பதிவுலக உள்குத்து...!!
கடந்த இரண்டு வார காலமாக பிரபல பதிவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்... அவர் மீண்டும் பதிவுலகத்திற்கு வரவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று எச்சரித்துள்ளார் மற்றொரு பிரபல பதிவர்!!
என்ன நடக்கிறது..? இதோ நியூஸ் அப்டேட்...
 |
அவர் வசிக்கும் நாட்டில் உள்ள ஒரு டவர். |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஜெக ஜோதியாய் இருந்த பதிவுலகம் இப்போது ரொம்பவும் தான் வாடிப்போயுள்ளது... யாரும் ஒழுங்காக பதிவு போடுவதில்லை என்றும்.... மற்றவரின் தளங்களுக்கு செல்வதில்லைஎன்றும்... ஏகப்பட்ட புகார்கள்...
 |
அவரின் உருவப்படம். |
பிரான்ஸ்சில் இருந்து பதிவெழுதும் ஒரு பிரபல பதிவர் சில வாரங்களாக காணவில்லை.. மற்றவர்களின் பதிவிற்கு நிறைய, நீண்ட பின்னூட்டங்களை இடும் இவர் ரசிக்கவைக்ககூடிய பல சுவாரச்சியமான பதிவுகளை எழுதுவார்... இவர் காணாமல் போனது வளர்ந்துவரும் பதிவர்களுக்கு பேரிடியாக போனது....
ஏன் அவர் பதிவுலகத்தை விட்டு போனார் என்பதற்கு சில பதிவர்கள் சொல்லும் காரணங்கள்:
 |
பிரச்சனைக்குரிய நடிகை ஹன்ஷிகா. |
மைந்தன் சிவா: "அவருக்கும் எனக்கும் சில நாட்களாக சண்டை... அதாவது அவர் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பிரபல நடிகை ஹன்ஷிகா என்னை காதலிப்பதாக சொன்னதும் அந்த பதிவர் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறிந்தேன்..."
 |
முன்னால் காதலி,நடிகை நமீதா. |
நாற்று நிரூபன்: "உந்த கோதாரி விழுந்தவன காணேல எங்க போனான் எண்டும் தெரியேல உவன் நமீதா எண்ட ஒரு நடிகைய லவ் பண்ணிக்கொண்டு திரிஞ்சான் அந்த நடிகைய சி.பி.செந்தில் காப்புரிமை வாங்கிட்டதால ஹன்ஷிகா என்ற ஒரு பிகர லவுசு விட்டுக்கொண்டிருந்தான்.... அதிலையும் ஏதோ பிரச்சினை போல...... எதுவாயிருந்தாலும் சரி இன்னும் ரெண்டு நாள்ல வரவில்லை எண்டால் நான் தீக்குளிப்பேன் என எச்சரிக்கிறேன்..." கோபத்துடன் முடித்தார் நிரூ.
அட்ரா சக்க செந்தில்: "பாவம்ங்க அவர்... நல்ல ஒரு
ஜீவன்... யாருக்கும் கெடுதல் நெனைக்கமாட்டார்... எதோ பிரெஞ்சுக்காரி கூட லிங்க் இருந்திச்சாம் அந்த பிரச்சினைல தான் வரல ன்னு பேசிக்கிறாங்க...."என அனுதாபத்துடன் கூறினார் செந்தில்....
நாஞ்சில் மனோவிடம் பேசினோம்... " எனக்கொண்ணும் தெரியாதுங்கோவ்.. அந்தாளுக்கு ஓவரா முடி கொட்டிருச்சி... அத நான் ரெண்டு மூணு இடத்துல சுட்டிக்காட்டினேன் பெருசுக்கு கோவம் வந்திடிச்சு போல.... அது எங்கனா சந்துல பொந்துல கெடக்கும் அப்புறமா வந்துடும்... பாவம் யார் பெத்த புள்ளையோ...." என்றார்...
 |
அவர் புதிதாக வாங்கிய இசைப்பேழை. |
"அந்த பதிவர் ஊர்ல இருக்கும் போதே ஏகப்பட்ட பொண்ணுங்ககூட சகவாசம் வச்சிருந்திருக்கார்... இப்போ பிரான்ஸ் வந்தும் அங்கேயும் ஏதோ பிரெஞ்சுக்காரி... நீக்கிரோ காரி... அப்பிடி இப்பிடின்னு சுத்திட்டு இருந்தாப்ல... என்னடா இவனுக்கு மட்டும் இப்படி பிகருங்க்களா மாட்டுதுன்னு பிரபல "அருவாள்" பதிவர் அவரை போட்டுத்தள்ளியதாக நியூஸ் வந்திச்சு..." என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பிரபல "கக்கா" பதிவர்....
