
அட.... "என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர்'ல இருக்கு?''னு கேக்குறிங்களா ? பெருசா ஏதும் காரணம் இல்லைன்னாலும், பச்சை கலருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கு...
என்னன்னு பாக்கலாமா? (ஹல்லோ எங்க போறிங்க? வேணாம்'னாலும் நாங்க விடமாட்டோம்..)
"இச்சை மூட்டும் பச்சை நிறமே..." என்று வைரமுத்து பச்சையை பற்றி எழுதியிருக்கிறார்,... ( அவரு எழுதுவாரு.. தெரியாதா? நீ என்னலே எழுத வர்ரே? )
அவர் ஏன் அப்படி எழுதினார்?
காரணம் பச்சைக்கு ரைமிங்'ஆ இச்சை'ன்னு வந்ததால தான்... வேறென்ன?(மனோ.. ப்ளீஸ் அருவாள கீழ போடுங்க....)
இந்தியாவின் கிரீன் சிட்டி எது தெரியுமா? அதுக்கு முன்னாடி பெயருக்கு காரணம் சொல்லிடுறேன்... கிரீன் சிட்டி என்றால் பசுமை நகரம்... பசுமை என்றால் பச்சை பசேல் என்று இருக்கிற இடம்.. அது ஏன் பச்சையா இருக்கு?
ஏன் நீல கலர்ல இல்ல?
இதுக்கு பதில் சொல்லுற தகுதி இந்தியாவிலேயே பன்னிக்குட்டி ராம்சாமி ஒருவருக்கே உள்ளது என்பதால் நேரே (தப்பிச்சுட்டம்'ல...)
விஷயத்திற்கு வர்றேன்... இந்தியாவின் பசுமை நகரம் என்று அழைக்கப்படுகிற நகரம் புனே.
இதுக்கு என்ன அர்த்தம்?
*பச்ச மண்ணு அப்பிடின்னு சொல்லுறாங்களே? எந்த ஊர்ல மண் பச்ச கலர்ல இருந்திருக்கு?
*பச்சத்தண்ணி ங்கிறாங்களே?
தண்ணி எப்பிடி பச்ச கலர்ல? 'குடி'மக்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. (விக்கி உலகம் வகையறாக்கள்...)
*பச்சைபச்சையா பேசுறதுன்னா என்னங்க? ரொம்ப நாளா எனக்கு டவுட்டு.. (உங்கள்'ல யாருக்காவது சிவப்பு கலர்'ல பேசுற பழக்கம் இருக்கா?
*கிரீன் டீ தெரியுமா?
'கமீலியா சைனஸிஸ்' (பமீலா இல்லைங்க..) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் (தமிழேன்யா..!) சீனாவில் தோன்றியது,(இது ஒண்ணுதான் உண்மையிலேயே பச்ச கலர்ல இருக்கு!)
நான் ஏன் என்னுடைய ப்ளாக்'அ பச்சையா மாத்திட்டேன்'னா நாமேளும் விவசாயி'தாங்கிறத காமிக்க தான்.. யோவ்.. அவனவன் பூச்செடிக்கு தண்ணி ஊத்திட்டு விவசாயி என்கிறான்... நான் சொன்னா மட்டும் தப்பா...????
இத்துடன் அனைத்து மொக்கைகளும் முடிவுக்கு வருகின்றன...ஓகே நண்பர்களே.. நீங்க பச்சையா கமெண்ட்ஸ் போடுங்க... நான் கெளம்புறேன்...
டிஸ்கி:யாருக்காவது பச்சயா திட்டனும் போல இருந்தால் தனியே மெயிலில் திட்டவும்.ஏனென்றால் இது மிகவும் கன்னி... கண்ணியப்பர்... கண்ணியமான் அது என்ன செந்தில்...? எதோ சொல்வீ ங்களே? ஆங்..மிகவும் கண்ணியமான பதிவரால் நடாத்தப்படும் ப்ளாக்! கரைகட்'டா?... ம்ம்ம்...கெளப்புங்கள்.. ..
டிஸ்கி 02 : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி வெகு விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம்...
27 comments:
பச்சையா ஒரு கமண்டு... நல்லா இருக்குங்க.. ரஜினி நலம் பெற நானும் பிராத்திக்கிறேன்.
Green....?
i try to translate the post tittle in English....." please come to speak green green "
heeeeeee..... how is it?
மொக்கையுடன் சேர்த்து, அறிவியற் தகவல்களையும் பகிர்ந்துள்ளீர்கள். அருமையாக இருக்கிறது பச்சை...டெம்பிளேட்.
அடேய் ப.பு.
நான் ஒன்றும் பச்சையாய் திட்டலை. நான் சொல்ல வாறது, அடேய் பச்சப் புள்ள.
அவ்.......
மதுரை சரவணன் said...
