எஸ்.ஏ. ராஜ்குமார் னு பேரவச்சுக்கிட்டா கட்டுரைதான் எழுதணும்'னு இல்ல... அவர் இசையமைப்பாளராவே இருந்துக்கலாம்.. #கண்டுபிடிப்பு.
பெரும்பாலான படங்களை பல நேரங்களில் தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி..
என் காதலை அவளிடம் தெரிவித்து நான்கு நாட்கள் ஆகிறது...
பதில் சொல்வதற்கு அவள் கேட்டிருந்த நான்கு நாட்கள் இன்றோடு முடிகிறது... இன்று மாலை என்னை சந்திப்பதாக கூறியிருந்தாள்.. எனக்கு இன்று வாழ்க்கை பரீட்சையின் முடிவு வெளியாகும் நாள்.
"என் காதலி ஒன்றும் தேவதை இல்லை சுமாரான அழகு தான்..." என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது... கேட்டால் எதார்த்தமான காதலாம்..
போங்கயா.. ரசனை கெட்டவங்களா... நான் அப்படி சொல்லமாட்டேன்..
என் காதலி தேவதை. அழகு தேவதை.. அன்பு தேவதை..
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள்,
என் வீட்டு கதவு தட்டப்படுவது கேட்டு , திறந்து பார்த்தேன்..இரவு எட்டு மணி.
முற்றத்தில், பௌர்ணமி வெளிச்சத்தில் நிலானி நின்றுகொண்டிருந்தாள்..
முதல் தடவை இரவில் வந்திருக்கிறாள். எதிர்பார்க்கவில்லை. வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தாள். அதுசரி தேவதை என்றால் வெள்ளையில் தானே இருக்கவேண்டும்..
நிலா வெளிச்சத்தில் நிலானி வெளிச்சம்.. முதல் தடவை காதல் எட்டிப்பார்த்தது..
. அதுவரை அவள் மேல் காதல் வந்திருக்கவில்லை..அந்த எட்டு மணி என்னை என்ன செய்தது என்று தெரியவில்லை.. வயிற்றில் தேன் கூட்டை கலைத்து விட்டது போன்ற உணர்வு .. அவள் நேராக என்னுடைய தங்கையிடம் வந்து, காதில் எதோ சொல்லிவிட்டு, என் அம்மாவிடமும் எதோ காதில் கூறினாள்., என்னிடமும் வந்து கூறுவாள் என்று எதிர்பார்த்தால் , அது தான் இல்லை.. அப்படியே என்னை பார்த்து ஒரு சிறிய புன்னகையை வீசிவிட்டு இடத்தை விட்டு நகரலானால். ஐயோ போறாளே என்று மனசு அடித்துக்கொண்டது.. அம்மாவிடம் அவள் என்ன கூறினாள் என்று கேட்டுக்கொள்ளவில்லை.. அவள் என்னிடம் கூறாமல் சென்றதால்தான் காதல் வந்தது.. அது ரகசியமாகவே இருக்கட்டும்.
பின்பு அடிக்கடி தலைவலி, காய்ச்சல் எல்லாம் வர ஆரம்பித்தது....(வரவைத்துக்கொள்வேன்,..) நானே அவளின் கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்கி வருவேன்.. "உங்கள் கடையில் ஏன் சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் விற்பதில்லை?" என்று ஒரு நாள் அவளை பார்த்து கேட்டதற்கு, அவள் ஒரு கணம் திகைத்து, சிரித்து .. ... ..
......
........................அதெல்லாம் இருக்கட்டும்., இன்று எனக்கு அவளின் முடிவை கேட்க வேண்டும், வாருங்கள் அங்கே போகலாம்.
