நண்பர்ஸ்..

Wednesday, May 18, 2011

பேரீச்சம்பழத்திற்கா தி.மு.க....???

லங்கையிலிருந்து என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்களுக்காக எடிட் செய்திருக்கிறேன்...
வலி நிறைந்த அந்த கடிதத்தில் வெளிப்பட்ட சில கோபங்களை எழுத்தில் கொட்டியிருந்தார்...


"

இன்று மே 18 . கருப்பு சூரியன் நாள்.

 திமுக வீழ்ந்ததற்கு காரணம். என்னுடைய பார்வையில்.... 
கருணாநிதி
""".....இப்படியான போர்ச்சூழலில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் போது, தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கும் மதிப்புக்குரிய திரு,கருணாநிதி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என நம்பிக்கை கொண்டோம்... எங்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்...
  எதுவும் நடக்கேயில்லை ... எங்களுக்கோ எதுவும் தெரியாத நிலை..தெரிந்து கொள்ள முடியாத நிலை... ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம்.. சண்டைகளுக்கு நடுவில் என் தங்கைக்கு ஒரு கால்  ஒடிந்துவிட்டது.. நானும் என்னுடைய அண்ணனும் எங்களுடைய உடைமைகளை எறிந்துவிட்டு தங்கையை தூக்கிக்கொண்டோம். வலி  பொறுக்கமுடியாமல் வீறிட்டாள்.. மருத்துவ உதவி இல்லை... சாப்பிடுவதற்கே உணவில்லை... ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் , முடியாமல் போகவே என் தங்கை இறைவனடி சேர்ந்தாள். 
 கண்களில் கண்ணீருடன் தொடந்து இடம் பெயர்ந்துகொண்டேயிருந்தோம்.. கண்களில் நான் கண்ட காட்சிகள் அனைத்தும் கொடூரமானவை...
நாங்கள் இப்படியாக இருக்க..
 கருணாநிதி அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம்..,... விடிவுகாலம் வரப்போகிறது என முழுமையாக நம்பிக்கொண்டிருந்தோம்... சண்டை நடந்துகொண்டிருக்கும் பொழுது பல கடிதங்கள் கருணாநிதி எழுதியிருக்கிறார்.. நாங்கள் இப்போது முள்வேலிக்கு நடுவில் இருக்கும் போது கூட கடிதங்கள் பல எழுதிக்கொண்டிருக்கிறார்...
எம்.ஜி.ஆர். மற்றும் பிரபாகரன்.


சந்தேகம் வந்துவிட்டது எங்களுக்கு.

நம்பிக்கை துரோகம்.. 

காங்கிரசசோடு தான் உங்களுக்கு கூட்டணியா? ஐயகோ நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியை துறந்து எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள்.. நடக்காத கதையல்லவா அது... காங்கிரஸ்காரர்கள் எங்கள் மீது அளப்பெரிய கோபம் கொண்டுள்ளார்களே... அவர்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லவா? மத்தியில் ஆளும் அவர்கள் தயவுடன் நீங்கள் ஆட்சியில்  இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு விடிவு காலம் எப்படி சாத்தியம்..??? 
            எங்கள் நம்பிக்கைதான் வீணாகிவிட்டது... பின்பு சில விஷயங்களும் கேள்விபட்டோம்... இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொலையாய் கொன்றுகொண்டிருக்கும் போது என்ன செய்தீர்கள்? நாங்கள் அந்நியத் தமிழர்கள் சரி... மீனவர்கள்? அவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்? 
                          அவர்கள் தானே உங்களுக்கு வாக்கிட்டு ஆட்சியில் அமர்த்தினார்கள்... இறந்த குடும்பம் கண்ணீருடன் இருக்கும் போது.. அப்போதும் கடிதமா எழுதிக்கொண்டு இருந்தீர்கள்? அல்லது இறந்தவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்துவிட்டு பேசாமல் இருந்து விட்டீர்களா?
உலகத்தமிழர்கள் அனைவரும் எங்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து நீங்களும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் பிரச்சினை தீர்ந்திருக்குமே?
அதில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டியிருந்ததோ?
அரசியல் செய்யவேண்டும் என்றால் இப்படி செய்திருக்கலாமே?
 நீங்க மக்களை ஒன்று திரட்டி போராடியிருந்தால் (காங்கிரஸ் மயிராப்போச்சு என்று விட்டுவிட்டு ...) எங்களுக்கு விடிவு பிறந்திருக்கும். தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத்தந்த தானே தலைவன் என்று உங்களை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்திருப்பார்களே...

 வரலாற்றின் திமுக ஆட்சியின் பக்கங்களில், தலைவன் நீங்களே இப்படி கரி பூசிக்கொண்டீர்களே  ... எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஈழத்தமிழன் நான் சொல்கிறேன்... நீங்கள் இனி ஒரு காலத்திலும் அரசாள முடியாது... ஆட்சி அமைக்க முடியாது... திமுக எனும் கட்சியை பேரீட்சை பழத்திற்கு கொடுத்து விடுங்கள்...

மேலும்....
 தமிழ் நாட்டின் தயவு இனி எங்களுக்கு தேவைப்படாது... உங்கள் அரசியலில் உச்ச நாகரீகம் இல்லை.. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டீர்கள்.. எங்களை அம்போ என்று  விட்டு விட்டது போல் தமிழ் நாட்டு மக்களை விட்டுவிடாதிர்கள்.. பணத்திற்கு ஓட்டு என்பதெல்லாம் இனி நடக்காத காரியம்... பின்பு ஓட்டிற்கு கையேந்த வேண்டும்..
ஜெயலலிதா.
      ஜெயலலிதா அம்மையாருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... தயவு செய்து உங்கள் லாபத்திற்காக ஈழம் பற்றி பேசாதீர்கள்.. ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசாதீர்கள்.. உங்கள் நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறதாம்... கரன்  (நான் தான்...)அடிக்கடி சொல்லுவான்.. இந்த பிரச்சினை எங்கள் ஊரில் இல்லை.. (எங்கள் ஊரில் தான் சில இடங்களில் மின்சார கம்பிகளே கிடையாதே...) பெற்றோல்... அதிக விலையாமே குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.. மிக முக்கியமாக ஊழல் செய்யாதிர்கள்.. மக்கள் பணத்தில் தான் நீங்கள் கை வைக்கிறீர்கள் என்பதை ந்ஜாபகத்தில் கொள்ளுங்கள்..பதில் சொல்லவேண்டும்.. 

மீண்டும் மீண்டும் சொல்ல்கிறேன்.. எங்களை மறந்துவிடுங்கள்.. உங்களின் ஒரு உதவியும் எங்களுக்கு தேவையில்லை.. 

நான் தமிழன்..
நாம் தமிழர்.
ஈழம் வீழ்ந்தாலும்,
ஈரம் காய்ந்தாலும் 
வீரம் வீழும் என்று நினைத்தாயோ..""

... என்று கடிதத்தை முடித்து  மின்னஞ்சல் செய்திருந்தான்... 
அவனுக்கு என்ன பதில் போடுவதென்று முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்...