நண்பர்ஸ்..

Saturday, September 4, 2010

உலகின் கடைசி ராத்திரி



பிரபல ஆங்கில சிறுகதை எழுத்தாளர் 'ப்ரட்பரி' அவர்கள எழுதிய சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
உலகின் கடைசி ராத்திரி.

"இதுதான் உலகத்தின் கடைசி ராத்திரி என்றால் , நீ என்ன செய்வாய்?"

"என்ன செய்வேனா? சீரியஸாகவா கேட்கிறாய்?"

"ஆமாம் சீரியஸ்."

"தெரியலைப்பா. நான் அதைப் பற்றி நினைத்ததே இல்லை." சிறிது காப்பி ஊற்றிக்கொண்டான்.
பின்னனியில் அவர்கள் இரண்டு பெண் குழந்தைகளையும் அரிகேன் விளக்கில் பச்சை வெளிச்சத்தில் வராந்தாவில் பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாயங்கால காற்றில் சுலபமான, மிருதுவான , சுத்தமான காப்பி வாசனை இருந்தது.

" நினைக்கலேன்னா நினைக்க ஆரம்பிக்க வேண்டியது தான்."

"அப்படியா?"
அவன் தலையசைத்தான்.
"ஏதாவது சண்டை வரப் போகிறதா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"கைட்ரஜன் பாம், ஆட்டாம் பாம்னு...."
"சேச்சே..."
"விஷக்கிருமிகள்... இப்படி..."
"அதெல்லாம் ஏதும் இல்லை ." என்றான் காப்பியை மெல்ல கலக்கிக்கொண்டு,"இப்படி வைத்துக்கொள், ஒரு புஸ்தகத்தை மூடுகிறது போலன்னு."
"எனக்கு புரியல..."
"எனக்கும் தான். நிஜமா புரியலை...அது ஓர் உணர்சி மாதிரிதான். சில சமயம் பயமாக இருக்கிறது. சில சமயம் பயமே இல்லை. சாந்தமாக உணர்கிறேன்."கடைக்கண்ணால் தன் பெண்களை பார்த்தான். அவர்கள் தேக விளிம்புகள் விளக்கில் மிளிர, " நான் உன்னிடம் சொல்லவே இல்லை. நாலு நாள் முன்னால் அது நடந்தது."
"என்ன?"

"எனக்கு ஒரு கனா வந்தது. எல்லாம் முடிந்து போகப் போகிறது" என்று ஒரு குரல் சொன்னது. குரல்னா எந்த மாதிரி குரலும் இல்லை. ஒரு குரல் அவ்வளவு தான். அது சொன்னது "எல்லாமே இங்கே உலகத்தில் நின்று போகப் போகிறது.." என்று... நான் அதைப்பற்றி அவ்வளவாக நினைக்கவில்லை. ஆபீஸ் போனால், ஸடான் வில்லிஸ் சும்ம ஜன்னலுக்கு வெளியெ வெற்றாக பார்த்துக்கொண்டு நிக்கிறான்.பிற்பகலில் "என்னப்பா யோசனை? என்று கேட்டால், " நேற்று ஒரு கனாக்கண்டேன்," என்றான். அவன் என்ன கனா என்றுன் சொல்லும் முன்பே எனக்கு தெரிந்துபோயிற்று, அது என்ன கனவென்று நானெ சொல்லியிருக்க முடியும். ஆனால் அவன் தான் சொன்னான். நான் கேட்டேன்."

"அதே கனவா?"
"அதே, நான் ஸ்டானிடம் சொன்னேன்," நானும் அதே னாக் கண்டேன்," என்று. அவன் எதும் ஆச்சரியப்படவே இல்லை. சாந்தமாகி விட்டான் மெல்ல இயல்பாக.
ஆபீசில் நடந்து போனோம். எல்லா இடத்திலும் சனங்கள் மேசையை அல்லது உள்ளங்கையை அல்லது சன்னல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலரை விசாரித்தேன்."
"அவர்கள் எல்லோரும் கனாக் கண்டிருந்தார்கள்."
"எல்லாரும் அதே கனவு ஒரு வித்தியாசமும் இல்லை"
"இதை நீ நம்புகிறாயா?"
"ஆமாம். இதைவிட ஆணித்தரமாக நம்பினதில்லை நான்."
"உலகம் எப்போது முடியுமாம்?"
"இன்று இரவு நமெக்கெல்லாம் ராத்திரி மற்ற நாடுகளுக்கு நம் ராத்திரி போகும்போது அவர்களும் போய்விடுவார்கள். மொத்த உலகமும் போவதற்கு இருபத்து நாலுமணி நேரம் ஆகப் போகிறது."
இருவரும் சிறிது நேரம் காப்பியை தொடாமல் உட்காந்திருந்தார்கள். அப்புறம் இருவரும் மெல்ல கோப்பையை உயர்த்தி குடிக்க அரம்பித்தார்கள்.
"இது நமக்கு தேவை தானா...? நாம் என்ன தப்புச் செய்தோம்?"
"வேண்டும், வேண்டாம்... அப்படியில்லை எதுவும் சரியாக நடக்கவில்லை. அதனால்தான். அதுசரி, நீ ஏன் அதைப்பற்றி விவாதிக்கவே இல்லை?"
"எனக்கும் காரணம் இருக்கிறது." என்றாள்.
"ஆபீஸில் எல்லருக்கும் உள்ள அதே கரணம்."
அவள் மெதுவாக தலையசைத்தாள்." நானேதும் சொல்ல விரும்பலை. எனக்கும் ராத்திரி நடந்தது அது. காலையில் ப்ளாக்கில் எல்லாப் பெண்
களும் அதைப்பற்றி பேசிக்கொண்டார்கள். நான் அது ஏதோ தற்செயலான விஷயம் என நினைத்தேன்."
அவள் மாலைச்செய்திதாளை எடுத்தாள்.,"பேப்பரில் எதும் போடவில்லையே?"

