நண்பர்ஸ்..

Wednesday, May 18, 2011

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???

லங்கையிலிருந்து என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்களுக்காக எடிட் செய்திருக்கிறேன்...
வலி நிறைந்த அந்த கடிதத்தில் வெளிப்பட்ட சில கோபங்களை எழுத்தில் கொட்டியிருந்தார்...


"

இன்று மே 18 . கருப்பு சூரியன் நாள்.

 திமுக வீழ்ந்ததற்கு காரணம். என்னுடைய பார்வையில்.... 
கருணாநிதி
""".....இப்படியான போர்ச்சூழலில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் போது, தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கும் மதிப்புக்குரிய திரு,கருணாநிதி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்...
  எதுவும் நடக்கேயில்லை ... எங்களுக்கோ எதுவும் தெரியாத நிலை..தெரிந்து கொள்ள முடியாத நிலை... ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம்.. சண்டைகளுக்கு நடுவில் என் தங்கைக்கு ஒரு கால்  ஒடிந்துவிட்டது.. நானும் என்னுடைய அண்ணனும் எங்களுடைய உடைமைகளை எறிந்துவிட்டு தங்கையை தூக்கிக்கொண்டோம். வலி  பொறுக்கமுடியாமல் வீறிட்டாள்.. மருத்துவ உதவி இல்லை... சாப்பிடுவதற்கே உணவில்லை... ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் , முடியாமல் போகவே என் தங்கை இறைவனடி சேர்ந்தாள். 
 கண்களில் கண்ணீருடன் தொடந்து இடம் பெயர்ந்துகொண்டேயிருந்தோம்.. கண்களில் நான் கண்ட காட்சிகள் அனைத்தும் கொடூரமானவை...
நாங்கள் இப்படியாக இருக்க..
 கருணாநிதி அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம்..,... விடிவுகாலம் வரப்போகிறது என முழுமையாக நம்பிக்கொண்டிருந்தோம்... சண்டை நடந்துகொண்டிருக்கும் பொழுது பல கடிதங்கள் கருணாநிதி எழுதியிருக்கிறார்.. நாங்கள் இப்போது முள்வேலிக்கு நடுவில் இருக்கும் போது கூட கடிதங்கள் பல எழுதிக்கொண்டிருக்கிறார்...
எம்.ஜி.ஆர். மற்றும் பிரபாகரன்.


சந்தேகம் வந்துவிட்டது எங்களுக்கு.

நம்பிக்கை துரோகம்.. 

காங்கிரசசோடு தான் உங்களுக்கு கூட்டணியா? ஐயகோ நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியை துறந்து எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள்.. நடக்காத கதையல்லவா அது... காங்கிரஸ்காரர்கள் எங்கள் மீது அளப்பெரிய கோபம் கொண்டுள்ளார்களே... அவர்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லவா? மத்தியில் ஆளும் அவர்கள் தயவுடன் நீங்கள் ஆட்சியில்  இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு விடிவு காலம் எப்படி சாத்தியம்..??? 
            எங்கள் நம்பிக்கைதான் வீணாகிவிட்டது... பின்பு சில விஷயங்களும் கேள்விபட்டோம்... இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொலையாய் கொன்றுகொண்டிருக்கும் போது என்ன செய்தீர்கள்? நாங்கள் அந்நியத் தமிழர்கள் சரி... மீனவர்கள்? அவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்? 
                          அவர்கள் தானே உங்களுக்கு வாக்கிட்டு ஆட்சியில் அமர்த்தினார்கள்... இறந்த குடும்பம் கண்ணீருடன் இருக்கும் போது.. அப்போதும் கடிதமா எழுதிக்கொண்டு இருந்தீர்கள்? அல்லது இறந்தவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்துவிட்டு பேசாமல் இருந்து விட்டீர்களா?
உலகத்தமிழர்கள் அனைவரும் எங்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து நீங்களும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் பிரச்சினை தீர்ந்திருக்குமே?
அதில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டியிருந்ததோ?
அரசியல் செய்யவேண்டும் என்றால் இப்படி செய்திருக்கலாமே?
 நீங்க மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால் (காங்கிரஸ் மயிராப்போச்சு என்று விட்டுவிட்டு ...) எங்களுக்கு விடிவு பிறந்திருக்கும். தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத்தந்த தானே தலைவன் என்று உங்களை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்திருப்பார்களே...