சென்னையில் பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த வணிக வளாகத்தில், ஒரு குளிர்கழி விற்பனை கடையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
மாலை. மணி நான்கு ஆகிவிட்டால் மாலையா மதியமா? (உம்ம்ம் எல்லாம் காதல் படுத்தும் பாடு)
கடிகாரத்தை நாற்பது தடவை பார்த்துவிட்டேன். அந்த மணி முள்ளிற்கு என்மேல் என்ன வெறுப்போ தெரியவில்லை, வேகமாக ஓடித்தொலையமாட்டேன் என்கிறது,.. என்கையில் தாராளமாக பணமும், போதாதிற்கு கடனட்டையும் உள்ளது. அவளுக்கு பிடித்த எல்லாப்பொருட்களையும் வாங்கி கை நிறைய கொடுக்கவேண்டும்..
என்னுடைய தொலைபேசியின் தொடுதிரையில் என்ன செய்கிறது என் விரல்கள்? என் கண்கள் எங்கெல்லாமோ சென்று வருகிறது.. பதட்டம். பரபரப்பு... காணவில்லையே.. மணி இன்னுமா ஐந்தாகவில்லை? சிறிய முள்ளு நான்கிலும், பெரிய முள்ளு ஆறிலும் இருந்தால்.... மணி ஐந்துதானே?...... இல்லையா?
இதோ காற்று வீசுகிறது.. எனக்கு இரத்தம் உறைகிறது... என் தலைமுடி காற்றில் கலைகிறது.. உள்ளங்கையில் வியர்க்கிறது... திரும்பிக்கொள்கிறேன்... மீண்டும் திரும்பி வாசலை பார்க்கிறேன். சிறுநீர் பை நிரம்பிவிட்டதாக மூளை குறுந்தகவல் அனுப்புகிறது.. .. வாசலில்
என் நிலானி... என் நிலா நீ!! ( இது எங்கிருந்து வந்தது..??)
"ஹாய்..." என்றேன் சின்னதாய் கைகளை காட்டி.
நமக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையில்.. ஏகப்பட்ட மலர்கொத்துகள்.. எல்லாமே நான் வாங்கி வைத்தவை.
எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்..
அவளின் பார்வை, என்கண்களை குடைந்து சென்று மூளையில் உள்ள சில நினைவு பதிவுகளை செயலிழக்கச் செய்தது....
"எப்பிடி இருக்க?" அவள் பேசுகிறாள் தானே...? சந்தேகம் அவள் பாடுகிறாளா என்று.
"நான் நன்றாக இருக்கிறேன்.." மேலும் சில சம்பாசனைகளின் பின்பு, எனக்கு அந்த பதில் கிடைத்தது.
என்ன பதில்?
01 ) "நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?
02 ) "எனக்கு உன்னை பிடிக்கவில்லை"
03 ) "நான் இரவெல்லாம் யோசித்ததில், நானும் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்.. "
04 )"எனக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னை மறந்திடு."
05 ) " நான் உன்னை காதலிக்கவில்லை !!"
எந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அல்லது எனக்கு என்ன பதில் கிடைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள்?
பின்னூட்டத்தில் சந்திப்போம்.
டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.
பெரும்பாலான படங்களை பல நேரங்களில் தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி..
என்மேல் விழுந்த மழைத்துளியே.....
என் காதலை அவளிடம் தெரிவித்து நான்கு நாட்கள் ஆகிறது...
பதில் சொல்வதற்கு அவள் கேட்டிருந்த நான்கு நாட்கள் இன்றோடு முடிகிறது... இன்று மாலை என்னை சந்திப்பதாக கூறியிருந்தாள்.. எனக்கு இன்று வாழ்க்கை பரீட்சையின் முடிவு வெளியாகும் நாள்.
"என் காதலி ஒன்றும் தேவதை இல்லை சுமாரான அழகு தான்..." என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது... கேட்டால் எதார்த்தமான காதலாம்..
போங்கயா.. ரசனை கெட்டவங்களா... நான் அப்படி சொல்லமாட்டேன்..
என் காதலி தேவதை. அழகு தேவதை.. அன்பு தேவதை..
