![]() |
முன் அட்டைப்படம்... |
நமது ஹீரோவுக்கு "மண்டையில் துளை போட்டு தோட்டாவை உள்ளே அனுப்பிய மகா பாதகன் யார்?" என்று கண்டு பிடிக்க வேண்டிய நிலை.. ஆனால் உள்ளே போன தோட்டா,அவனது நினைவுகள் சேகரித்து வைத்திருக்கும் மூளையின் ஒரு பகுதியை துருப்பிடிக்கச் செய்துவிட்டது.... தன்னை நோக்கி நீட்டிய துப்பாக்கியின் விசையை யார், எதற்காக அழுத்தினான் என்ற கேள்விக்கு பதில் ஹீரோவிடம் இல்லை... தான் யார், ஊரு,பேரு, தெரியாத வளர்ந்துவிட்ட குழந்தை நம் ஹீரோ..... பின்பு ஜனாதிபதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி நமது ஹீரோ என்று தெரியவரும் போது சூடு பிடிக்கும் "இரத்தப்படலம்", அடுத்த 800 பக்கங்களிலும் பர..பர...
உலகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய நமது ஹீரோ "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்..
கட்டுக்கடங்கா கதாப்பாத்திரங்கள், வெவ்வேறு கதைக்களம், வெவேறு நாட்டின் கலாச்சாரம் என ஒரு மகா, மெகா படைப்பின் உழைப்பு சாதாரணமானதல்ல..
இங்கு நீங்கள் இரு ஜாம்பவான்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.. ஒன்று கதாசிரியர் 'ஷான் வான் ஹாமே' இன்னொன்று ஓவியர் 'வில்லியம் வான்ஸ்'.
'ஷான் வான் ஹாமே'
தொழில் நிர்வாக படிப்பை முடித்துக்கொண்டு எழுத்தாளராக பணியாற்றி வரும் பொழுதே ஒரு சில திரைப்படங்களிலும் வேலை பார்க்க தொடங்கினார்..
1984 'ல் இவருக்கு "ராபட் லட்லாமின் " அவர்களின் நாவல் ஒன்றின் பாதிப்பில் தோன்றிய 'இரத்தப்படலம்' பின்னாட்களில் அவருக்கு பெரும் புகழும், பணமும் , விருதுகளும் வாங்கிக்குவித்தன....
இதன் பின்னணியில், இவரின் XIII என்ற கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ஓவியர் 'வில்லியம் வான்ஸ்' மிக முக்கியமானவர்.
'வில்லியம் வான்ஸ்'.
1935 'ல் பிறந்திட்ட இவர், பிரெஞ்ச் காமிக்ஸ் உலகின் முக்கியமான ஓவியராக திகழ்ந்துகொண்டிருக்கும் பொழுது ( முதலைபடையினர், சாகச வீரர் ரோஜர் ) 1984 'ல் இவர் வீட்டின் கதவை தட்டினார் கதாசிரியர் வான் ஹாமே.
அந்த சந்திப்பு தான் பின்னாட்களில் இரத்தப்படலம் 18 பாகங்கள் வெளிவந்து மற்ற ஹீரோக்களுக்கு ஓய்வு கொடுக்கச்செய்தார்கள்.....
![]() |
பின் அட்டையில்... |
இதெற்கெல்லாம் மேலாக நமது லயன்.
இக்கதையின் படைப்பாளர்களே 'இரத்தப்படலத்தை பாகம் பாகமாக வெளியிட, நமது லயன் காமிக்ஸ் நிறுவனத்தினரோ செம தில்லாக... ராட்சச இதழாக 850 பக்கங்களில் வெளியிட்டது.. இந்த புத்தகம் உங்கள் கைகளில் கிடைத்தால் மட்டுமே தான் புரியும் , இது அத்தனை சுலபமில்லை என்று ..
ரூபாய் 200 விலையில், அட்டகாசமான அட்டைப்படத்தினுடனும்.. அழகு தமிழில் மொழி பெயர்ப்புடனும்..(லயன் காமிக்ஸ்'கே உரிய பாணி) ஆனந்த விகடன் சைஸில் வெளிவந்திருக்கும் இந்த புத்தகம் உங்களுக்கு கிடைக்க மணி-ஆர்டர் செய்திட வேண்டும்..