 வரலாற்றின் திமுக ஆட்சியின் பக்கங்களில், தலைவன் நீங்களே இப்படி கரி பூசிக்கொண்டீர்களே  ... எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஈழத்தமிழன் நான் சொல்கிறேன்... நீங்கள் இனி ஒரு காலத்திலும் அரசாள முடியாது... ஆட்சி அமைக்க முடியாது... திமுக எனும் கட்சியை பேரீட்சை பழத்திற்கு கொடுத்து விடுங்கள்...

மேலும்....
 தமிழ் நாட்டின் தயவு இனி எங்களுக்கு தேவைப்படாது... உங்கள் அரசியலில் உச்ச நாகரீகம் இல்லை.. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டீர்கள்.. எங்களை அம்போ என்று  விட்டு விட்டது போல் தமிழ் நாட்டு மக்களை விட்டுவிடாதிர்கள்.. பணத்திற்கு ஓட்டு என்பதெல்லாம் இனி நடக்காத காரியம்... பின்பு ஓட்டிற்கு கையேந்த வேண்டும்..
ஜெயலலிதா.
      ஜெயலலிதா அம்மையாருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... தயவு செய்து உங்கள் லாபத்திற்காக ஈழம் பற்றி பேசாதீர்கள்.. ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசாதீர்கள்.. உங்கள் நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறதாம்... கரன்  (நான் தான்...)அடிக்கடி சொல்லுவான்.. இந்த பிரச்சினை எங்கள் ஊரில் இல்லை.. (எங்கள் ஊரில் தான் சில இடங்களில் மின்சார கம்பிகளே கிடையாதே...) பெற்றோல்... அதிக விலையாமே குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.. மிக முக்கியமாக ஊழல் செய்யாதிர்கள்.. மக்கள் பணத்தில் தான் நீங்கள் கை வைக்கிறீர்கள் என்பதை ந்ஜாபகத்தில் கொள்ளுங்கள்..பதில் சொல்லவேண்டும்.. 

மீண்டும் மீண்டும் சொல்ல்கிறேன்.. எங்களை மறந்துவிடுங்கள்.. உங்களின் ஒரு உதவியும் எங்களுக்கு தேவையில்லை.. 

நான் தமிழன்..
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும் 
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""

... என்று கடிதத்தை முடித்து  மின்னஞ்சல் செய்திருந்தான்... 
அவனுக்கு என்ன பதில் போடுவதென்று முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்...

37 comments:

நிரூபன் said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???//

அவ்........தலைப்பே செம ஹாட் மச்சி.

பாலா said...

நெஞ்சு பொருக்குதில்லையே.........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் என்னய்யா அரசியல் போட்டிருக்கே? இரு படிச்சுட்டு வர்றேன்!

சரியில்ல....... said...

நிரூபன் said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???//

அவ்........தலைப்பே செம ஹாட் மச்சி.//

பதிவு படிச்சீங்களா இல்லையா?

சரியில்ல....... said...

பாலா said...

நெஞ்சு பொருக்குதில்லையே.........//

எந்த தமிழனால் பொறுக்க முடியும்?

நிரூபன் said...

நிரூபன் said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???//

அவ்........தலைப்பே செம ஹாட் மச்சி.//

பதிவு படிச்சீங்களா இல்லையா?//

ஏன் இந்தக் கொலை வெறி சகோ.

பதிவைப் படித்துக் கொண்டு தான் இருக்கேன்.

நிரூபன் said...

அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.../

எங்கள் நம்பிக்கைகளை அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து காற்றில் பறக்க விட்டார். இன்று அதன் பிரது உபகாரத்தை உணர்ந்து ஐயா தலை கீழாய் தொங்குகிறார்.

சரியில்ல....... said...

நிரூபன் said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???//

அவ்........தலைப்பே செம ஹாட் மச்சி.//

பதிவு படிச்சீங்களா இல்லையா?//

ஏன் இந்தக் கொலை வெறி சகோ.

பதிவைப் படித்துக் கொண்டு தான் இருக்கேன்.//

ஹிஹிஹி... படிங்க..படிங்க..

