நண்பர்ஸ்..

Tuesday, May 17, 2011

இரண்டு மாதங்கள் மட்டும் புகை.

ங்களுக்காக சில கருப்பு வெள்ளை கால சினிமா விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். முன்னாடியே சொல்லிடுறேன்.கண்டிப்பாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டவை. படித்தவற்றை பகிர்ந்துகொள்ளும் நோக்கம் மட்டுமே!!!

01 )மஞ்சரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார் நடித்த முதல் படம் "பக்த ராமதாஸ்".
நம்பியார் மற்றும் ஜெமினி கணேஷன்.


படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூபாய் 40. படத்தில் அவர் சில தெலுங்கு வசனங்கள்  பேசி நடித்திருப்பார்.

நடிகவேள்.
  அவரின் இரண்டாவது படமாகிய "இன்ப சாகரன்" என்ற படம் ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டதால் படம் வெளிவரவேயில்லை. 1938 -ம் வருடம் ஜி.பட்டு என்பவர் டைரக்ட் செய்த அந்த படம் 80  நாட்கள் படமாக்கப்பட்டிருந்தது.

 02 ) திரைப்பட  விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  கலைவாணர் என்.எஸ்.கே.., "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்.."என ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பேசுவதை நிறுத்திவிட்டார். வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட என்.எஸ்.கே, ஆங்கிலத்தில் பேச தொடங்கியதும் கூட்டமே வியப்பில் ஆழ்ந்தது.
        மீண்டும் பேச தொடங்கிய கலைவாணர் "எனக்கு அவ்வளவு தான் தெரியும்.அதற்குமேல் ஆங்கிலம் பேச தெரியாது" என்று மெள்ளச்சொல்ல.. அரங்கம் அதிர  சிரிப்பு. கலைவாணர் கலைவாணர் தான்.

03 )நடிகர் சிவகுமாரின் அறையில் ஒரு ஓவியம் எப்போதுமே கண்முன்னே தெரியும்படி வைத்திருப்பார். அவர் வரைந்த ஓவியம் தான். "அது நான்  1956 -ல் சினிமாவிற்கு வருமுன்னர் நான் வரைந்து, ஜெமினி கணேசன் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட ஓவியம்" என பூரிக்கிறார் சிவகுமார்.

 04 ) சென்னை இந்திரா நகரில் 'பிரேமா' என்ற பெண்மணி கொலையுண்ட வீட்டிற்கு குடிவருவதற்கு யாருமே துணிந்து முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் விஷயம் கேள்விபட்டு, "எனக்கும் பேயிற்கும் அப்படியொரு ராசி என சிரித்துக்கொண்டே "குடிவந்தார்.
 அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

வில்லன்  நம்பியார்.
05 ) "உங்கள் கணவர் புகைப்பிடிக்கிறாரே.. அதற்கு நீங்கள் ஆட்சேபனை சொல்வதில்லையா?"என்ற ஆனந்த விகடன் கேள்விக்கு பதில் கூறினார் திருமதி ருக்மணி நம்பியார்.
 "இல்லீங்க. வருசத்திற்கு இரண்டே மாதம் தான் சிகரெட் குடிப்பார். மீதி மாதங்களில் குடிக்கமாட்டார். அது என்னவோ அப்படியொரு பழக்கம்." என்கிறார்.

06 ) தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் கதாநாயனாக நடித்த முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் பாணி படம்தான். "இரவும் பகலும்" என்ற  அந்த படத்தில்   ஒரு காட்சிக்கு  'டூப்' போடாமல் நடித்து,  10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவேண்டியதாய் போயிற்று. 


07 ) தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு திரைப்படங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன . அவை எவை என  கீழே படங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


700 நாட்கள் ஓடிய சந்திரமுகி.
3 தீபாவளி தொட்ட ஹரிதாஸ்.
டிஸ்கி 01:நன்றி ஆனந்த விகடன். குமுதம், கூகிள் .

டிஸ்கி 02:  நன்றி உங்களுக்கும். மீண்டும் ஒரு மொக்கை பதிவில் சந்திப்போம்.

21 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தங்களின் தகவல் தொகுப்பு வியப்பளிக்கிறது! ஆச்சரியம் மிக்க அரிய தகவல்களை திரட்டித்தந்த உங்களுக்கு " சாம்பல் மகிழூந்து " விருது தரலாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்படியான அரும்பெரும் தகவல்களை திரட்ட தாங்கள் மேற்கொண்ட, இடைவிடாத முயற்சிகளை, விதந்து பாராட்டும் அதேவேளை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து நமக்கு யாதொன்றும் ஐயமில்லை என்பதையும், இவ்விடம் உறுதிபடக் கூறுகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அரிய புகைப்படங்களையும் அது குறித்து நிற்கும் விந்தைமிகு தகவல்களையும் உங்களால் மட்டுமே திரட்ட முடியும்! எங்கனம் இப்படியான தகவல்களைப் பெறுகிறீர்கள்?

சரியில்ல....... said...

எலேய்.. என்னலே சொல்லுற? புரியறாப்ல சொல்லு...

Chitra said...

தகவல்களும் படங்களும் - classic movie collection.

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அரிய புகைப்படங்களையும் அது குறித்து நிற்கும் விந்தைமிகு தகவல்களையும் உங்களால் மட்டுமே திரட்ட முடியும்! எங்கனம் இப்படியான தகவல்களைப் பெறுகிறீர்கள்?//

யோவ்..இந்த லொள்ளு தானே வேணாங்கிறது.. அதான் பர்ஸ்ட்'டே சொன்னேன்ல... மேட்டர் எல்லாமே சுட்டதுன்னு... அப்புறமென்ன?