என் முன்று வருட தோழி.. என் கூட பள்ளியில் படித்தவள்.. பெயர் நிலானி.
(தமிழ் பெயர் தான்.) பக்கத்து தெருவில் வசித்தாலும் ஒன்றாக ஒரே பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வோம் .. ஒன்றாகவே மாலையில் வீடு திரும்பி.., மாலை வகுப்புக்களுக்கு செல்வோம்.. அம்மா கடைக்கு மளிகை வாங்க அனுப்பினாலும் அவளின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைக்கு தான் செல்வேன். சண்டை போட்டுக்கொண்ட நாட்கள் அறவே கிடையாது.. அவள் சண்டைபோட ஆரம்பித்தாலும் நான் விலகிக்கொள்வேன்.. எதிர்த்து பேசுவது இல்லை.. காரணம் நான் சண்டை போடுவதை விரும்புவதில்லை .. அவள் கோவமாக திட்டினாலும் நான் ஹிஹிஹி.. என்பதோடு நிறுத்திக்கொள்வேன் .. திட்டும் போதுகூட அவள் கொள்ளை அழகு..
பள்ளிகாலம் முடிந்ததும் அவள் ஒரு மருந்துக்கடையில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்தாள். எனக்கோ வேலை:, புதிய தொலைபேசி இணைப்புகள் விற்கவேண்டும்..கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள்,
என் வீட்டு கதவு தட்டப்படுவது கேட்டு , திறந்து பார்த்தேன்..இரவு எட்டு மணி.

முதல் தடவை இரவில் வந்திருக்கிறாள். எதிர்பார்க்கவில்லை. வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தாள். அதுசரி தேவதை என்றால் வெள்ளையில் தானே இருக்கவேண்டும்..
நிலா வெளிச்சத்தில் நிலானி வெளிச்சம்.. முதல் தடவை காதல் எட்டிப்பார்த்தது..
. அதுவரை அவள் மேல் காதல் வந்திருக்கவில்லை..அந்த எட்டு மணி என்னை என்ன செய்தது என்று தெரியவில்லை.. வயிற்றில் தேன் கூட்டை கலைத்து விட்டது போன்ற உணர்வு .. அவள் நேராக என்னுடைய தங்கையிடம் வந்து, காதில் எதோ சொல்லிவிட்டு, என் அம்மாவிடமும் எதோ காதில் கூறினாள்., என்னிடமும் வந்து கூறுவாள் என்று எதிர்பார்த்தால் , அது தான் இல்லை.. அப்படியே என்னை பார்த்து ஒரு சிறிய புன்னகையை வீசிவிட்டு இடத்தை விட்டு நகரலானால். ஐயோ போறாளே என்று மனசு அடித்துக்கொண்டது.. அம்மாவிடம் அவள் என்ன கூறினாள் என்று கேட்டுக்கொள்ளவில்லை.. அவள் என்னிடம் கூறாமல் சென்றதால்தான் காதல் வந்தது.. அது ரகசியமாகவே இருக்கட்டும்.
பின்பு அடிக்கடி தலைவலி, காய்ச்சல் எல்லாம் வர ஆரம்பித்தது....(வரவைத்துக்கொள்வேன்,..) நானே அவளின் கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்கி வருவேன்.. "உங்கள் கடையில் ஏன் சர்க்கரை, உப்பு, மிளகாய் எல்லாம் விற்பதில்லை?" என்று ஒரு நாள் அவளை பார்த்து கேட்டதற்கு, அவள் ஒரு கணம் திகைத்து, சிரித்து .. ... ..
......
........................அதெல்லாம் இருக்கட்டும்., இன்று எனக்கு அவளின் முடிவை கேட்க வேண்டும், வாருங்கள் அங்கே போகலாம்.