சரி உண்மை நிலவரம் தான் என்ன.... ???
பிராஸ், 'லா சேப்பல்' எனும் பகுதியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.... பதிவர் எங்கே என கேட்டதற்கு எதிர் தரப்பில் இருந்து ஒரு பெண் குரல்
"அவர் எங்கேயும் போய்விடவில்லை.. ஹன்ஷிகாக்கு அப்புறம் தமிழில் புது நடிகைங்க யாரும் வரல அதனால அவர் லவ் பண்ணுறதுக்கு யாருமே இல்லை... அப்பிடியிருக்கிறப்போ எப்பிடி டெய்லி பதிவு போடுறது? அதனால தான் வரல... " என கூறினார்.
என்னமோ போங்க... அவர் சீக்கிரமே வரணும் எங்கிறது தான் எங்க எல்லோருடைய ஆசை...
40 comments:
நாம தான் முதல் நபர்
உண்மைதான் சகோ மிக சுவாரசியமாக பதிவு போடுவதிலும் நீண்ட பின்னுட்டல்கள் மூலம் பதிவர்களை உற்சாகப்படுத்தியவர்;
நீண்ட நாட்களாக பதில் இல்லை என்று தெரிந்து அவருடைய கடையில் விசாரித்தேன் அவர் தற்போது ஹன்சிக காதலில் முழ்கி
ஹன்சிகாவுடன் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்;
ஆஹா ஓட்டவடடை இல்லைன்ன துணிவில இப்பிடியெல்லாம் பதிவு போடுறீங்களா?
ஹி ஹி
என்றாலும் நல்ல நகைச்சுவையாகத்தான் உள்ளது பாஸ்...
ஓட்டை வடை வெளியே வரலைன்னா சிபி'யும் செல்வாவும், பன்னிகுட்டியும் கொடைகானல் மலையில் இருந்து குதிச்சி தற்கொலை செய்வார்கள் அல்லது செய்விக்க படுவார்கள் ஹி ஹி....
நாஞ்சில் மனோவிடம் பேசினோம்... " எனக்கொண்ணும் தெரியாதுங்கோவ்.. அந்தாளுக்கு ஓவரா முடி கொட்டிருச்சி... அத நான் ரெண்டு மூணு இடத்துல சுட்டிக்காட்டினேன் //
அடபாவி பயலுகளா இன்னைக்கு நான்தானா கிடைச்சேன்...
பெருசுக்கு கோவம் வந்திடிச்சு போல.... அது எங்கனா சந்துல பொந்துல கெடக்கும் அப்புறமா வந்துடும்... பாவம் யார் பெத்த புள்ளையோ...." என்றார்...//
என்னாது பெருசா...??? எம்புட்டு பெருசுங்கோ...???
பிரபல "அருவாள்" பதிவர் அவரை போட்டுத்தள்ளியதாக நியூஸ் வந்திச்சு..." என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பிரபல "கக்கா" பதிவர்....//
நாதாரி சிபி மேல சத்தியமா சொல்றேன் அது நான் இல்லை....
அப்புறம் தமிழில் புது நடிகைங்க யாரும் வரல அதனால அவர் லவ் பண்ணுறதுக்கு யாருமே இல்லை... //
சரி சரி அப்போ கேரளா பக்கமா போக சொல்லுங்க...
வணக்கம் சரியில்ல...
//அவர் மீண்டும் பதிவுலகத்திற்கு வரவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று எச்சரித்துள்ளார் மற்றொரு பிரபல பதிவர்!!
