறதுக்குகாக வந்துட்டேன்."
"கல்யாணம் பண்ண போறியா? என்னடா சொல்லுற?"
"வேற வழி தெரியல மாப்ள...."
அப்புறம் பொண்ண கடத்தி...கல்யாணம் பண்ணி ( சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷன் ல)
ஒரு மாசம் ஆள் ஆப்ஸ்காண்ட்.


திடீர்னு ஒரு நாள் வந்து நின்னான்.
"என்ன மாப்ள, எப்பிடி இருக்க?"
"அவசரமா காசு தேவை. அதுதான் அண்ணன் கிட்ட (ஓனர்) வாங்கலாம்னு வந்தேன்!!"
அட்வான்ஸ் வாங்கிகொண்டு கல்பாக்கம் போனவனுக்கு ரெண்டு நாள் கழிச்சு நான் போன் செய்தேன்.
""போறவழியிலயே காசு தொலைஞ்சி போச்சின்னும், வைஃப் கு கரண்ட் ஷாக் அடிச்சிருசின்னும், செலவுக்கு சுத்தமா காசில்லனும் சொன்னான்.""


பின்னர், ஒரு வாரம் கழிச்சு வேலைக்கு வந்தான்,
சென்னை ல வீடு பாக்குறேன் பேர்வழினு திரிஞ்சிட்டிருந்தான்...ஒன்றிரெண்டு தடவை ஊருக்கு போய் வந்தான்... அடிக்கடி போனில் போசினான்... இந்த மாசம் சம்பளம் கேட்டதுக்கு மேனேஜர், "உனக்கு பதினஞ்சாயிரம் ஓவர் ட்ராப்!"னு சொன்னாரு....
நேத்து கைபேசியில் அழைப்பு வந்ததும், மூஞ்சியெல்லாம் சுருங்கிபோச்சு!
"என்னாச்சு?"
"என்னோட வைஃப் கண்சீவ் ஆயிருக்கா....!"
"கங்கிராட்ஸ் மாப்ள..."னு கை கொடுத்ததிற்கு, கையை உதறியவன், ஓனரிடம் இன்னும் அஞ்சாயிரம் வாங்கிக்கொண்டு... மறுபடியும் ஊருக்கு கெளம்பினான்.....