சென்னையில் பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த வணிக வளாகத்தில், ஒரு குளிர்கழி விற்பனை கடையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
மாலை. மணி நான்கு ஆகிவிட்டால் மாலையா மதியமா? (உம்ம்ம் எல்லாம் காதல் படுத்தும் பாடு)

என்னுடைய தொலைபேசியின் தொடுதிரையில் என்ன செய்கிறது என் விரல்கள்? என் கண்கள் எங்கெல்லாமோ சென்று வருகிறது.. பதட்டம். பரபரப்பு... காணவில்லையே.. மணி இன்னுமா ஐந்தாகவில்லை? சிறிய முள்ளு நான்கிலும், பெரிய முள்ளு ஆறிலும் இருந்தால்.... மணி ஐந்துதானே?...... இல்லையா?
இதோ காற்று வீசுகிறது.. எனக்கு இரத்தம் உறைகிறது... என் தலைமுடி காற்றில் கலைகிறது.. உள்ளங்கையில் வியர்க்கிறது... திரும்பிக்கொள்கிறேன்... மீண்டும் திரும்பி வாசலை பார்க்கிறேன். சிறுநீர் பை நிரம்பிவிட்டதாக மூளை குறுந்தகவல் அனுப்புகிறது.. .. வாசலில்
தேவதை.
என் நிலானி... என் நிலா நீ!! ( இது எங்கிருந்து வந்தது..??)
"ஹாய்..." என்றேன் சின்னதாய் கைகளை காட்டி.
நமக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையில்.. ஏகப்பட்ட மலர்கொத்துகள்.. எல்லாமே நான் வாங்கி வைத்தவை.
எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்..
அவளின் பார்வை, என்கண்களை குடைந்து சென்று மூளையில் உள்ள சில நினைவு பதிவுகளை செயலிழக்கச் செய்தது....
"எப்பிடி இருக்க?" அவள் பேசுகிறாள் தானே...? சந்தேகம் அவள் பாடுகிறாளா என்று.
"நான் நன்றாக இருக்கிறேன்.." மேலும் சில சம்பாசனைகளின் பின்பு, எனக்கு அந்த பதில் கிடைத்தது.
என்ன பதில்?
01 ) "நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?
02 ) "எனக்கு உன்னை பிடிக்கவில்லை"
03 ) "நான் இரவெல்லாம் யோசித்ததில், நானும் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்.. "
04 )"எனக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னை மறந்திடு."
எந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அல்லது எனக்கு என்ன பதில் கிடைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள்?
பின்னூட்டத்தில் சந்திப்போம்.
டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.
26 comments:
"நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?
இராஜராஜேஸ்வரி said...
"நாம ஏன் நண்பர்களாவே இருக்கக்கூடாது?//
உங்களுக்கு ஏன் மேடம் இந்த கொலைவெறி..
"ஹாய்..."
எஸ்.ஏ. ராஜ்குமார் னு பேரவச்சுக்கிட்டா கட்டுரைதான் எழுதணும்'னு இல்ல... அவர் இசையமைப்பாளராவே இருந்துக்கலாம்.. #கண்டுபிடிப்பு.//////////
பெரிய பகுத்தறிவு பகலவன்! விளக்கம் குடுக்காரு!!
பெரும்பாலான படங்களை பல நேரங்களில் தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி.. ///////////
அதான் ஊருக்கே தெரியுமே!
என் காதலை அவளிடம் தெரிவித்து நான்கு நாட்கள் ஆகிறது...
பதில் சொல்வதற்கு அவள் கேட்டிருந்த நான்கு நாட்கள் இன்றோடு முடிகிறது... இன்று மாலை என்னை சந்திப்பதாக கூறியிருந்தாள்.. எனக்கு இன்று வாழ்க்கை பரீட்சையின் முடிவு வெளியாகும் நாள்.//////////////
நான் அப்பவே சொன்னேன்! மித்திரன் பேப்பர் வாசிக்காதேன்னு! கேட்டியா? இப்ப பாரு நீ என்ன பேசுறேன்னு உனக்கே புரியல!