என்ன நடக்கிறது..? இதோ நியூஸ் அப்டேட்...//
அதெப்படிங்க நீங்க மட்டும் அவரோடு தொடர்பிலிருக்கிறீங்க, நீங்க தான் அவரோடை அஸிஸ்டெண்டா.
அவர் வசிக்கும் நாட்டில் உள்ள ஒரு டவர்//
அடிங்..கொய்யாலா...இது நமக்குத் தெரியாது பாரு.
அவரின் உருவப்படம்//
இது பழைய படம், அவர் தற்போது, நான் இறுதியாகப் பார்க்கும் போது பிரவுண் நிற சேர்ட் அணிந்திருந்தார். ஆதலால் நீ தான் அவருக்கு ஏதோ பண்ணிட்டாய், இல்லேன்னா நீ தான் அவரை ஒளிச்சு வைச்சிருக்கிறாய் மச்சி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஜெக ஜோதியாய் இருந்த பதிவுலகம் இப்போது ரொம்பவும் தான் வாடிப்போயுள்ளது... //
ஏன் ஓட்ட வடை தண்ணீர் ஊற்றவில்லையோ.
மைந்தன் சிவா: "அவருக்கும் எனக்கும் சில நாட்களாக சண்டை... அதாவது அவர் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பிரபல நடிகை ஹன்ஷிகா என்னை காதலிப்பதாக சொன்னதும்//
எடுங்கடா அந்த அருவாளை, மைந்தனைப் போட்டுத் தள்ளிடுவோம்.
நாற்று நிரூபன்: "உந்த கோதாரி விழுந்தவன காணேல எங்க போனான் எண்டும் தெரியேல உவன் நமீதா எண்ட ஒரு நடிகைய லவ் பண்ணிக்கொண்டு திரிஞ்சான்//
அடடா.....இலங்கை உரை நடையிலே எழுதியிருக்கிறியே....நீ கலக்கல் ஆள் தான் மச்சி.
எதுவாயிருந்தாலும் சரி இன்னும் ரெண்டு நாள்ல வரவில்லை எண்டால் நான் தீக்குளிப்பேன் என எச்சரிக்கிறேன்..."//
நான் சொன்னது டீக் குடிப்பேன் என்று, நீங்க இங்கே எழுதியிருப்பது தீக்குளிப்பேன் என்று.
ஹா...ஹா... கட்...கட்!
பதிவர் எங்கே என கேட்டதற்கு எதிர் தரப்பில் இருந்து ஒரு பெண் குரல் "அவர் எங்கேயும் போய்விடவில்லை.. ஹன்ஷிகாக்கு//
ஆகா..ஓட்டவடைக்கு கலியாணம் ஆகிடுச்சா...அப்ப இனிமேல் புள்ள பெத்து, அடுத்த புள்ள பெறும் வரைக்கும் பதிவுலகப் பக்கம் வரமாட்டான் என்று நினைக்கிறேன்.
தேடிப்பாருங்கய்யா....பய புள்ள எந்த நடிகையாவது பிரான்சுக்கு வந்துருக்கும் அந்த நடிக பின்னாடி பூட்டாரோ என்னவோ !
அவர் ஏற்கனவே வாடி வதங்கி போய் இருக்கிறார்..நீங்க இப்ப இந்தப்புரளியையும் கிளப்பிவிட
ஒரேயடியாய் போய்விட்டுடுவார்..ஹா...ஹா...
என்றாலும் சிரிக்க வைத்தது உங்க பதுவு..
கலக்கல் தான்...
வாழ்த்துக்கள்...
ஏலே என்ன மொக்கையா???பிச்சு பிச்சு
நம்மள பத்தி என்னாது??ஹன்சிகாவா??
ஹிஹி பாவமா நீ..நான் அத விட்டு இப்போ கார்த்திகா தெரியாதா??
இந்த சிபி பயபுள்ள எங்க போனாரு??
உங்க்ஃளுக்கு மேட்டரே தெரியாதா? அண்னனுக்கு ட்விட்டர்ல 2 ஃபிகர் செட் ஆகிடுச்சு அங்கே இருந்து வர மாட்டேங்கரார். ஆன் லைன்ல அவர் ட்வீட்டும்போது என்ன ஆச்சுன்னு கேட்டா எக்ஸ்க்யூஸ்மீ ஹூ ஆர் யூ? ந்க்கறார்
நானும் அவரைக் கேட்டேன்னு சொல்லுங்க..அப்புறம் ஹன்சியைக் கேட்க மாட்டேன்னு சொல்லுங்க.
