நண்பர்ஸ்..

Thursday, April 7, 2011

நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் !!!

""அன்பு காதலனுக்கு..  தமிழ்ச்செல்வி  எழுதும் மடல்..
     இந்த கடிதம் உன்னை கோபப்படுத்தவோ..,  காயப்படுத்தவோ இல்லை..  உனக்கு இந்த கடிதத்தை படிக்க பிடிக்கவில்லை என்றால் கிழித்து போட்டுவிடு..

கடிதத்தை தொடர்வதற்கு நன்றிகள்...

அன்பே.. நீ என்னை விட்டு பிரிந்து சென்று சரியாக ஏழு  மாதங்கள் ஆகிவிட்டன.. எனக்கு உன் நினைவுகளோடு மட்டுமே வாழ்க்கை. உனக்கு அங்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையப்பெற்றதோ தெரியவில்லை..

என்னை உனக்கு முழுமையாக நினைவில் உள்ளதா? நாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது செய்த அத்தனை  விஷயங்களும்  உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?? 
 எனக்கு, நான் செய்த தவறுகள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளன.
நான் உன்னை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் என்று இப்போது தான் புரிகிறது..
நான் என்ன செய்வேன்?  முதன் முதலாக என்னை நீ பார்த்ததும் வந்து காதலை சொன்னாய்.. சட்டென்று  ஐ  லவ்  யூ சொல்வதற்கு  உன்னால் முடியும்.. நான் என்செய்வேன்.. அந்த தைரியம் இல்லாமல் போய்விட்டது...
 தொடர்ந்து என்னை  ஒவ்வொரு தடவையும் காண வரும்போது .., நான் உன்னை பார்ப்பதை விட்டு, அருகில் யார் இருக்கிறார்களோ என்ற பயம்  என்னை விரட்ட தொடங்கியது... என்னை கவரச்செய்வது உனக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லாமற் போனது.. நான் காதலில் விழுந்து விட்டேன் என்று உன்னால் உறுதியாக நம்பமுடிந்தது..

காதலித்த நாட்களில்.., என்னிடம் என்ன உனக்கு பிடித்தது என்று தெரியவில்லை.. ஆனால் நீ எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான்...
 நீ வாங்கித்தரும்  காட்பெர்ரி.., டெடி பேர்.., எதிர் பாராமல் கொடுக்கும் பரிசுகள்.. வாழ்த்து அட்டைகள்... என்னை முழுமையாக ஆட்டிபடைத்தன...

உன்னுடைய வண்டி எண் எனக்கு மறக்க முடியாதது.. உன் வண்டியில் சென்ற இடங்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.. உன்னால் தான் நான் சென்னையில் உள்ள  பல இடங்களை பார்க்க முடிந்தது..
இதற்கெல்லாம் மேலாக..
நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்..

அப்பொழுதெல்லாம்   நான் உனக்கு "மண்டு" தான்.. அதை ஏன் என்னிடம் கூறவில்லை..?? நீ வெள்ளைக்காரன் போல் நடந்து கொள்வாய்.. என்னிடம் சந்தேகத்தில்  ஒரு வார்த்தை கேட்டதில்லை..., என்  தேகத்தை கூட கேட்டதில்லை...  உன் பணமும், உன்  அதீத அழகும் என்னை மட்டும் தான் சந்தேகிக்க வைத்தது.. நீ எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறாய் என அறியாமலே இருந்துவிட்டேனே.. என் கையடக்க தொலைபேசியை ஒருநாள் வாங்கி பாத்திருக்கிறாயா?  அவன் யார், இவன் யார் என்று தொல்லை தந்திருக்கிறாயா? இல்லை.. இல்லவே இல்லை.. எங்கே போனாய்.. என்ன செய்துகொண்டிருந்தாய்.. என ஒரு கேள்வி சந்தேகத்தில் கேட்டதில்லை...
இதை நான்.., நீ என்னிடத்தில் அன்பாக இல்லை என்று விளஙகிக்கொண்டுவிட்டேன்....
 நான் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் என்று உனக்கு தெரியும். நான் தயிர்  சாதம் தான்,... நான்  சமையல், கோலம் , வீட்டு வேலை மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன்..., 