பச்சையா ஒரு கமண்டு... நல்லா இருக்குங்க.. ரஜினி நலம் பெற நானும் பிராத்திக்கிறேன்.//
வருகைக்கும், வாழ்த்துக்கும், ஓட்டுக்கும் நன்றிகள்...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Green....?///
சரீங்..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
i try to translate the post tittle in English....." please come to speak green green "
heeeeeee..... how is it?//
கலக்கிட்ட போ...
நிரூபன் said...
மொக்கையுடன் சேர்த்து, அறிவியற் தகவல்களையும் பகிர்ந்துள்ளீர்கள். அருமையாக இருக்கிறது பச்சை...டெம்பிளேட்.//
நன்றி நண்பா...
நிரூபன் said...
அடேய் ப.பு.
நான் ஒன்றும் பச்சையாய் திட்டலை. நான் சொல்ல வாறது, அடேய் பச்சப் புள்ள.
அவ்.......///
ஹிஹிஹிஹிஹி...நன்றி மாப்பு...
ஆமா பன்னியை எதுக்கு இழுத்தீங்க இதுக்குள்ள??அவரு என்ன ஆராச்சில இருக்காரோ!!
அனால் தக்காளியை குடிமக்கள் லிஸ்டில் சேர்த்ததற்காக வெளிநடப்பு செய்கிறேன்!!
என்னய்யா தலைப்பு சரியில்லை அது இல்லை இது இல்லைன்னு...
ஹிஹி பதிவெழுத வந்துட்டாலே..இனி எல்லாமே சரியில்லை தான் உனக்கு ஹிஹி
மைந்தன் சிவா said...
ஆமா பன்னியை எதுக்கு இழுத்தீங்க இதுக்குள்ள??அவரு என்ன ஆராச்சில இருக்காரோ!!///
ஆமாப்பு... ரெண்டு நாளா பயபுள்ள எங்க இருக்கார்னே தெரியலியே? என்னாவா இருக்கும்?
மைந்தன் சிவா said...
அனால் தக்காளியை குடிமக்கள் லிஸ்டில் சேர்த்ததற்காக வெளிநடப்பு செய்கிறேன்!!//
இந்த தடவ மன்னிச்சுக்குங்க... அடுத்த தடவ மறக்காம உங்கள சேத்துக்கிறேன்...
மைந்தன் சிவா said...
என்னய்யா தலைப்பு சரியில்லை அது இல்லை இது இல்லைன்னு...
ஹிஹி பதிவெழுத வந்துட்டாலே..இனி எல்லாமே சரியில்லை தான் உனக்கு ஹிஹி///
எங்க அப்பா "லாயக்கில்ல"ன்னு தான் வைக்க சொன்னாரு... நான் தான் கேக்கல....
சட்டப்படி இருக்குது பாஸ்....
Please Visit this link..
http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html
பசுமை..அருமை..குளுமை.
http://zenguna.blogspot.com
அன்புடன் சஜீ... said...
சட்டப்படி இருக்குது பாஸ்....
Please Visit this link..
http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.ஹ்த்ம்ல்//
வரேன் ... வந்துக்கிட்டே இருக்கேன்...
குணசேகரன்... said...
பசுமை..அருமை..குளுமை.
http://zenguna.blogspot.கம///
பெருமை... நன்றி கருத்திட்கு...
ஆஹா பச்சைன்னா? கொசு வரும் என்கிறார்களே? அது உணமையா? சும்மா தமாஷ்! அருமையான கருத்து.
எலேய் மாப்ள நக்கலு!.......ஹிஹி......
பச்சை நிறமே பச்சை நிறமே......!
பச்சை பச்சையாய் என்னா ஒரு வெளக்கம்! :-)
இன்றுதான் உங்கள் தளம் பார்த்தேன்! வாழ்த்துக்கள்!
tamil444news.blogspot.com said...
ஆஹா பச்சைன்னா? கொசு வரும் என்கிறார்களே? அது உணமையா? சும்மா தமாஷ்! அருமையான கருத்து.//
கொசுவருமா? இருக்குற தொல்லைங்க பத்தாதா பாஸ்?
விக்கி உலகம் said...
எலேய் மாப்ள நக்கலு!.......ஹிஹி......
பச்சை நிறமே பச்சை நிறமே......!//
ஹிஹிஹிஹி....
ஜீ... said...
பச்சை பச்சையாய் என்னா ஒரு வெளக்கம்! :-)
இன்றுதான் உங்கள் தளம் பார்த்தேன்! வாழ்த்துக்கள்!///
ஆவோஜி...ஆவோஜி... ரொம்ப தேங்க்ஸ் ஜீ ...
கண்ணுக்கு குளிர்ச்சி எண்டாலும் பச்சை தான். சம்மதம் எண்டாலும் பச்சை தான்..
குளிர்ந்த நீரை தான் பச்சை தண்ணி என்பார்கள் என்று நினைக்கிறேன்.
நகைச்சுவையுடன் கொடுத்துள்ளீர்கள் நண்பா...நன்றாக உள்ளது.
Post a Comment