நண்பர்ஸ்..

Friday, March 11, 2011

கல்பாக்கமும் சில கண்டங்களும்!எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன பத்திதான் படிக்கப்போறிங்க..... அவனப்பத்தி தெரிஞ்சுக்கிட்டதும்
நீங்க தாராளாமா தூக்கு மாட்டிக்கலாம்.....
என்னுடன் ஷோரூம்'ல வேலை செய்கிறவன் தான் அவன்.... பெயர் பலராமன். (அவன பாலா'னு கூப்பிடுறதில்ல.... பல்ராம் நாய்டு'னு தான் கூப்பிடுவோம்.)

எப்போ பாத்தாலும் எழவு வீட்டுக்கு போன
வன் மாதிரி சோகமாதான்
இருப்பான்.
இந்த புது வருஷம் எல்லாருக்கும் எப்பிடி இருக்குன்னு தெரியல... பட், நம்ம பல்ராமுக்கு...???
இந்த புது வருசம் ஆரம்பிச்சதில இருந்து ......
நியூ இயர் அன்னைக்கி நம்ம பல்ராம் ஸ்வீட் வாங்குறதுக்கு ஒரு டபரா பைக்'ல பல்லாவரம் போயிருக்கான்,
இவனுக்குன்னே வெயிட் பண்ணிட்டிருந்த மாதிரி கப்'னு புடிச்சிட்டாங்க ட்ராபிக் போலீஸ். பயபுள்ளைக்கு லைஸன்ஸ் இருந்து என்ன பிரயோசனம்.... ?? பைக்கு'குதான் ஒன்னுமே இல்லையே? (ப்ரேக் பம்மல்'ல போட்டிருக்கான்... அது வந்து பல்லாவரத்துல நிண்ணுகிச்சு....போலீஸ்காரன் கிட்டே!)
பைன் போட்டிருக்காங்க...ரிஸீப்ட் கொடுத்திருக்காங்க.... வாங்கினவன் .மூடிட்டு வரவேண்டியது தானே? அங்கயே தெனாவெட்டா வாங்கின ரிஸிப்ட்'ல கிழிச்சு போட்டுட்டான்.
போலிஸ் கடுப்பாகி தூக்கிண்டு போயி ஸ்டேஸன்'ல வச்சிட்டாங்க.....
பின்னாடி நானும் என்னோட ஓனரும் ஸ்டேஸன் போகும் போது, அவன் ஜட்டியோடு "வருசம் பொறந்து முதல் நாளே கண்டமா?'ங்கிற மாதிரி உக்காந்து பாத்துக்கொண்டிருந்தான்....


தேதி அஞ்சுல அவன் சம்பளம் வாங்கிகொண்டு...'மச்சி நான் ஊருக்கு போறேன்,(கல்பாக்கம்)....வர்ரதுக்கு ஒரு வாரம் ஆகும்.. கடைய பாத்துக்க!!'னு கெளம்பினவன்...
ஊருக்குப்போன அடுத்த நாளே திரும்பிட்டான்.
'என்னடா ஆச்சு?'னு ஆச்சரியமா கேட்க...அதுக்கு அவன் திகிலா ஒரு பதில் சொன்னான்....
"மாப்ள... நான் லவ் பண்ணிட்டிருந்த பொண்ணுக்கு (சென்னை) திடீர்னு மாப்ள பாக்குறாங்க.... அதான் அவள நானே கல்யாணம் பண்ணிக்குறதுக்குகாக வந்துட்டேன்."
"கல்யாணம் பண்ண போறியா? என்னடா சொல்லுற?"
"வேற வழி தெரியல மாப்ள...."
அப்புறம் பொண்ண கடத்தி...கல்யாணம் பண்ணி ( சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷன் ல)
ஒரு மாசம் ஆள் ஆப்ஸ்காண்ட்.


திடீர்னு ஒரு நாள் வந்து நின்னான்.
"என்ன மாப்ள, எப்பிடி இருக்க?"
"அவசரமா காசு தேவை. அதுதான் அண்ணன் கிட்ட (ஓனர்) வாங்கலாம்னு வந்தேன்!!"
அட்வான்ஸ் வாங்கிகொண்டு கல்பாக்கம் போனவனுக்கு ரெண்டு நாள் கழிச்சு நான் போன் செய்தேன்.
""போறவழியிலயே காசு தொலைஞ்சி போச்சின்னும், வைஃப் கு கரண்ட் ஷாக் அடிச்சிருசின்னும், செலவுக்கு சுத்தமா காசில்லனும் சொன்னான்.""


பின்னர், ஒரு வாரம் கழிச்சு வேலைக்கு வந்தான்,
சென்னை ல வீடு பாக்குறேன் பேர்வழினு திரிஞ்சிட்டிருந்தான்...ஒன்றிரெண்டு தடவை ஊருக்கு போய் வந்தான்... அடிக்கடி போனில் போசினான்... இந்த மாசம் சம்பளம் கேட்டதுக்கு மேனேஜர், "உனக்கு பதினஞ்சாயிரம் ஓவர் ட்ராப்!"னு சொன்னாரு....
நேத்து கைபேசியில் அழைப்பு வந்ததும், மூஞ்சியெல்லாம் சுருங்கிபோச்சு!
"என்னாச்சு?"
"என்னோட வைஃப் கண்சீவ் ஆயிருக்கா....!"
"கங்கிராட்ஸ் மாப்ள..."னு கை கொடுத்ததிற்கு, கையை உதறியவன், ஓனரிடம் இன்னும் அஞ்சாயிரம் வாங்கிக்கொண்டு... மறுபடியும் ஊருக்கு கெளம்பினான்.....

2 comments:

டக்கால்டி said...

ஏழரை அவருக்கு ஏரோப்ளேன்ல வந்திருக்கு...சீக்கிரம் அவர் அனைத்து சங்கடங்களிலும் இருந்து மீள பிராத்திக்கிறேன்..இதை விட என்னால வேறே என்னங்க செய்ய முடியும்...ஹி ஹி

சரியில்ல....... said...

டக்கால்டி said...

ஏழரை அவருக்கு ஏரோப்ளேன்ல வந்திருக்கு...சீக்கிரம் அவர் அனைத்து சங்கடங்களிலும் இருந்து மீள பிராத்திக்கிறேன்..இதை விட என்னால வேறே என்னங்க செய்ய முடியும்...ஹி ஹி///

சார்... அவனுக்கு ஏழரை, டபிள் காட் பெட்டு போட்டு பக்கத்துலையே படுத்திருக்கு .. என்னத்த பண்ண?