        உன் வீட்டைப்போல் , தோழனாக அப்பாவோ.. தோழியாக அம்மாவோ.. படுக்க ஒரு அறை, படிக்க ஒரு அறை, அனுமதி கேட்டு உன் அறைக்குள் வரும் அப்பாவோ எங்கள் வீட்டில் இல்லை.. 
 உன் குடும்பத்தை பார்த்ததும் மூச்சடைத்து போனது..  

பின்னாளில் என் தோழி உன்னை பற்றி தப்பு தப்பாக கூறி  என்னை உன்மேல் வெறுக்கச்செய்ததும்...  நான் உன்னை மாதிரி வெளிப்படையாக பேச தவறியதும்.. என் உள் காயங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாததும் நம் காதலுக்கு நானே தோண்டிய புதைகுழி.. உன்னை நான் ஒரு சதவிகிதம் கூட புரிந்து கொள்ளவில்லை என்பதை இப்போது புரிந்து வைத்திருக்கிறேன்..

இப்பொழுதெல்லாம் நான் ஒரு வெள்ளைக்காரி. நிமிர்ந்து நடக்கிறேன்.. வெளிப்படையாக பேசுகிறேன்.., ஆண்களின் உலகத்தை புரிந்து வைத்திருக்கிறேன்.., உலகத்தில் அன்பை விட ஒரு விஷயம் இல்லை என புரிந்துவிட்டது.. எல்லோரிடத்திலும் நட்பு ,  எனெக்கென ஒரு நண்பர்கள் கூட்டம்..  வாராவாரம் சினிமா.. ஷாப்பிங்..  என என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன்..
 கிரிக்கெட், அரசியல், உலக சினிமா.., மியுசிக்.., என நான் ரொம்ப பிஸி..
சரியா தப்பா என்று தெரியவில்லை... ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..

            நீ என்றால் எனக்கு கொள்ளை பிரியம் .. இப்பொழுது எனக்கு ஒரு ஆசை மட்டுமே.. "சில்லுன்னு   ஒரு காதல்" படத்தில் வருவது போல் உன்னோடு ஒருநாள் மட்டும் வாழ ஆசை.. ஆசை நிறைவேற்றி தருவாயா?  
 எனக்கு பதில் போட  விரும்பினால் தயவுசெய்து என்னுடைய  அலுவலக முகவரிக்கு போடு. 
 வீட்டில்,  கணவனுடன் விவாகரத்து,  இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.


                                                                                                              அன்பு (முன்னாள்) காதலி,
                                                                                                                   எஸ்.தமிழ்."" 

24 comments:

நிரூபன் said...

""அன்பு காதலனுக்கு.. தமிழ்ச்செல்வி எழுதும் மடல்..
இந்த கடிதம் உன்னை கோபப்படுத்தவோ.., காயப்படுத்தவோ இல்லை.. உனக்கு இந்த கடிதத்தை படிக்க பிடிக்கவில்லை என்றால் கிழித்து போட்டுவிடு..

கடிதத்தை தொடர்வதற்கு நன்றிகள்...//

வணக்கம் சகோதரம், இந்த ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கே.
ஐ லைக் திஸ் மெதேட்...
இது தான் முன் நவீனத்துவக் காதல் கடிதமா சகோ?

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

அருகில் யார் இருக்கிறார்களோ என்ற பயம் என்னை விரட்ட தொடங்கியது... என்னை கவரச்செய்வது உனக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லாமற் போனது.. நான் காதலில் விழுந்து விட்டேன் என்று உன்னால் உறுதியாக நம்பமுடிந்தது..//

நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டீர்கள் போல இருக்கே.......
அவ்.............

