நண்பர்ஸ்..

Saturday, March 19, 2011

தேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......!!!

தேர்தல் பீவர் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த சமயத்துல உங்களுக்கெல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே கன்பியூசனா இருக்கும்....
கவலய விடுங்க.... அதுக்கு நான் சில ஐடியா தர்ரேன்......


ஓட்டு போடுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை.....


1)மொதல்ல.... உங்கள் ஏரியாவுக்கு பணம் பட்டுவாடா ஆகிடுச்சானு பாக்கனும்.....

2)உங்களுக்கு கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை கன்பஃர்ம் செய்து கொள்ளவும்....

3)உங்களை விட வேறு யாருக்கேனும் அதிகமாக பணம் கிடைக்கிறதா எனவும் பார்க்கவும்...


4)எந்த கட்சி என்ன இலவசம் தருகிறது என லிஸ்ட் போட்டு கணக்கிட்டுக்கொள்ளவும்....
5)பின்பு அந்த லிஸ்ட்'டை சரிபார்த்து, எந்த கட்சி அதிகமாக இலவசங்கள் தருகிறதோ அந்த கட்சிக்கு குத்தவும் ஓட்டை. (பி.கு.- லிஸ்ட்'டில் கம்பியூட்டர், பைக்குகள் இருந்தால் அக்கட்ட்சிக்கு கண்ணை மூடிக்
கொண்டு குத்தவும்....)

6)கடந்த ஆட்சியின் ஊழல்கள் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்காதிங்க... பின்னாடி ஓட்டு போட வரும்போது கான்ஸ்ஸன்ரேஷன் மிஸ் ஆகும்!!



7)இலங்கை தமிழனுக்காக அதிகம் யார் குரல் கொடுத்தது பத்தியெல்லாம் யோசிக்க தேவையில்ல...... அது நமக்கு தேவையுமில்ல......


8)""இலவசம் குடுக்குற கட்சிக்கு ஓட்டு போடாதே.... யாரு வேலைவாய்ப்பு,விலைவாசி, தமிழ் நாட்டின் எதிர்காலம் பத்தியெல்லாம் கவலைப்படுறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடு""னு உங்க பிரண்டு கூற நேரிடும்.... நம்பாதிங்க.... அடிச்சுக்கூட சொல்லுவாங்க... அப்பயும் நம்பா
திங்க....
.





9)"ஊழல் இல்லா ஆட்சி அமைப்போம்!" என உதார் விடும் கட்சியை கழட்டி விட்டுடுங்க....

10)முக்கியமா வேட்பாளர் உங்க வீட்டுக்கு வந்தப்போ யாரு நல்லா கால்ல விழுந்து ஓட்டு கேட்டாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்.... தப்பில்ல! ( நல்ல டியோட்ரண்ட் வாசம் வந்திருந்திச்சின்னா, ஓட்டை ரெண்டா குத்திடுங்க....)

11)கவனிக்கவும்: வாட்டர் 20 ரூபாயா இருந்தா பரவால்ல.... குவாட்டர் விலை குறைப்பானுகளா?னு கேட்டு வச்சிக்குங்க......



12)அரிசி 80 பைசாக்கு தர்ரோம்'னு எந்த கட்சி சொன்னாலும், ஓட்டு போடுவதற்கு தயங்காதிங்க.....( வெங்காயம் 100 ரூபாவாவே இருந்திட்டு போகட்டும்! அதனால நமெக்கென்ன நஷ்ட்டம்...???)

அவ்ளோ தான்.....
அப்புறமென்ன... உங்களுக்கேத்த கட்சிய தேர்ந்தெடுத்தாச்சா? நச்சுன்


னு குத்துங்க ஒரு குத்து.... (ஏது.... நீங்க எதிர்பாத்த தகுதிகளோட ரெண்டு மூனு கட்சி வருதா?....ம்ம்ம்.... என்ன பண்ணலாம்.... ஆங் ஐடியா..... அவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு அங்க ஒரு குத்து!
இவங்க கிட்ட வாங்கின துட்டுக்கு இங்க ஒரு குத்து... பதிவு புடிச்சிருந்தா இண்டிலில எனக்கொரு குத்து...ப்ளீஸ்!)

டிஸ்கி: டைட்டிலுக்கும் சப்ஜெக்ட்கும் சம்பந்தம் இருக்கிறதால.... காமெடி பதிவர்களின் விதிய மீறி செயல்பட்டதுக்காக எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்...!

டிஸ்கி: நமீதா பத்தி எதுவுமே எழுதாதிற்கும் மன்ச்சிக்கொங்கோகோவ்வ்.....