வாசகர்களின் பேராதரவு கிடைக்க வேண்டுமென்றால் ( 200 ரூபாய் ஆச்சே? )
இரத்தப்படலம் கதைதான் சரியான தேர்வு என்று கதையை தெரிவு செய்ததாக தெரியவில்லை. மாறாக, இரத்தப்படலம் போன்ற ஒரு காமிக்ஸ் மைல்கல் தமிழில் வெளியிடுவது பெருமையே என்ற எண்ணமாக இருக்கலாம்.
லயனின் எண்ணமும் நிறைவேறி விட்டது... லயனின் ஆசிரியர் திரு. எஸ்.விஜயன் அவர்களுக்கு வந்த பாராட்டுக்களை அவரே சொன்னால் தான் உண்டு. தலையணை சைஸுக்கு இருக்கும் இந்த புத்தகம் வைத்திருக்கும் ஓவ்வொருவருவரின் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் முன்னால்.., 200 ரூபாய் ஒன்றுமே இல்லை.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு 858 பக்க காமிக்ஸ் ஆல்பம். உங்களிடம் உள்ளதா?
19 comments:
யோவ் உனக்கு நான் என்னய்யா பாவம் பண்ணினேன்?
எதுக்குய்யா இந்த மாதிரி காமிக்ஸ் பதிவ போட்டு கடுப்ப கேளப்புறே?
தலைவரே ப்ளாஷ் கார்டனின் மனித வேட்டை என்ற காமிக்ஸ் கிடைத்தால் அதன் லிங்க் அனுப்பவும்...குறைந்தது நான் என் பால்ய வயதில் அதை ஐநூறு முறை படித்திருப்பேன்.
உலகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய நமது ஹீரோ "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்..//
இதெல்லாம் சின்னப் புள்ளைகளுக்குத் தானே விக்கிறாங்க.. ஏனய்யா......பெரிய மனுசன் நீங்க போயி படிக்கிறீங்க?
சகோ நீங்கள் நெசமாவே, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. எனக்கு காமிக்ஸ் பற்றிய அறிவு குறைவு பாஸ்.
அதனாலை நான் அப்புறுர் ஆகிடுறேன்.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எதுக்குய்யா இந்த மாதிரி காமிக்ஸ் பதிவ போட்டு கடுப்ப கேளப்புறே?//
ஹிஹிஹி...பிரான்ஸ்'ல தமிழ் காமிக்ஸ் கிடைக்காதா என்ன?
டக்கால்டி said...
தலைவரே ப்ளாஷ் கார்டனின் மனித வேட்டை என்ற காமிக்ஸ் கிடைத்தால் அதன் லிங்க் அனுப்பவும்...குறைந்தது நான் என் பால்ய வயதில் அதை ஐநூறு முறை படித்திருப்பேன்///
நீங்களுமா? கண்டிப்பா அனுப்புறேன்...முடிந்தால் புத்தகத்தையே அனுப்புறேன்... நீங்க எங்க பாஷு இருக்கிங்க?
நிரூபன் said...
உலகின் தலையாய மொழிகள் அனைத்திலும் தலைகாட்டிய நமது ஹீரோ "XIII" (பதின்மூன்று) கடந்த வருட இறுதியில் "லயன் காமிக்ஸ்" மூலம் தமிழுக்கு தலைகாட்டினார்.... ஏற்கனவே பகுதி பகுதியாக இவர் வந்திட்ட போதிலும் இப்போது தான் முழு மூச்சாக ஒரே 'தம்'மில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்..//
இதெல்லாம் சின்னப் புள்ளைகளுக்குத் தானே விக்கிறாங்க.. ஏனய்யா......பெரிய மனுசன் நீங்க போயி படிக்கிறீங்க?///
வாங்க நிரூபன்..
இல்ல நிரூ.. உலகத்துல காமிக்ஸ் படிக்குற 80 விழுக்காடு மக்கள் பெரியவர்களே.. ஆதாரம் இருக்கு... அதுமட்டுமில்லாம... இந்த புத்தகம் ஒன்னும் பறந்து பறந்து அடிக்குற மாயாவி கதையில்ல...
நிரூபன் said...