நானும் தேடிக்கொண்டுதானிருக்கிறன் வடையண்ணாவை.நிரூட்டையும் கேட்டனான் காணவில்லை எண்டு பதிவு போட்டுத் தேடுவமோ எண்டு.சரி....நீங்க தேடிப்பாத்திட்டீங்க.கொஞ்சம் ஓய்வு எடுத்து வரட்டும் பாவம்.தலையில முடியும் முளைக்க வச்சுக்கொண்டு வரட்டும் !
எனக்கும் பயமாயிருக்கு பிரான்சில் சண்டைக் குழுக்கள் கூடீட்டுதாம்...
சிரமம் பாராமல் என் தளத்திற்கு வந்து என் மகள் தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி
ஒரு பெண்ணுக்காக அடிச்சுக்கிட்டு சாம்ராஜ்ஜியம்லாம் அழிஞ்சதுப் போய், இப்போ பதிவர்கள் காணாம போறாங்களா? என்ன கொடுமை சார்
Blogger ♔ம.தி.சுதா♔ said...
எனக்கும் பயமாயிருக்கு பிரான்சில் சண்டைக் குழுக்கள் கூடீட்டுதாம்./////அப்பிடீல்லாம் ஒண்ணுமில்லீங்களே?வால ஒட்ட நறுக்கிட்டாங்கல்ல?
ஏதோ ஆகி விட்டது போல் தான் இருக்கிறது!ஊரை விட்டு உலா போயிருக்கலாம் போலுமிருக்கிறது!ஆனாலும் ஒரு மீள் பதிவு கண்ணில் பட்டதே,கடைசிப் பதிவு?யாரும் பார்க்கவில்லையா??????,
பிரான்ஸ், 'லா சப்பேல்' எனும் பகுதியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்....///அவர் வசிப்பது பாரிசின் புற நகர்ப் பகுதியில்! "லா சப்பேல்" எனப்படுவது,பாரிஸ் நகரில் ஒரு குட்டித் தமிழர் வர்த்தக மையம்!
அவரிடம் போய்(நாஞ்சில்)ஏன் கேட்டீர்கள்?அவரே குளிப்பதில்லையென்று நிரூபன் பதிவு போட்டதால் "ஆடி"ப் போயிருக்கிறார்!
MANO நாஞ்சில் மனோ said...
ஓட்டை வடை வெளியே வரலைன்னா சிபி'யும் செல்வாவும், பன்னிகுட்டியும் கொடைகானல் மலையில் இருந்து குதிச்சி தற்கொலை செய்வார்கள் அல்லது செய்விக்க படுவார்கள் ஹி! ஹி!....§§§§
அவங்க "குதி"ப்பது இருக்கட்டும்,நீ மொதல்ல போயி "குளி"ய்யா!!!!!!
மைந்தன் சிவா said...
இந்த சிபி பயபுள்ள எங்க போனாரு??////
இந்த வார நட்சத்திரப் பதிவர் அவர் தானே?உங்கள் பதிவுக்கு மைனஸ் ஓட்டுப் போடப் போவதாக மிரட்டியிருக்கிறாரே,மைந்தரே???????
ஆமா இவ்வளவு நாளும் இல்லை எங்கே இந்தப்பதிவர்!!!!
hahaha......
கலக்கல் பகிர்வுக்கு..
வாழ்த்துக்கள்...
பின்னிடிங்க
இன்னும் நீங்க ஹன்சிகாவை விடலையா?
ஓட்டவடை சீக்கிரம் வந்து பதில் சொல்லவும்..
இன்னும் நீங்க ஹன்சிகாவை விடலையா?
ஓட்டவடை சீக்கிரம் வந்து பதில் சொல்லவும்..
ஜூலை பதினைந்து க்கு பிறகு பதிவு ஏன் போடல பாஸ்?
நான் இன்னைக்குதான் வந்தான் அதனால லேட் கமென்ட்//
Post a Comment