"என் காதலி ஒன்றும் தேவதை இல்லை சுமாரான அழகு தான்..." என்று சொல்வது இப்போது வழக்கமாகி விட்டது... கேட்டால் எதார்த்தமான காதலாம்..
போங்கயா.. ரசனை கெட்டவங்களா... நான் அப்படி சொல்லமாட்டேன்..
என் காதலி தேவதை. அழகு தேவதை.. அன்பு தேவதை..////////
இன்னும் ஓகே சொல்லி பழகவே இல்லை! அதுக்குள்ளார அன்பு தேவதையாம்! ஏன் அவளுக்கு உம்மேல அன்புன்னு சொன்னாளா?
என் முன்று வருட தோழி.. என் கூட பள்ளியில் படித்தவள்.. பெயர் நிலானி.
(தமிழ் பெயர் தான்.) பக்கத்து தெருவில் வசித்தாலும் ஒன்றாக ஒரே பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வோம் .. ///////////
அவளுக்கு வீடு வாசல் கிடையாதா? தெருவுலதான் வசிப்பாளா? பிச்சைக்காரி போல!!
ஒன்றாகவே மாலையில் வீடு திரும்பி.., மாலை வகுப்புக்களுக்கு செல்வோம்.. /////////
மாலையில வீட்டுக்கு வந்தா எப்புடி மறுபடியும், மாலை வகுப்புக்கு போவீங்க? லாஜிக் உதைக்குதே!!
அவள் சண்டைபோட ஆரம்பித்தாலும் நான் விலகிக்கொள்வேன்.. எதிர்த்து பேசுவது இல்லை.. காரணம் நான் சண்டை போடுவதை விரும்புவதில்லை .. அவள் கோவமாக திட்டினாலும் நான் ஹிஹிஹி.. என்பதோடு நிறுத்திக்கொள்வேன் .. திட்டும் போதுகூட அவள் கொள்ளை அழகு..///////
அடச்சீ மானங் கெட்டவனே! நாம ஏதாச்சும் சொன்னா அடிச்சு பிச்சுக்கிட்டு சண்டைக்கு வார்ரீக! பொண்ணுங்க திட்டினா, பேசாமல் இருப்பீங்களோ?
பள்ளிகாலம் முடிந்ததும் அவள் ஒரு மருந்துக்கடையில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்தாள்........../////
அப்பா வசதியா போச்சு.............!
( யோவ், தலைவலி வந்தா மருந்து வாங்கலாமே! அத சொன்னேன் )
நிலா வெளிச்சத்தில் நிலானி வெளிச்சம்.. முதல் தடவை காதல் எட்டிப்பார்த்தது..////////////
அப்போ அந்தப் பொண்ணுமேல அன்புவைச்சு லவ் பண்ணல.......! அழகப பார்த்துதான் லவ் பண்ணி இருக்கே! யோவ்.... சரியில்ல, இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்!! சப்போஸ் அந்தப் பொண்ணு அன்னிக்கு பச்சைக் கலர் சட்டை போட்டுக்கிட்டு வந்திருந்தா, லவ்வு வந்திருக்காதுல்ல!!
அந்த ஒரு ஆங்கில வார்த்தை " ஹாய் "
பதிவு சூப்பரப்பு! அப்படியே உருகிட்டேன்:! நல்லா இருந்துச்சு அதாலதான் சும்மா கலாய்ச்சேன்!!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எஸ்.ஏ. ராஜ்குமார் னு பேரவச்சுக்கிட்டா கட்டுரைதான் எழுதணும்'னு இல்ல... அவர் இசையமைப்பாளராவே இருந்துக்கலாம்.. #கண்டுபிடிப்பு.//////////
பெரிய பகுத்தறிவு பகலவன்! விளக்கம் குடுக்காரு!!