சகோ நீங்கள் நெசமாவே, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. எனக்கு காமிக்ஸ் பற்றிய அறிவு குறைவு பாஸ்.
அதனாலை நான் அப்புறுர் ஆகிடுறேன்///
நம்புற மாதிரி இல்லையே நிரூ? ஓ.கே உங்க ஏரியால என்ன ஸ்பெஷல்? இத்தோ வர்ர்ர்........
யோவ் சீக்கிரம் புஸ்தகத்த அனுப்புய்யா! ஆர்வம் தாங்க முடியல!!
சகோ, எங்கள் நாட்டுப் போர்ச் சூழல் காரணமாகவோ, அல்லது என் அறியாமை காரணமாகவோ என் கைகளுக்கு முகமூடி மாயாவியைத் தவிர வேறு ஏதும் காமிக்ஸ் கதைகள் கிடைக்கவில்லை. அந்தக் கவலையில் தான் என் கருத்துக்களைச் சொன்னேன். காமிக்ஸ் கதைகள் என்று கூறும் போது தான், அது பற்றிய என் அறியாமையினை நினைத்து நானே சிரிக்கிறேன்.
சிறுவர்கள் மட்டும் தான் காமிக்ஸ் படிப்பார்கள் எனும் உணர்வில் இருந்தேன். ஆனால் உங்கள் தகவ்ல் மூலம் பெரியவர்களும் படிப்பார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.
லிங் இருந்தால், அல்லது மின் நூல் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் சகோ.
தமிழ் மணம், தமிழிஷ், தமிழ்10 இனைக் காணவில்லையே?
சிறுவர்கள் மட்டும் தான் காமிக்ஸ் படிப்பார்கள் எனும் உணர்வில் இருந்தேன். ஆனால் உங்கள் தகவ்ல் மூலம் பெரியவர்களும் படிப்பார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.
லிங் இருந்தால், அல்லது மின் நூல் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் சகோ.//
நன்றி நிரு உங்கள் கருத்துக்கு.... காமிக்ஸ் படிப்பதென்பது அலாதியான விஷயம் நிரு.. காட்சிகளும்.. பாத்திரங்களும் கண் முன்னே விரியும் போது... நிச்சயமாக வேறு ஒரு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு...நிச்சயமாக முகவரி தந்தால் சென்னையில் இருந்து பார்சல் பண்ணுவேன்...
நிரூபன் said...
தமிழ் மணம், தமிழிஷ், தமிழ்10 இனைக் காணவில்லையே//
ஸாரி நிரு... டெம்ப்ளேட்டை மாத்தினேனா..... எங்கையோ மிஸ் ஆகிடுச்சி... சரிபண்ணிடுறேன்...
நன்றாக காமிக்ஸ் பற்றி விமர்சித்திருக்கிறீர்கள்.
காமிக்ஸ் படிச்சு ரொம்ப வருசம் ஆகிடுச்சி... மிக்க நன்றி...
இராஜராஜேஸ்வரி said...
நன்றாக காமிக்ஸ் பற்றி விமர்சித்திருக்கிறீர்கள்.//
நன்றி... நன்றி.... உங்க ஏரியால என்ன ஸ்பெஷல்? த்தோ வர்ரேன்....
ஜெயசீலன் said...
காமிக்ஸ் படிச்சு ரொம்ப வருசம் ஆகிடுச்சி... மிக்க நன்றி...//
மறுபடியும் ஆரம்பிங்க பாஸ்... நன்றி உங்கள் கருத்துக்கு...
அட்டகாசமான பதிவு பாஸ்! தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!
சிறுவயதிலிருந்தே எனக்கு முத்து, லயன் மிகப் பிடிக்கும் - அதிலும் இரத்தப்படலம் மாஸ்டர் பீஸ்!!
நானும் சொல்லிவச்சிட்டு பாத்துட்டே இருக்கேன் பாஸ்! இலங்கைக்கு இன்னும் வரலன்னு சொல்லிட்டாங்க கொழும்பில! இன்னும் வெய்ட்டிங்! கைல கிடைச்சதும் பதிவு போடுவேன்! :-)
பகிர்தலுக்கு நன்றி பாஸ்!
வாழ்த்துகள் - அதான் புக் வச்சிருக்கீங்களே அதுக்குத்தான்! :-)
Post a Comment