உங்களுக்காக சில கருப்பு வெள்ளை கால சினிமா விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். முன்னாடியே சொல்லிடுறேன்.கண்டிப்பாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டவை. படித்தவற்றை பகிர்ந்துகொள்ளும் நோக்கம் மட்டுமே!!!
01 )மஞ்சரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார் நடித்த முதல் படம் "பக்த ராமதாஸ்".
படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூபாய் 40. படத்தில் அவர் சில தெலுங்கு வசனங்கள் பேசி நடித்திருப்பார்.
அவரின் இரண்டாவது படமாகிய "இன்ப சாகரன்" என்ற படம் ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டதால் படம் வெளிவரவேயில்லை. 1938 -ம் வருடம் ஜி.பட்டு என்பவர் டைரக்ட் செய்த அந்த படம் 80 நாட்கள் படமாக்கப்பட்டிருந்தது.
02 ) திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலைவாணர் என்.எஸ்.கே.., "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்.."என ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பேசுவதை நிறுத்திவிட்டார். வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட என்.எஸ்.கே, ஆங்கிலத்தில் பேச தொடங்கியதும் கூட்டமே வியப்பில் ஆழ்ந்தது.
மீண்டும் பேச தொடங்கிய கலைவாணர் "எனக்கு அவ்வளவு தான் தெரியும்.அதற்குமேல் ஆங்கிலம் பேச தெரியாது" என்று மெள்ளச்சொல்ல.. அரங்கம் அதிர சிரிப்பு. கலைவாணர் கலைவாணர் தான்.
03 )நடிகர் சிவகுமாரின் அறையில் ஒரு ஓவியம் எப்போதுமே கண்முன்னே தெரியும்படி வைத்திருப்பார். அவர் வரைந்த ஓவியம் தான். "அது நான் 1956 -ல் சினிமாவிற்கு வருமுன்னர் நான் வரைந்து, ஜெமினி கணேசன் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட ஓவியம்" என பூரிக்கிறார் சிவகுமார்.
04 ) சென்னை இந்திரா நகரில் 'பிரேமா' என்ற பெண்மணி கொலையுண்ட வீட்டிற்கு குடிவருவதற்கு யாருமே துணிந்து முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் விஷயம் கேள்விபட்டு, "எனக்கும் பேயிற்கும் அப்படியொரு ராசி என சிரித்துக்கொண்டே "குடிவந்தார்.
அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
05 ) "உங்கள் கணவர் புகைப்பிடிக்கிறாரே.. அதற்கு நீங்கள் ஆட்சேபனை சொல்வதில்லையா?"என்ற ஆனந்த விகடன் கேள்விக்கு பதில் கூறினார் திருமதி ருக்மணி நம்பியார்.
"இல்லீங்க. வருசத்திற்கு இரண்டே மாதம் தான் சிகரெட் குடிப்பார். மீதி மாதங்களில் குடிக்கமாட்டார். அது என்னவோ அப்படியொரு பழக்கம்." என்கிறார்.
06 ) தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் கதாநாயனாக நடித்த முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் பாணி படம்தான். "இரவும் பகலும்" என்ற அந்த படத்தில் ஒரு காட்சிக்கு 'டூப்' போடாமல் நடித்து, 10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவேண்டியதாய் போயிற்று.
07 ) தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு திரைப்படங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன . அவை எவை என கீழே படங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
டிஸ்கி 01:நன்றி ஆனந்த விகடன். குமுதம், கூகிள் .
டிஸ்கி 02: நன்றி உங்களுக்கும். மீண்டும் ஒரு மொக்கை பதிவில் சந்திப்போம்.
01 )மஞ்சரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார் நடித்த முதல் படம் "பக்த ராமதாஸ்".
![]() |
| நம்பியார் மற்றும் ஜெமினி கணேஷன். |
படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூபாய் 40. படத்தில் அவர் சில தெலுங்கு வசனங்கள் பேசி நடித்திருப்பார்.
![]() |
| நடிகவேள். |
02 ) திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலைவாணர் என்.எஸ்.கே.., "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்.."என ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பேசுவதை நிறுத்திவிட்டார். வழக்கமாக தமிழிலேயே பேசும் வழக்கம் கொண்ட என்.எஸ்.கே, ஆங்கிலத்தில் பேச தொடங்கியதும் கூட்டமே வியப்பில் ஆழ்ந்தது.
மீண்டும் பேச தொடங்கிய கலைவாணர் "எனக்கு அவ்வளவு தான் தெரியும்.அதற்குமேல் ஆங்கிலம் பேச தெரியாது" என்று மெள்ளச்சொல்ல.. அரங்கம் அதிர சிரிப்பு. கலைவாணர் கலைவாணர் தான்.
03 )நடிகர் சிவகுமாரின் அறையில் ஒரு ஓவியம் எப்போதுமே கண்முன்னே தெரியும்படி வைத்திருப்பார். அவர் வரைந்த ஓவியம் தான். "அது நான் 1956 -ல் சினிமாவிற்கு வருமுன்னர் நான் வரைந்து, ஜெமினி கணேசன் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட ஓவியம்" என பூரிக்கிறார் சிவகுமார்.04 ) சென்னை இந்திரா நகரில் 'பிரேமா' என்ற பெண்மணி கொலையுண்ட வீட்டிற்கு குடிவருவதற்கு யாருமே துணிந்து முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் விஷயம் கேள்விபட்டு, "எனக்கும் பேயிற்கும் அப்படியொரு ராசி என சிரித்துக்கொண்டே "குடிவந்தார்.
அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
![]() |
| வில்லன் நம்பியார். |
"இல்லீங்க. வருசத்திற்கு இரண்டே மாதம் தான் சிகரெட் குடிப்பார். மீதி மாதங்களில் குடிக்கமாட்டார். அது என்னவோ அப்படியொரு பழக்கம்." என்கிறார்.
06 ) தமிழ்நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் கதாநாயனாக நடித்த முதல் படமே ஜேம்ஸ் பாண்ட் பாணி படம்தான். "இரவும் பகலும்" என்ற அந்த படத்தில் ஒரு காட்சிக்கு 'டூப்' போடாமல் நடித்து, 10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவேண்டியதாய் போயிற்று.
07 ) தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு திரைப்படங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன . அவை எவை என கீழே படங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
![]() |
| 700 நாட்கள் ஓடிய சந்திரமுகி. |
![]() |
| 3 தீபாவளி தொட்ட ஹரிதாஸ். |
டிஸ்கி 02: நன்றி உங்களுக்கும். மீண்டும் ஒரு மொக்கை பதிவில் சந்திப்போம்.