யோவ்.. ஒரு விஷயத்த சொன்னா கம்'னு கேட்டுக்கணும்.. அத விட்டு புட்டு..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பெரும்பாலான படங்களை பல நேரங்களில் தவிர்த்துக்கொள்வேன்.. பெரும் பலான படங்களை அல்ல. #ஹிஹிஹிஹி.. ///////////
அதான் ஊருக்கே தெரியுமே!?
ஒ.. தெரிஞ்சிபோச்சா?
நான் அப்பவே சொன்னேன்! மித்திரன் பேப்பர் வாசிக்காதேன்னு! கேட்டியா? இப்ப பாரு நீ என்ன பேசுறேன்னு உனக்கே புரியல..
அட.. அது இல்ல பாஸு.. அது எங்க ஊர்ல ஒருத்தர் இருக்கார்.. (பேரு வேணாம்) அவரோட கவிதைங்கள படிச்சு.. (ஹ்ம்ம்.... கவிதையாம்..!!) இப்பிடி ஆகிட்டேன்..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
என் முன்று வருட தோழி.. என் கூட பள்ளியில் படித்தவள்.. பெயர் நிலானி.
(தமிழ் பெயர் தான்.) பக்கத்து தெருவில் வசித்தாலும் ஒன்றாக ஒரே பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வோம் .. ///////////
அவளுக்கு வீடு வாசல் கிடையாதா? தெருவுலதான் வசிப்பாளா? பிச்சைக்காரி போல!!//
பட்.. இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு...
அப்போ அந்தப் பொண்ணுமேல அன்புவைச்சு லவ் பண்ணல.......! அழகப பார்த்துதான் லவ் பண்ணி இருக்கே! யோவ்.... சரியில்ல, இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்!! சப்போஸ் அந்தப் பொண்ணு அன்னிக்கு பச்சைக் கலர் சட்டை போட்டுக்கிட்டு வந்திருந்தா, லவ்வு வந்திருக்காதுல்ல!///
யாரு சொன்னா? நாங்கெல்லாம் சிபியோட ஜூனியர்ஸ்.. அழக வர்ணிக்கனும்னா அப்பிடியே வரி வரியா எழுதிக்கொட்டுவோம்..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பள்ளிகாலம் முடிந்ததும் அவள் ஒரு மருந்துக்கடையில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்தாள்........../////
அப்பா வசதியா போச்சு.............!//
ஓம் புத்தி உன்னைய விட்டு போகுதா பாரு...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அந்த ஒரு ஆங்கில வார்த்தை " ஹாய் //
ஹிஹி.. ஒரு சின்ன ட்விஸ்ட்'காக வச்சேன்.. கண்டுபுடிச்சிட்டாரு தொர..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பதிவு சூப்பரப்பு! அப்படியே உருகிட்டேன்:! நல்லா இருந்துச்சு அதாலதான் சும்மா கலாய்ச்சேன்!//
நீ வெண்ண'னு தான் எல்லாருக்கும் தெரியுமே..
சரியல்ல நீங்க பண்றது சரியில்ல...
சரியல்ல நீங்க பண்றது சதியுமில்ல ..
காயமனிதன்.. said...
சரியல்ல நீங்க பண்றது சரியில்ல...
சரியல்ல நீங்க பண்றது சதியுமில்ல .//
நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம் பாஸ்?
காதல் கடித இலக்கியம் கலக்கல்..
>>>
டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.
டிஸ்கி.. ???
சி.பி.செந்தில்குமார் said...
காதல் கடித இலக்கியம் கலக்கல்..
>>>
டிஸ்கி:இந்த பதிவில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டும் இருக்கிறது.
கண்டுபிடியுங்கள்.
டிஸ்கி.. ???//
நல்ல கேள்வி.. ஆனால் டிஸ்கிக்கு முன்னாலேயே பதிவு முடிஞ்சிருச்சி...ஹிஹிஹிஹி.. தப்பிச்சேன்டா சாமி...
Post a Comment