நிரூபன் said...

நான் தனிழன்.
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும்
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..//

எங்களின் கடந்த கால யதார்த்த நிலமையினைப் புரிந்து கொண்டும், புரியாதது மாதிரிப் பம்பரம் ஆடிய திமுகவிற்கு மக்கள் இப்போது நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள்.

கடிதத்தின் ஒவ்வோர் வரிகளிலும், எங்களின் கடந்த கால அவல வாழ்வு..

கண்ணீரின் வெளிப்பாடாய் பேனா வழி வந்து, வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது.

சரியில்ல....... said...

நிரூபன் said...

அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.../

எங்கள் நம்பிக்கைகளை அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து காற்றில் பறக்க விட்டார். இன்று அதன் பிரது உபகாரத்தை உணர்ந்து ஐயா தலை கீழாய் தொங்குகிறார்.//

கரைகட்....

சரியில்ல....... said...

நிரூபன் said...

எங்களின் கடந்த கால யதார்த்த நிலமையினைப் புரிந்து கொண்டும், புரியாதது மாதிரிப் பம்பரம் ஆடிய திமுகவிற்கு மக்கள் இப்போது நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள்.

கடிதத்தின் ஒவ்வோர் வரிகளிலும், எங்களின் கடந்த கால அவல வாழ்வு..

கண்ணீரின் வெளிப்பாடாய் பேனா வழி வந்து, வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது.

ஆமாம் நிரூ.. மனதிற்கு ரொம்ப கவலையா இருக்கு...

பாலா said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் நருக்கென்று உள்ளது.

tommoy said...
This comment has been removed by the author.
rajaraman iyer said...

திமுகவின் தோல்வி ஈழத்துக்காக அல்லவே அல்ல.. அப்படி என்றால் ௨௦௦௯ தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்திருக்கும்.. இது மின்வெட்டு குடும்ப அரசியல், ச்பெக்ட்ரும் போன்றவற்றால் கிடைத்த தோல்வி.. தமிழ்நாட்டில் பலரும் எல் டி டி யை தீவிரவாத இயக்கமாக தான் பார்கிறார்கள்.. புலி தலைவர் பிரபாகரன் எல்லாம் வாங்கி தருவார் என்று இருந்தீரே இப்போ ஒரு ௫ வருஷமா என்ன திடீர்னு தமிழ்நாடு தான் பண்ணனும்னு.. காரணம் தி மு க வை ஆட்சியில் இருந்து தள்ளனும் அதான்..
அப்படியே நீங்க கேட்ட ஒடனே அம்மா அடிச்சி பிடிச்சி வந்து உதவிட்டு தான் மறுவேலை.. கலைஞசரவது அமைதியாக இருந்தார்.. இந்தம்மா உள்ள புடிச்சி போட்டு ஆப்பு அடிச்சிடும்.. அதான் சும்மா இப்படி "நீங்க எதுவும் செய்ய வேண்டாம்" நு ஒரு சீன போட்டு வெக்கறீங்க.. எல்லாம் அம்மா பாசம் .

tommoy said...

வேதனையான பதிவு.

மாலதி said...

//நான் தனிழன்.
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும்
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""//வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது.

சரியில்ல....... said...

rajaraman iyer said...

திமுகவின் தோல்வி ஈழத்துக்காக அல்லவே அல்ல.. அப்படி என்றால் ௨௦௦௯ தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்திருக்கும்.. இது மின்வெட்டு குடும்ப அரசியல், ச்பெக்ட்ரும் போன்றவற்றால் கிடைத்த தோல்வி.. தமிழ்நாட்டில் பலரும் எல் டி டி யை தீவிரவாத இயக்கமாக தான் பார்கிறார்கள்.. புலி தலைவர் பிரபாகரன் எல்லாம் வாங்கி தருவார் என்று இருந்தீரே இப்போ ஒரு ௫ வருஷமா என்ன திடீர்னு தமிழ்நாடு தான் பண்ணனும்னு.. காரணம் தி மு க வை ஆட்சியில் இருந்து தள்ளனும் அதான்..
அப்படியே நீங்க கேட்ட ஒடனே அம்மா அடிச்சி பிடிச்சி வந்து உதவிட்டு தான் மறுவேலை.. கலைஞசரவது அமைதியாக இருந்தார்.. இந்தம்மா உள்ள புடிச்சி போட்டு ஆப்பு அடிச்சிடும்.. அதான் சும்மா இப்படி "நீங்க எதுவும் செய்ய வேண்டாம்" நு ஒரு சீன போட்டு வெக்கறீங்க.. எல்லாம் அம்மா பாசம் .//

தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிகள்...

