கடந்த நான்கு நாட்களாக கும்பகோணத்தில் கும்மி அடித்து விட்டு இப்போதுதான் பாக் டு பார்ம். (சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்..)
கையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.
தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன். எஞ்சியிருந்த கோயில்களை கடந்த நான்கு நாட்களில் முடித்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.. (என்ன ..., 'மனம் கொத்தி பறவை' ரேஞ்சுக்கு இருக்குனு பாக்குறிங்களா? ஊம்.. சுயபுராணம்..)
நான் இப்போ ரெண்டு விஷயம் சொல்லப்போறேன்... ரெண்டுமே கோயில்கள் பத்தின விஷயம் தான்.,...

ஆச்சரியமான விஷயம்.. அழகு தமிழில் அர்ச்சனை .
புரியாத மொழியில் ஐயர் பூஜை செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கும்... ஆனால் இங்கு.. அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் அநேகம் பேர் இந்த அர்ச்சனையை காண தமிழ்நாடுதான் வரவேண்டும் என நினைக்கிறேன்..)
அதுமட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு தமிழிலேயே அந்த கோயிலின் ஸ்தல புராணம், பெயர்க்காரணம் சொல்லி பூஜை செய்தது மகா ஆச்சரியம்...
கலக்கல் கற்சிற்பம் !!!

மார்க்கண்டேயர் கோயிலில் (அட அவர்தானுங்க.. என்றும் பதினாறு'னு மனுஷன்! ) அவர் தங்கியிருந்த இடம்... அந்த கோயில் எல்லாமே கொள்ளை அழகு.
இந்த சம்மருக்கு உங்க பேமிலியோடு டூர் அடிக்க இத் திருத்தலங்களை தேர்வு செய்தீர்கள் என்றால் மனநிறைவு, நிம்மதி கிடைப்பது மட்டுமில்லாமல் இதைக்கொண்டே இரண்டு பதிவுகளை தேத்தி விடலாம். (ஐடியா !!)
டிஸ்கி: கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் ஸ்ரீ கூகுல் ஆண்டவர் உதவியோடு இங்கே சில க்ளிக்'கள்.
டிஸ்கி: ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.
இதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....