"எல்லோருக்கும் தெரிந்தது. பேப்பரில் போட அவசியமே இல்லையே?"
அவன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவளை பார்த்துக்கொண்டு,"பயமா?"

"இல்லை, பயப்படுவேன் என்றுதான் எப்போதுமே நினைத்தேன். ஆனால் பயமாக இல்லை."
"தற்பாதுகாப்பு அது இது என்று எல்லாரும் நிறைய பேசிக்கொண்டார்களே, எங்கே அந்த குணம்?
"எனக்கு தெரியாது. ஆனால் நாம் எதிர் பார்த்தது நிகழ்ந்தால் அதிகம் பரபரப்பு ஏற்படுவதில்லை. நாம், வாழ்ந்த வாழ்வுக்கு இது தான் தக்க முடிவு."

"அவ்வளவு மோசமாகவா வாழ்ந்தோம்?"

"இல்லை அவ்வளவு உன்னதமாகவும் வாழவில்லை, அதுதான் தப்பு, உலகத்தில் பெரும்பான்மையினர் ரொம்ப மோசமான காரியங்கள் செய்துகொண்டிருக்கும் போது நாம் நாமாகவே இருந்தோம்."
குழந்தைகள் வராந்தாவில் சிரித்துக்கொண்டிந்தன.
"இந்த மாதிரி சமயத்தில் ஜனங்கள் தெருக்களில் கதறிக்கொண்டு ஓடுவார்கள் என நினைத்தேன்."
"ம்ம்ம்...உண்மையை பற்றி எதற்கு கதற வேண்டும்?"
"உனக்கு தெரியுமா நான் உன்னையும் குழந்தைகளையும் தவிர வேறு எதையும் மிஸ் பண்ண மாட்டேன். எனக்கு நகரமோ ,வேலையோ எதுவும் பிடித்ததில்லை, உங்கள் மூன்று பேரையும் தவிர, என்ன, பருவங்கள் மாறும் சந்தோசத்தையும், கோடை நாட்களில் ஐஸ் வாட்டர் குடிப்பதையும் தான் மிஸ் பண்ணுவேன் என்று தோன்றுகிறது. அப்புறம் தூக்கம் அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஸயம்"
"எப்படி நம்மால் இப்படி உட்காந்து பேசிக்கொண்டிருக்க முடிகிறது?"
'"வேறு எதுவும் செய்ய முடியாததால்."
"உண்மைதான். வேறு ஏதாவது செய்ய முடிந்தால் செய்து கொண்டிருப்போம். இது தான் சரித்திரத்திலேயே முதல் தடவை என்று நினைக்கிறேன். உலகில் உள்ள அத்தனை பேருக்கும் இரவில் என்ன செய்யப்போகிறோம் என்று தெரிந்திருப்பது."