சரியில்ல....... said...

பாலா said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் நருக்கென்று உள்ளது//

நன்றி தங்களுடைய கருத்திற்கு.. ஆனால் அது ஒன்றும் நான் எழுதவில்லையே?

சரியில்ல....... said...

tommoy said...

வேதனையான பதிவு.//

கடிதத்தில் சில பகுதிகளை தான் தர முடிந்தது.. எனக்கு கடிதம் படித்து அழுகையே வந்து விட்டது... இயலாமை என்பது எவ்வளவு கொடூரமானது ......

சரியில்ல....... said...

மாலதி said...

//நான் தனிழன்.
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும்
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""//வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது.//

நன்றி தங்களின் கருத்திற்கு..

ராஜ நடராஜன் said...

தி.மு.க காரன்கிட்டேயிருந்து தமிழ் ஓட்டிப்போய் எங்கேயெல்லாமோ திசை தெரியாமல் பயணிக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலே செம.. இதுல பதிவு வேற தூக்குதே

Anonymous said...

கருனானிதியை நம்பி மோசம் போனோம் என்பது எனக்கு பரிதாமாகத்தான் தெரிகிறது.
ஆரை நம்பி ஆர் மோசம் போவது ?

கருனானிதியின் பொது வாழ்க்கை முழுக்கமுழுக்க தன்னலத்தால் பின்னப்பட்டது. எந்த முடிவையும் தனக்கு தனிப்பட்ட முறையில் நன்மையா என்றுதான் பார்ப்பார் என்று எல்லாருக்கும் தெரியும். அவரின் இறுதி வாழ்க்கை ஆண்டுகளான தற்போதும் அது மிக நன்றாகத்தெரிகிறது. தன் மகளுக்காக, இரண்டாவது மனைவிக்காக, தன் புதல்வர்களுக்காக ஆட்சியைப்பறி கொடுத்து ஓய்வு எனக்கு நல்லதுதான் எனச் சொல்லி மகிழ்கிறார்.

இவரைப்புரியாமல் இவர் தமக்கு சோனியாவிடன் சொல்லி தம்மெல்லாரையும் காப்பாற்றுவார் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்தது இலவு காத்த கிளிகளின் நம்பிக்கையே.
கிளிகளைத்தான் பரிதாபப்படலாம். இலவுக்கென்ன அது நன்றாக இருக்கும்.

இலவு என்றால் ஒரு பழம் மாதிரி தோன்றும் கொட்டை. அதைப்பழமென்று நினைத்து, ஒருநாள் பழுக்கும்' தாங்கள் அதைக் கொத்திச்சாப்பிடலாம் என்று கிளிகள் காத்துக்கொண்டே இருக்குமாம். பழம் பழுக்காது. கிளிகள் காத்து ஏமாந்ததுதான் மிச்சம்.

ஈழத்தமிழர்கள்தான் அக்கிளிகள்.

Anonymous said...

தி.மு.க பேரிச்சம்பழத்துக்கு கூட போகாது விஜயகந்த் அந்த இடத்தை பிடித்து விட்டார்

ராஜேஷ், திருச்சி said...

சொல்லிடான்யா இந்த ஊரை ஏமாத்தி பொழப்பை ஓட்டும் ஜோசியக்காரன். ! வாங்கின காசுக்கு அதிகமாவே கூவுராண்டா இவன். ..அம்மா இந்த அடிவருடிக்கு ஒரு வாரிய பதிவி கொடு

MANO நாஞ்சில் மனோ said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???///

ப்பூப்ப் முடியல......

சரியில்ல....... said...

ராஜ நடராஜன் said...

தி.மு.க காரன்கிட்டேயிருந்து தமிழ் ஓட்டிப்போய் எங்கேயெல்லாமோ திசை தெரியாமல் பயணிக்கிறது///

கருத்துக்களுக்கு நன்றி..

