![]() |
| முன் அட்டைப்படம்... |
நமது ஹீரோவுக்கு "மண்டையில் துளை போட்டு தோட்டாவை உள்ளே அனுப்பிய மகா பாதகன் யார்?" என்று கண்டு பிடிக்க வேண்டிய நிலை.. ஆனால் உள்ளே போன தோட்டா,அவனது நினைவுகள் சேகரித்து வைத்திருக்கும் மூளையின் ஒரு பகுதியை துருப்பிடிக்கச் செய்துவிட்டது.... தன்னை நோக்கி நீட்டிய துப்பாக்கியின் விசையை யார், எதற்காக அழுத்தினான் என்ற கேள்விக்கு பதில் ஹீரோவிடம் இல்லை... தான் யார், ஊரு,பேரு, தெரியாத வளர்ந்துவிட்ட குழந்தை நம் ஹீரோ..... பின்பு ஜனாதிபதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி நமது ஹீரோ என்று தெரியவரும் போது சூடு பிடிக்கும் "இரத்தப்படலம்", அடுத்த 800 பக்கங்களிலும் பர..பர...
உலகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய நமது ஹீரோ "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்..
கட்டுக்கடங்கா கதாப்பாத்திரங்கள், வெவ்வேறு கதைக்களம், வெவேறு நாட்டின் கலாச்சாரம் என ஒரு மகா, மெகா படைப்பின் உழைப்பு சாதாரணமானதல்ல..
இங்கு நீங்கள் இரு ஜாம்பவான்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.. ஒன்று கதாசிரியர் 'ஷான் வான் ஹாமே' இன்னொன்று ஓவியர் 'வில்லியம் வான்ஸ்'.
'ஷான் வான் ஹாமே'
தொழில் நிர்வாக படிப்பை முடித்துக்கொண்டு எழுத்தாளராக பணியாற்றி வரும் பொழுதே ஒரு சில திரைப்படங்களிலும் வேலை பார்க்க தொடங்கினார்..
1984 'ல் இவருக்கு "ராபட் லட்லாமின் " அவர்களின் நாவல் ஒன்றின் பாதிப்பில் தோன்றிய 'இரத்தப்படலம்' பின்னாட்களில் அவருக்கு பெரும் புகழும், பணமும் , விருதுகளும் வாங்கிக்குவித்தன....
இதன் பின்னணியில், இவரின் XIII என்ற கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ஓவியர் 'வில்லியம் வான்ஸ்' மிக முக்கியமானவர்.
'வில்லியம் வான்ஸ்'.
1935 'ல் பிறந்திட்ட இவர், பிரெஞ்ச் காமிக்ஸ் உலகின் முக்கியமான ஓவியராக திகழ்ந்துகொண்டிருக்கும் பொழுது ( முதலைபடையினர், சாகச வீரர் ரோஜர் ) 1984 'ல் இவர் வீட்டின் கதவை தட்டினார் கதாசிரியர் வான் ஹாமே.
அந்த சந்திப்பு தான் பின்னாட்களில் இரத்தப்படலம் 18 பாகங்கள் வெளிவந்து மற்ற ஹீரோக்களுக்கு ஓய்வு கொடுக்கச்செய்தார்கள்.....
![]() |
| பின் அட்டையில்... |
இதெற்கெல்லாம் மேலாக நமது லயன்.
இக்கதையின் படைப்பாளர்களே 'இரத்தப்படலத்தை பாகம் பாகமாக வெளியிட, நமது லயன் காமிக்ஸ் நிறுவனத்தினரோ செம தில்லாக... ராட்சச இதழாக 850 பக்கங்களில் வெளியிட்டது.. இந்த புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் மட்டுமே தான் புரியும் , இது அத்தனை சுலபமில்லை என்று ..
ரூபாய் 200 விலையில், அட்டகாசமான அட்டைப்படத்தினுடனும்.. அழகு தமிழில் மொழி பெயர்ப்புடனும்..(லயன் காமிக்ஸ்'கே உரிய பாணி) ஆனந்த விகடன் சைஸில் வெளிவந்திருக்கும் இந்த புத்தகம் உங்களுக்கு கிடைக்க மணி-ஆர்டர் செய்திட வேண்டும்..
வாசகர்களின் பேராதரவு கிடைக்க வேண்டுமென்றால் ( 200 ரூபாய் ஆச்சே? )
இரத்தப்படலம் கதைதான் சரியான தேர்வு என்று கதையை தெரிவு செய்ததாக தெரியவில்லை. மாறாக, இரத்தப்படலம் போன்ற ஒரு காமிக்ஸ் மைல்கல் தமிழில் வெளியிடுவது பெருமையே என்ற எண்ணமாக இருக்கலாம்.
லயனின் எண்ணமும் நிறைவேறி விட்டது... லயனின் ஆசிரியர் திரு. எஸ்.விஜயன் அவர்களுக்கு வந்த பாராட்டுக்களை அவரே சொன்னால் தான் உண்டு. தலையணை சைஸுக்கு இருக்கும் இந்த புத்தகம் வைத்திருக்கும் ஓவ்வொருவருவரின் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் முன்னால்.., 200 ரூபாய் ஒன்றுமே இல்லை.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு 858 பக்க காமிக்ஸ் ஆல்பம். உங்களிடம் உள்ளதா?