"அதுவரை எல்லோரும் ஏன்ன செய்வார்கள்? சாயங்காலம், அடுத்த சில மனி நேரங்கள்..?"
"சினிமா போவார்கள். ரேடியோ கேட்பார்கள், டி.வி பார்ப்பார்கள். சீட்டாடுவார்கள். குழந்தைகளை படுக்கைக்கு அனுப்பி விட்டு தாங்களும் படுக்கைக்கு செல்வார்கள். எப்போதும் போலதான்."
"எப்போதும் போலத்தான்,. அதுவே ஒரு விதத்தில் பெருமைப்படக்கூடிய விஷயம்.."
இருவரும் சற்று நேரம் உட்காந்திருந்துவிட்டு இவன் மற்றொரு காப்பி ஊற்றிக்கொண்டான்.
"ஏன் இன்றிரவு?"
"ஏனென்றால்?"
"ஏன் மற்றொரு நூற்றாண்டில் மற்றொரு இரவில் இல்லை?" ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் இது நடந்திருக்கலாமே? இல்லை பத்து நூற்றாண்டு?"
"இது நாள் வரை இன்றைய தினம் இருந்ததில்லை. சரித்திரத்தில் எந்த தினத்திலும் 'இன்று' இருந்ததில்லை. இப்போது அது வந்து விட்டது. அதனால் இந்த தேதிக்கு ஒரு பிரத்தியேகம் இருக்கவேண்டும். இந்த தினத்தில் தான் உலகம் இன்னின்ன மதிரி அமைந்து இருக்கிறது. அதனால் தான் இது முடிவு தனமாக இருக்கலாம். சமுத்திரங்களில் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பாம்பர் விமானங்கள் கரை சேரவே முடியாது."
"அதுவும் காரணமாக இருக்கலாம்."
அவன் எழுந்தான். "என்ன செய்ய வேண்டும்? பாத்திரங்களை அலம்பட்டுமா?"
அவர்கள் சாப்பட்டுத் தட்டுக்களை அலம்பிப் பளபளப்பாக த்னிப்பட்ட ஒழுங்குடன், அடுக்கி வைத்தார்கள். எட்டரை மணிக்கு குழந்தைகளை படுக்க வைத்து, குட் நைட் என்று முத்தமிட்டுவிட்டு படுக்கையறையில் சின்ன விளக்குகளைப் போட்டுவிட்டு அறைக்கதவை சற்றே திறந்து வைத்து விட்டு வெளியே வரும்போது-
அவன் கதவைப் பார்த்து, "கதவு திறந்து சிறிது வெளிச்சம் உள்ளே வருமா, இல்லை கதவு பட்டென்று மூடிக்கொள்ளும தெரியலை," என்றான்.
"குழந்தைகளுக்கு தெரிந்திருக்குமோ ?"
"இல்லை நிச்சயம் இல்லை."

இருவரும் உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள்களை படித்தார்கள். ரேடியோ கேட்டார்கள்.
நெருப்பருகே உட்கார்ந்துகொண்டு அதன் தணல் மெல்ல மெல்ல சாம்பல் போர்வை பூப்பதை கண்டார்கள்.
"அப்ப?" என்றான் அவன் கடைசியில்.
அவன் மனைவியை நீண்ட நேரம் முத்தமிட்டான்.
"இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நல்லவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். இல்லை?"
"அழனுமா?" என்று கேட்டான்.
"அப்படித் தோன்றவில்லை."

வீட்டின் ஊடே நடந்து எல்லா வழக்குகளையும் அணைத்து விட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்து இரவின் குளிர்ந்த இருட்டில் நின்றுகொண்டு தம் உடைகளை களைந்து போர்வைகளை விலக்கி, "பெட்ஷீடெல்லாம் எத்தனை சுத்தமக இருக்கிறது!"
"களைப்பாக இருக்கிறது!"
" நாம் எல்லோருமே களைத்து விட்டோம்."
இருவரும் மல்லார்ந்து படுத்துக்கொண்டார்கள்.
"ஒரு நிமிஷம் " என்றாள்.
அவள் எழுந்து சமையலறைக்குச் செல்வதை கவனித்தான்.

சிறிது நேரம் கழித்து அவள் திரும்ப வந்ததும்,
"சமையல் அறையில் குழாயை திறந்து வைத்து விட்டேன்."
இதில் ஏதோ ஒன்று மிகவும் வேடிக்கையானதாக இருக்க , அவன் சிரிக்க வேண்டியிருந்தது.
அவளும் அவனுடன் சிரித்தாள். தான் செய்த காரியத்தில் என்ன வேடிக்கை என்று அறிந்து அவளும் சிரித்தாள். .....
இறுதியில் இருவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டுப் படுக்கையில் சாய்ந்தார்கள்.
கைகள் கோர்த்து தலையுடன் தலை தொட்டுகொண்டு.
"குட் நைட்" என்றான்.
சிறிது நேரம் கழித்து, "குட் நைட்" என்றான்.

முடிந்தது.
தமிழில் - சுஜாதா. வெளியீடு "21ம் விளிம்பு" விசா பப்ளிகேஷன்ஸ்.


2 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் பதிவ சுருக்கமா போடுய்யா! இம்புட்டு நீளமா இருக்கு!

சரியில்ல....... said...

அடடா.... நான் இப்போ தாம்லே ப்ளாக் டிஸைன் பண்ணிகிட்டிருகேன்.
அதுக்குள்ளாற எப்பிடியா பப்ளிஷ் ஆச்சு?