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அரிய புகைப்படங்களையும் அது குறித்து நிற்கும் விந்தைமிகு தகவல்களையும்....//

படுவா... இது அரிய புகைப்படமா? நானே ஏதேதோ பதிவ போட்டு ஒப்பேத்திட்டிருக்கேன்.. அது புடிக்கலியா?

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தங்களின் தகவல் தொகுப்பு வியப்பளிக்கிறது! ஆச்சரியம் மிக்க அரிய தகவல்களை திரட்டித்தந்த உங்களுக்கு " சாம்பல் மகிழூந்து " விருது தரலாம்!//

என்னா ஊந்து? வாணாம்...வாணாம்.. அப்பாலிக்கா உன்னோட ப்ளாக் வந்து நாரடிச்சுப்புடுவேன்...

சரியில்ல....... said...

Chitra said...

தகவல்களும் படங்களும் - classic movie collection.///

வாங்க மேடம்.. என்ன என்னமோ சொல்லவந்து பாதியிலேயே நிறுத்திட்டிங்க...ம்ம்ம்... சொல்லுங்க..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் சாம்பல் மகிழூந்து என்றால்,சாம்பலை ஆஸ், என்றும் மகிழூந்தை கார் என்றும் சொல்வோம்! ஆகவே " சாம்பல் மகிழூந்து " என்றால் " ஆஸ்கார் " என்று அர்த்தம்! ஹி ஹி ஹி!!!!

தம்பி கூர்மதியன் said...

ஏ து.. துவா.. துழா.. துவழ.. அட கருமம்.. ஏதோ ஒண்ணு.. யோவ்.. அருமையான தகவல்னு மட்டும் சொல்லிகிடுறன்..

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் சாம்பல் மகிழூந்து என்றால்,சாம்பலை ஆஸ், என்றும் மகிழூந்தை கார் என்றும் சொல்வோம்! ஆகவே " சாம்பல் மகிழூந்து " என்றால் " ஆஸ்கார் " என்று அர்த்தம்! ஹி ஹி ஹி!!!!//

இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி உனக்கு யார்யா சொல்லித்தர்ரா?

சரியில்ல....... said...

தம்பி கூர்மதியன் said...

ஏ து.. துவா.. துழா.. துவழ.. அட கருமம்.. ஏதோ ஒண்ணு.. யோவ்.. அருமையான தகவல்னு மட்டும் சொல்லிகிடுறன்..//

நாசமாபோச்சி.. ஏன்யா தொழாவுற,... பதிவ படிச்சிட்டுதான் சொல்லுறியா இல்ல.. குத்துமதிப்பா குத்துறியா?

தம்பி கூர்மதியன் said...

படிச்சிட்டு தான்யா சொல்லுறேன்.. சிவக்குமார் மேட்டரு, மூணு வருச மேட்டரு எல்லாம் தெரிஞ்சது.. அந்த சிகரட்டு பழக்கம்லாம் புதுசு.. ஏதோ தெரிஞ்சுகிட்டேன்.. உம் பேரை சொல்ல தான் ரொம்ப முக்கிட்டன்.. இருந்தும் இன்னும் என்னால சொல்லமுடியல

சரியில்ல....... said...

தம்பி கூர்மதியன் said...

படிச்சிட்டு தான்யா சொல்லுறேன்.. சிவக்குமார் மேட்டரு, மூணு வருச மேட்டரு எல்லாம் தெரிஞ்சது.. அந்த சிகரட்டு பழக்கம்லாம் புதுசு.. ஏதோ தெரிஞ்சுகிட்டேன்.. உம் பேரை சொல்ல தான் ரொம்ப முக்கிட்டன்.. இருந்தும் இன்னும் என்னால சொல்லமுடியல//

யோவ்.. இப்பயெல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னு தானேயா "சரியில்ல"அப்பிடீன்னு அழகா பெயரு வச்சிருக்கேன்..கூப்பிட்டிட்டு போவியா...

தம்பி கூர்மதியன் said...

என் நண்பன எப்படி உண்மையில்லாத பெயரை சொல்லி கூப்பிடுவேன்.? அது எனக்கு அவமானம் இல்லையா.?

சரியில்ல....... said...

தம்பி கூர்மதியன் said...

என் நண்பன எப்படி உண்மையில்லாத பெயரை சொல்லி கூப்பிடுவேன்.? அது எனக்கு அவமானம் இல்லையா.?//
அட.. என்னோட பெயர தமிழ்ல எழுதினா கேட்ட வார்த்தை வரும்யா..

தம்பி கூர்மதியன் said...

ஹி ஹி.. என்னயா இது.. நான் இப்ப என்ன தான் செய்யுறது.? சரி சரியில்ல மாப்பு.. நீ சரியில்லாமலே இரு..

சரியில்ல....... said...

தம்பி கூர்மதியன் said...

ஹி ஹி.. என்னயா இது.. நான் இப்ப என்ன தான் செய்யுறது.? சரி சரியில்ல மாப்பு.. நீ சரியில்லாமலே இரு.//

இது தான் சரி. ம்ம்ம்...கெளப்புங்கள் ..

MANO நாஞ்சில் மனோ said...

புது புது தகவலா இருக்கே....!!!!!

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...

புது புது தகவலா இருக்கே....!!!!!///

அப்பிடியா சொல்லுறிங்க? இருந்திட்டு போகட்டும்..