இந்த நேரத்தில் ஒரு செண்டி மென்ற் பாட்டுப் போட்டால் நல்லா இருக்குமே!
ஓ நெஞ்சே... ஓ நெஞ்சே... சோகம் எந்தன் முகவரியா?
என் காதற் பாட்டுக்கு கண்ணீர் துளி தான் முதல் வரியா?

நிரூபன் said...
This comment has been removed by the author.
டக்கால்டி said...

கடிதத்தின் மூலம் காதலியின் பார்வையில் அவளின் தவறுகள்....அழகு நண்பா

நிரூபன் said...

அன்பே.. நீ என்னை விட்டு பிரிந்து சென்று சரியாக ஏழு மாதங்கள் ஆகிவிட்டன.. எனக்கு உன் நினைவுகளோடு மட்டுமே வாழ்க்கை. உனக்கு அங்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையப்பெற்றதோ தெரியவில்லை..//

பாவம், அவா, உங்களுக்காக காத்திருக்கிறா, நாங்கள் என்றால் என்ன பண்ணுவம்?
எப்படா மச்சி இவளைக் கழட்டி விடலாம் என்று பிளான் பண்ணி, இவள் ஆப் ஆனதும் உடனே இன்னொன்றை பிக் பண்ணத் தொடங்கிடுவம்.

நிரூபன் said...

எனக்கு, நான் செய்த தவறுகள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளன..
நான் உன்னை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன் என்று இப்போது தான் புரிகிறது.//

ஆய் நம்ம அண்ணிக்கு ரொம்ப பெரிய மனசு..................:-))))

நிரூபன் said...

உன்னுடைய வண்டி எண் எனக்கு மறக்க முடியாதது.. உன் வண்டியில் சென்ற இடங்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.. உன்னால் தான் நான் சென்னையில் உள்ள பல இடங்களை பார்க்க முடிந்தது..
இதற்கெல்லாம் மேலாக..
நீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்...//

ஒரு ஓசி றிக்‌ஷாவே உங்க வண்டியிலை நடந்திருக்கு என்பதை சிம்பாலிக்கா ஒத்துக் கொள்ளுறா உங்க காதலி..

அவளின் பெரிய மனசிற்கு அவா நல்லா இருக்கனும்,

நிரூபன் said...

நீ என்றால் எனக்கு கொள்ளை பிரியம் .. இப்பொழுது எனக்கு ஒரு ஆசை மட்டுமே.. "சில்லுன்னு ஒரு காதல்" படத்தில் வருவது போல் உன்னோடு ஒருநாள் மட்டும் வாழ ஆசை.. ஆசை நிறைவேற்றி தருவாயா? //

மிகவும் ஒன்றித்துப் போய், அடுத்தது என்ன நடக்கும் என ஆவலாய் வாசித்த கடிதத்தின் திருப்பு முனை இங்கே தான் ஆரம்பிக்கிறது.

சபாஷ் சரியில்ல.... கலக்கிட்டீங்க..
பீலிங்ஸ்ஸை அப்படியே சாறாப் புளிஞ்சு கொடுக்கிறிங்க.

நிரூபன் said...

வீட்டில், கணவனுடன் விவாகரத்து, இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.//

பழைய பாசம் எட்டிப் பார்க்கிறது.

நிரூபன் said...

முன்னாள் காதலியின் கடிதம், மிக மிக தத்ரூபமாக, உணர்ச்சிப் பிரவாகத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது சகோ, உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழா!

அப்புறம், ஒரு நாள் வாழ்க்கை என்பது சகிக்க முடியவில்லை..
இதற்குரிய பதில் கடிதம் வெகு விரைவில் எழுதுவீங்க தானே!

ஒரு நாள் வாழ்க்கையா இல்லை ஆயுள் பூராகவும் அவளுடன் சேர்ந்து வாழும் ஆசையா என்பதனைப் படிப்பதற்காய் வெயிற்றிங்.

