நண்பர்ஸ்..

Friday, March 4, 2011

பேச்சு பேச்சா இருக்கணும்.....!!


நம்மாளுங்களுக்கு பேச்சுக்கொன்னும் கொறச்சலில்ல.....
பேசவா சொல்லித்தரனும்.....பஸ்'ல... ஆபீஸ்'ல... போன்'ல....(முக்கியமா பிகருங்ககிட்ட!)
பேச்சு....பேச்சு...பேச்சு........
எப்போ பாரு பேச்சு....
இங்க கொஞ்சம் ஏடாகூட பேச்சு.

தியேட்டரில் வேலை பார்க்கும் நண்பன்
போன் செய்தான்.
'மச்சி.. நீ ரெண்டு டிக்கெட் கேட்டல்ல....கிடைச்சிருச்சி....!'
பதிலளித்தேன்.
"மாப்ள..என்னோட 'டிக்கெட்' கழண்டுகிச்சு...ஒன்னு போதும்!

****
நண்பனின் கைத்தொலைபேசி தொலைந்துவிட்டது....
பின்னர், இப்படி ஆரம்பிக்க வேண்டியதாய்
போயிற்று...
'மச்சி..புதுசா ஒரு செல்போனை நோக்கியா அறிமுகப் படுத்தியிருக்கு தெரியுமா?'

****

"" நந்தலாலா முதல் நடு நிசி நாய்கள் வரை
பேசி முடித்து அரசியல் கூட்டணி பற்றி ஆரம்
பித்தேன்.
இடைமறித்தான்.
'வாங்கின கடன் ஞாபகம் இருக்குல்ல?'
நண்பேண்டா.....!!!!

*****

அ.தி.மு.க மேடைகளில் எழும் பேச்சுக்களில் '

ஸ்பெக்ட்ரம்' என திருத்தம் தேவை.
என்னென்ன கருமமோ காதில் விழுந்து தொலைகிறது....
*****

"ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும் போது...பக்கத்தில் வந்த ஆட்டோவுடன் தட்டிவிட்டது...
அவன்; இவனின் அம்மாவின் பூர்வீகம் பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டான்.....
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.....
*****
பஸ்சில் புட்போர்ட் அடித்துக்கொண்டே வந்தேன்....

கன்டெக்டருக்கு நான் சோறு மட்டும் தான் சாப்புடுகிறேன் என்று விளக்கமெல்லாம் கொடுக்கவேண்டியதாயிற்று.....



*****

moral:

"ஏன்யா நான் கரெக்டா பேசுறனாயா?" இந்த காமெடி டயலாக்க நம்மாளுங்க அடிக்கடி ஞாபகம் வச்சுக்கனும்!!!