சரியில்ல....... said...

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலே செம.. இதுல பதிவு வேற தூக்குதே//

ஹிஹிஹி...

சரியில்ல....... said...

simmakkal said...

கருனானிதியை நம்பி மோசம் போனோம் என்பது எனக்கு பரிதாமாகத்தான் தெரிகிறது.
ஆரை நம்பி ஆர் மோசம் போவது ?

கருனானிதியின் பொது வாழ்க்கை முழுக்கமுழுக்க தன்னலத்தால் பின்னப்பட்டது. எந்த முடிவையும் தனக்கு தனிப்பட்ட முறையில் நன்மையா என்றுதான் பார்ப்பார் என்று எல்லாருக்கும் தெரியும். அவரின் இறுதி வாழ்க்கை ஆண்டுகளான தற்போதும் அது மிக நன்றாகத்தெரிகிறது. தன் மகளுக்காக, இரண்டாவது மனைவிக்காக, தன் புதல்வர்களுக்காக ஆட்சியைப்பறி கொடுத்து ஓய்வு எனக்கு நல்லதுதான் எனச் சொல்லி மகிழ்கிறார்.

இவரைப்புரியாமல் இவர் தமக்கு சோனியாவிடன் சொல்லி தம்மெல்லாரையும் காப்பாற்றுவார் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்தது இலவு காத்த கிளிகளின் நம்பிக்கையே.
கிளிகளைத்தான் பரிதாபப்படலாம். இலவுக்கென்ன அது நன்றாக இருக்கும்.

இலவு என்றால் ஒரு பழம் மாதிரி தோன்றும் கொட்டை. அதைப்பழமென்று நினைத்து, ஒருநாள் பழுக்கும்' தாங்கள் அதைக் கொத்திச்சாப்பிடலாம் என்று கிளிகள் காத்துக்கொண்டே இருக்குமாம். பழம் பழுக்காது. கிளிகள் காத்து ஏமாந்ததுதான் மிச்சம்.

ஈழத்தமிழர்கள்தான் அக்கிளிகள்.//

நல்ல தெளிவான கருத்துக்கள்.. நன்றி..

சரியில்ல....... said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தி.மு.க பேரிச்சம்பழத்துக்கு கூட போகாது விஜயகந்த் அந்த இடத்தை பிடித்து விட்டார்///

நீங்க சொன்னா சரி...

சரியில்ல....... said...

ராஜேஷ், திருச்சி said...

சொல்லிடான்யா இந்த ஊரை ஏமாத்தி பொழப்பை ஓட்டும் ஜோசியக்காரன். ! வாங்கின காசுக்கு அதிகமாவே கூவுராண்டா இவன். ..அம்மா இந்த அடிவருடிக்கு ஒரு வாரிய பதிவி கொடு///

ஹிஹிஹி... பாவம்யா அவரு.. பச்ச மண்ணு.. அவரபோயி..

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???///

ப்பூப்ப் முடியல......///

அதுக்கு கூடவா தேறாது?

யோகா.எஸ் said...

ஹிஹிஹி... பாவம்யா அவரு.. பச்ச மண்ணு.. அவரபோயி.. யாரு,ஆர்.கே.எஸ்.ஸா?சும்மா ஜோக் அடிக்காதீங்கண்ணே!

சரியில்ல....... said...

யோகா.எஸ் said...

ஹிஹிஹி... பாவம்யா அவரு.. பச்ச மண்ணு.. அவரபோயி.. யாரு,ஆர்.கே.எஸ்.ஸா?சும்மா ஜோக் அடிக்காதீங்கண்ணே!//

ஏது அண்ணனா? இதெல்லாம் நல்லால்ல.. எனக்கு பதினஞ்சி வயசு தான் ஆகுதாக்கும்.

சரியில்ல....... said...

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.//

நன்றி ... ஒரு சில மணி நேரங்களின் பின்பு உங்கள் பக்கம் வருகிறேன்...

சரியில்ல....... said...

நர்மதன் said...

இதையும் படியுங்க
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்//

படிச்சிட்டா போச்சி... த்தோ வர்ரேன்...

raja23 said...

amma vandhanchu.. paakalaam