ஏன் இருவரும் பிரிந்தீர்கள் என்பதனையும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.

♔ம.தி.சுதா♔ said...

/////காதலித்த நாட்களில்.., என்னிடம் என்ன உனக்கு பிடித்தது என்று தெரியவில்லை.. ஆனால் நீ எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான்...////

காதலில் சேவையும் தேவையும் மறைந்து நின்று பொருள் பட்டு வலியுரைக்கிறது நன்றாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் கடிதம்..

சரியில்ல....... said...

வணக்கம் சகோதரம், இந்த ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கே.
ஐ லைக் திஸ் மெதேட்...
இது தான் முன் நவீனத்துவக் காதல் கடிதமா சகோ?//


வாங்க நிரு.., வருகைக்கும் பின்னூட்டத்திட்கும் நன்றி...

சரியில்ல....... said...

நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டீர்கள் போல இருக்கே.......
அவ்.............

இந்த நேரத்தில் ஒரு செண்டி மென்ற் பாட்டுப் போட்டால் நல்லா இருக்குமே!
ஓ நெஞ்சே... ஓ நெஞ்சே... சோகம் எந்தன் முகவரியா?
என் காதற் பாட்டுக்கு கண்ணீர் துளி தான் முதல் வரியா///


கலக்கல் பாட்டு.. எப்பிடி உங்களுக்கு மட்டும் டைமிங்ல தோனுது?

சரியில்ல....... said...

டக்கால்டி said...
கடிதத்தின் மூலம் காதலியின் பார்வையில் அவளின் தவறுகள்....அழகு நண்பா//


நன்றி நண்பா..

சரியில்ல....... said...

பாவம், அவா, உங்களுக்காக காத்திருக்கிறா, நாங்கள் என்றால் என்ன பண்ணுவம்?
எப்படா மச்சி இவளைக் கழட்டி விடலாம் என்று பிளான் பண்ணி, இவள் ஆப் ஆனதும் உடனே இன்னொன்றை பிக் பண்ணத் தொடங்கிடுவம்///


ஆய் நம்ம அண்ணிக்கு ரொம்ப பெரிய மனசு..................:-)))///


ஒரு ஓசி றிக்‌ஷாவே உங்க வண்டியிலை நடந்திருக்கு என்பதை சிம்பாலிக்கா ஒத்துக் கொள்ளுறா உங்க காதலி..

அவளின் பெரிய மனசிற்கு அவா நல்லா இருக்கனும்///அனைத்து கமெண்ட்களுக்கும் நன்றிகள்.....

சரியில்ல....... said...

மிகவும் ஒன்றித்துப் போய், அடுத்தது என்ன நடக்கும் என ஆவலாய் வாசித்த கடிதத்தின் திருப்பு முனை இங்கே தான் ஆரம்பிக்கிறது.

சபாஷ் சரியில்ல.... கலக்கிட்டீங்க..
பீலிங்ஸ்ஸை அப்படியே சாறாப் புளிஞ்சு கொடுக்கிறிங்க//


எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான்...

சரியில்ல....... said...

/////காதலித்த நாட்களில்.., என்னிடம் என்ன உனக்கு பிடித்தது என்று தெரியவில்லை.. ஆனால் நீ எனக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான்...////

காதலில் சேவையும் தேவையும் மறைந்து நின்று பொருள் பட்டு வலியுரைக்கிறது நன்றாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//நன்றி சுதா. வருகைக்கும் கமெண்ட்க்கும்..

சரியில்ல....... said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல் கடிதம்.//பெரியவாள்.... நீங்க சொல்லுறிங்க.... ஏத்துக்கிறேன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னா மேன் லெட்டரெல்லாம் எழுதியிருக்கே! படம் படா ஜோரா கீதுபா! நா அப்றமா வர்றேன்:)):

தீயஷக்தி... said...

பெரிய ஆள் மாப்ள நீயி...